ஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்

( UNITED VOLUNTEERS SERVICE SOCIETY )
29, வள்ளியூர் ‍ ஏர்வாடி நெடுஞ்சாலை, ஏர்வாடி ‍ 627103
திருநெல்வேலி மாவ‌ட்ட‌ம். போன்: 04637 241493

Old Woman
முதியோர்க‌ளுக்கு விருந்த‌ளிக்க‌ விரும்புவோர் தாங்க‌ளாக‌வே த‌யாரித்துக் கொண்டு வ‌ர‌லாம்; அல்ல‌து தேவையான‌ப் பொருட்க‌ளைக் கொண்டு வ‌ந்து இல்ல‌ ஊழிய‌ர்க‌ள் உத‌வியுட‌ன் ச‌மைக்க‌லாம். அல்ல‌து ப‌ண‌ம் வ‌ழ‌ங்கி (சைவ‌ம் / அசைவ‌ம்) ஏற்பாடு செய்ய‌லாம்.

Click here for photo gallery
அன்பின் இனிய‌ ந‌ண்ப‌ர்க‌ளே
ப‌ணிவான‌ வ‌ண‌க்க‌ம். முதியோர்க‌ளுக்குப் புது வாழ்வு அளிக்கும் உங்க‌ள் அனைவ‌ரையும் க‌னிவுட‌ன் வாழ்த்துகிறேன்.

ஆயிர‌ம் மைல் ப‌ய‌ண‌மும் முத‌ல் அடி எடுத்து வைப்ப‌தில் துவ‌ங்குகிற‌து (A journey of thousand miles begins with a single step). ந‌ம‌து வ‌ள‌ர்ச்சிப் ப‌டிக‌ளும் ஒரு நீண்ட‌ ப‌ய‌ண‌மாகும். 1999ல் துவ‌ங்கிய‌ ப‌ணிக‌ள் விய‌த்த‌கும் அள‌வில் வ‌ள‌ர்ந்துள்ள‌ன‌. எப்ப‌டி இது சாத்திய‌மாயிற்று? சுய‌ந‌ல‌ம் க‌ல‌ப்பில்லாத‌ பொது ந‌ல‌ உண‌ர்வுள்ள‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளின் கூட்டுற‌வும், ந‌ம‌க்கும் மேலான‌ இறைவ‌னருளும் தான் இவ்வெற்றிக்குக் கார‌ண‌ம் என‌லாம். 2006ல் ஐம்ப‌து முதிய‌வ‌ர்க‌ளைத் தாங்கும் ந‌ம் புது வாழ்வு இல்ல‌த்தின் அன்றாட‌ செல‌வின‌ங்க‌ளைக் க‌ருத்தில் கொள்ள‌ வேண்டுகிறேன்.

"தான‌ங்க‌ளில் சிற‌ந்த‌து அன்ன‌தான‌ம்" ஆகும். த‌ன் ப‌சி அறிந்த‌வ‌ன் பிற‌ன் ப‌சி போக்குவான். வ‌றியார்க்கு ஒன்று ஈவ‌தே ஈகை ஆகும். "ஆற்றுவார் ஆற்ற‌ல் ப‌சி ஆற்ற‌ல்" ஆகும். செல‌வுக்கு அதிக‌மாக‌ வைத்திருப்ப‌வ‌ன் செல்வ‌ந்த‌ன் ஆவான். தான் பெற்ற‌ செல்வ‌த்தைப் ப‌த்திர‌ப்ப‌டுத்தும் சேமிப்ப‌க‌ம் (க‌ஜானா) எது தெரியுமா? "ப‌சித்த‌வ‌ன் வ‌யிறு" ஆகும்.

விஷ்ணுவை வ‌ழிப‌டுவ‌ர் வைஷ்ண‌வ‌ர் ஆவர். விஷ்ணுவை "நாராய‌ண‌ன்" என்றும் அழைப்ப‌ர். பிச்சை எடுத்த‌தால் அவனை "த‌ரித்திர‌ நாராய‌ண‌ன்" என்ற‌ன‌ர். ஆக‌வே இங்கு 'த‌ரித்திர‌ன்' 'ந‌ராய‌ண‌ன்' ஆகிறான். ந‌ம‌து வீட்டின் த‌லைவாச‌லில் நின்று "அம்மா ப‌சிக்கு சோறு போடுங்க‌" என்று கேட்ப‌து நாராய‌ண‌ன் அல்ல‌வா?

"நான் ப‌சியாயிருந்தேன், ப‌சியாற்றினீர்க‌ள், தாக‌மாயிருந்தேன், தாக‌ம் தீர்த்தீர்க‌ள். ஆடையில்லாம‌ல் இருந்தேன்; மான‌ம் காத்தீர்க‌ள்" என்றெல்லாம் விவிலிய‌ம் விள‌க்க‌வில்லையா?

ஆக‌வே "ஒன்றே செய்க‌; ஒன்றும் ந‌ன்றே செய்க‌! ந‌ன்றும் இன்றே செய்க‌; இன்றும் இன்னே செய்க‌;"

எனில் நாளை என்ப‌து ந‌ம‌னுடைய‌ நாளாக‌வும் இருக்க‌லாம் அல்ல‌வா?

- அன்பன்.
த.செல்லப்பன்

ந‌ன்கொடை வழங்கும் விபரம்:
இல்ல‌த்திற்குப் ப‌ண‌மாக‌ ந‌ன்கொடை வ‌ழ‌ங்குவோர் செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ளிட‌மோ, இல்ல‌க்காப்பாளாரிட‌மோ நேரில் வ‌ழ‌ங்க‌லாம். DD/Cheque ஆக‌ வ‌ழ‌ங்குவோர் UNITED VOLUNTEERS SERVICE SOCIETY என்ற‌ பெய‌ரில் எடுத்து இல்ல‌ முக‌வ‌ரிக்கு அனுப்ப‌வும்.

தொட‌ர்பு முக‌வ‌ரி
I.D. சாமுவேல், செய‌ளால‌ர் uvss, 68‍-C: போலீஸ்கால‌னி கிழ‌க்குத் தெரு,
வ‌ள்ளியூர் - 627 117; Phone: 04637-220028; cell: 98942 56474