*ஆபீஸ் அப்பா - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் *

Posted by S Peer Mohamed (peer) on 12/18/2022 10:22:37 AM

*ஆபீஸ் அப்பா - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் *

ஆபீஸ் அப்பா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் Retd EB அப்துல் காதர் அப்பா அவர்கள் இறையச்சமும் உயர்ந்த பண்பு நலன்களும் கொண்ட அரிய மனிதர் . அந்த காலத்திலேயே அரசு பணிகளில் இருந்து கொண்டே மார்க்க விஷயங்களிலும் ஈடுபாட்டோடு இருந்தவர். பணி ஓய்வுக்கு பிறகு முழுக்க முழுக்க மார்க்க வணக்க வழிபாடுகளில் கழித்த இபாதத்தாளி.

எப்போதும் சுன்னத்தான கோலத்தில் காணப்படும் ஆபிஸ் அப்பா அவர்கள் , இஃதிகாஃப் இருப்பது அரிதான காலத்திலேயே ஒவ்வொரு ரமழானிலும் தனி ஒருவராக 6 வது தெரு பள்ளியில் இஃதிகாஃப் இருப்பார் . பெருநாள் தினங்களில் மீலாது மைதானத்தில் இருந்து தக்பீர் சொல்லி ஒரு குழு ஊர்வலமாக செல்லும் பாரம்பரிய வழக்கத்தை தலைமையேற்று நடத்தி செல்வார். சமீபகாலமாக இதில் கலந்து கொள்பவர்கள் குறைந்த போதும் , பாரம்பரியத்தை விடாமல் தக்பீரை உரக்க முழங்கி வழிநடத்தி செல்வார் . வட்டாரத்தில் எந்த வீட்டில் கல்யாணம் , மவ்த் மற்றும் ஹஜ்ஜுக்கு போதல் எனறு எந்த வைபவமாக இருந்தாலும் அங்கு தக்பீர் முழங்கி துஆ செய்யும் மாண்பாளர் .

எல்லாவற்றிற்கும் மேலாக , மீலாது மேடையில் எந்த மார்க்க நிகழ்ச்சி நடந்தாலும் , இயக்க , கொள்கை வேறுபாடுகளை கடந்து , பாரபட்சம் இல்லாமல் முன்வரிசையில் அமர்ந்து பங்குபெறும் பண்பாளர் . முதல் வருட ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சியை கண்டு பூரித்தவராக , “இந்த மக்தப்களின் எதிர்காலம் என்னவாகுமோ , வளரும் தலைமுறைக்கு இப்படி ஏதேனும் நிகழ்ச்சி யாரேனும் நடத்துவார்களா என ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹு த ஆலா ஈமான் அறக்கட்டளையை கொண்டு அதை பூர்த்தி செய்துள்ளான்” என பூரிப்புடன் சொல்லி துஆ செய்தார்கள் . அதை தொடர்ந்த வருடத்தில் அவரது சொந்த பேத்தியே நமது ஈமானிய மலர்கள் மதரஸாவில் ஓதி , ஈமானிய மொட்டுகளில் சூரா பகரா மனன போட்டியில் கலந்து பாக்கியம் பெற்றது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .

இந்த காலகட்டத்திலும் , உங்களுக்கு தெரிந்த ஒரு அப்பழுக்கற்ற மனிதரை காட்டுங்கள் என்றால் , துணிந்து கைகாட்ட தகுதியான ஒரு நபரை இழந்திருப்பது நமது ஊருக்கே ஒரு பேரிழப்பாகும் . “இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் “ என்ற சொல்லுக்கு மிக பொருத்தமானவரை ஊர் இழந்துள்ளது .

தன்னுடைய நேரத்தை பெரும்பகுதியை பள்ளிவாசலிலும் இறைவணக்கத்திலும் கழித்த இந்த பாக்கியவானை அல்லாஹ் அவனது தேர்ந்தெடுத்த அடியாராக பொருந்தி கொள்வானாக .அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து , உயர்ந்த சுவனபதியை அருள்வானாக . அவர்களின் குடும்பத்தாருக்கு ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக


Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..