Eruvadi Eagles DFCC Tournament - வெற்றிகரமான தோல்வி

Posted by S Peer Mohamed (peer) on 10/3/2022 3:27:58 PM

 

விளையாட்டுயென்றால் ஏர்வாடியை சுற்றி உள்ள பகுதியில் ஏர்வாடிக்கு என்று தனி பெயர் உண்டு. அது ஏர்வாடியை சுற்றி உள்ள பகுதிக்கு மட்டும் அல்ல... துபாயை சுற்றி உள்ள பகுதிக்கும் பொருந்தும் என்றும் காட்டியுள்ளனர் Eruvadi Eagles அணியினர்!! முதலில் DFCC tournamentல் விளையாடுவோமா வேண்டாமா என்ற சிறிய சலசலப்பு...

போராளி களத்தை தேர்வு செய்வதில்லை களம் தான் போராளியை தேர்வுசெய்கிறது
ஆம் DFCC களம் Eruvadi Eagles அணியை தேர்வு செய்தது

பிற அணிகள் எல்லாம் ஏதோ புதிதாக ஒரு அணி இந்த Tournamentல் சேர்ந்து உள்ளது என்று மட்டுமே நினைத்திருப்பார்கள்..
ஆனால்
இவர்கள் தான் இந்த DFCC கோட்டையை இனி ஆக்கிரமிக்க போகிறவர்கள் என்று ஒருபோதும் அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆம்
அந்த DFCC கோட்டையை ஆக்ரமித்து காட்டினார்கள் நமது
🦅EE🦅 அணியினர் .
முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த அதிராமபட்டினம் அணியினரை அசுரனாய் அதிர விட்ட அந்த முதல் ஆட்டதிலேயே மொத்த DFCCயும் அதிர்ந்தது. மற்ற அனைத்து அணியினரின் பார்வையும் Eruvadi அணியினரை நோக்கி திரும்பியது.

அடுத்து வந்த அனைத்து போட்டியிலும் எதிர் அணியினரை பந்தாடினர் Eruvadi அணியினர் .......

தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு களமும் அதுதான்...
இரண்டு தோல்விகள்

வீரனுக்கு வெல்வது மட்டுமே அழகல்ல கிடைத்த தோல்வியை அறத்தோடு ஏற்று கொள்வதும் மிக சிறந்த வீரம்!!! தோல்வியை அறத்தோடு ஏற்று கொண்டு முன்னேறி நகர்ந்தனர். இவர்கள் சும்மாவே இந்த ஆட்டம் ஆடுவார்கள் இவர்கள் கால்களில் சலங்கையை கட்டி விட்டால் கேட்கவா வேண்டும். ஆம் இவர்கள் காலில் சலங்கை கட்டியது போல் வந்து சேர்ந்தான் Abudhabi ரிஸ்வான் 5 Red bull குடித்த எனர்ஜி Eruvadi Eagles அணியினருக்கு....
ஆடிய முதல் போட்டியிலே அரை சதம் அடித்து அசத்தினான். இதன் பின் டாப் கியரில் பயணித்து அனைத்து போட்டியிலும் எதிரணியினரை கலங்கடித்து அரை இறுதிக்குள் வந்து சேர்ந்தனர் நமது EE அணியினர்...

அரை இறுதியில் பலம் பொருத்திய தஞ்சை Fighters அணியை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள் அனைவரும் உறுதியாகவே இருந்தார்கள் அவர்களை வென்று விடுவோம் என்று..... பிற அணிகளை எல்லாம் கலங்கடித்த தஞ்சை fighters அணியின் Super Star Batsman தன்வீரின் விக்கெட்டை நான்தான் எடுப்பேன் என்ற பேச்சு வேறு.

சிலருக்கு இந்த பேச்சுக்கள் ஆணவமாக கூட தெரியலாம் என்னை கேட்டால் ஓர் விளையாட்டு வீரன் அவன் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு ஞானசெருக்கு என்பேன். அவர்கள் சொல்லியது போல் செய்தும் காட்டி தஞ்சை அணியினரை சரணடைய வைத்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்கள் .......

27 முறை நடந்த DFCC Tournamentல் பங்கு பெற்ற அணி முதல் போட்டியிலே இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற வரலாறு இல்லை.....

வரலாற்றை பலர் படிப்பார்கள், பலர் எழுதுவார்கள், சிலர் இடம் பெறுவார்கள் ஆனால் ஒரு சிலரால் மட்டுமே வரலாறு மாறும்.....

இறுதியில் தோல்வி
மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இறுதி போட்டி மிக பெரிய ஒரு போராட்ட களமானது. தன்னை எளிதில் விட்டு கொடுக்கும் வழக்கம் இல்லாத EE அணிக்கு இறுதி போட்டியை வெல்லும் முனைப்பில் ஒரு சிறிய தவறின் மூலம் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இங்கே பெருமையுடன் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு விசயம் இந்த DFCC tournamentல் ஆடும் அணிகளில் நமது அணி மட்டும் தான் தனி ஏர்வாடி அணி தண்ணீர் கலக்காத பால் 24 கேரட் தங்கம்

மற்ற அணிகள் அனைத்தும் வேறு வேறு மாவட்டங்கள் பிற மாநிலங்கள் ஏன் பிற நாடுகளில் உள்ள வீரர்களை கொண்டு கூட உருவாக்கப்பட்ட அணிகளை கொண்டு ஆடுகின்றனர்.

Eruvadi அணியினர் இறுதி போட்டியில் வெல்ல முடியா விட்டாலும் அந்த கோட்டையில் ஒரு கொடி நாட்டப்பட்டது அது ஏர்வையின் கொடி
அங்கே ஒரு புது வரலாறு படைக்கப்பட்டது. எதிரியின் கண்ணில் ஒரு பயத்தை உருவாக்கி விட்டு ஒரு ஏற்றுகொள்ள முடியாத தோல்வியை அடைந்தது. டெக்னாலஜி வசதிகள் இல்லாத நிலையில் ஒரு முடிவெடுக்க முடியாத தவறான முடிவினால் இது ஒரு தோல்வியாக முடிந்தது.
எத்தகைய பலம் வாய்ந்த உறுதியான கப்பலாக இருந்தாலும் சரியான மாலுமிகள் இல்லை என்றால் அந்த கப்பலால் கரை சென்று சேர்ந்து விட முடியாது .

ERUVADI ஈகிள்ஸ்🔥🔥 எனும் பலம் வாய்ந்த கப்பலை ஜைனுல், அக்ரம் மற்றும் அசன் மூவரும் சிறந்த மாலுமிகளாக செயல்பட்டு சரியான இடத்தில் கரை சேர்த்து அங்கு பிற அணிகள் நாட்டி இருந்த கொடிகளை எல்லாம் அகற்றிவிட்டு
🦅 Eruvadi Eagles 🦅
கொடியை நாட்டி இனி இங்கே எங்கள் கொடி எப்போதும் பறக்கும் என்று உரக்க சப்தமிட்டு
🏆ரன்னர் கோப்பையை முத்தமிட்டனர்.

சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல் ஒற்றை ஏர்வாடியாக களம் புகுந்து வெற்றி கொடி நாட்டிய
🦅Ervai ஈகிள்ஸ்🦅
அணியினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....*










Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..