Home >> News >> Detail
  Login | Signup  

அமீரகத்தில் ஸ்டாலின் - 01

Posted by S Peer Mohamed (peer) on 3/28/2022 11:36:41 AM

-----------------------------------------------
பேரா. Eruvadi அ. இஜாஸ் முஸம்மில் M.Com (Ph.D)
பைத்துல் ஹிக்மா, புதுச்சேரி.

============================
உலகளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச தொழில்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை துபாயில் நடத்தப்படுகிறது. இந்தியாவின் சார்பாக மொத்தம் 16 மாநிலங்கள் கலந்து கொண்ட துபாய் சர்வதேச தொழில்கண்காட்சி 2022 யில் திமுக அரசின் முயற்சியால் இறுதியாக தமிழகம் சார்ந்த அரங்கங்களும் இடம் பெற்றுள்ளன.

24 வியாழன் மாலை, துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி, அயல் நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி, அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின் ( Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) துணை தலைவர் லூலூ யூசுப் அலி ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

19 லட்சம் கோடிக்கும் அதிகமான நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (NSDP) , பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இந்திய நாட்டில் முன்னுதாரண மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்ற முதல்வரின் வேட்கை பல தொழில்வாய்ப்புகளை பெருக்க உதவுகிறது.

காலம் காலமாக தமிழக முஸ்லிம்களுக்கு பொருளீட்டும் முறை என்றாலே வாணிபம் தான் என்ற நிலை மாறி மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. நேர்த்தியான திட்டமிடலுடன் செயல்பட்டால் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தொடங்கி விமான உதிரிபாகங்கள் வரை அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்யலாம். கடலை கிழித்து பாய்மரக்கப்பலில் பயணித்த தமிழக முஸ்லிம்களின் அயல்நாட்டு வாணிபம் மீண்டும் கோலோச்ச சர்வதேச சந்தையுடன் இந்திய அரசின் நகர்வுகளையும் கூர்ந்து கவனித்தாலே போதுமானது.
Other News
1. 29-06-2022 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 22-06-2022 நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கூறி ஏர்வாடியில் கண்டன பொதுக்கூட்டம் - S Peer Mohamed
3. 13-06-2022 இன்று முஸ்லிம் நாளை உங்கள் வீடும் இடிக்கப் படும் (Video) - S Peer Mohamed
4. 13-06-2022 வீட்டை இடிக்கிறார்கள்| கண்ணீருடன் கலங்கி நிற்கிறேன் | செந்தில்வேல் வீச்சு - S Peer Mohamed
5. 10-04-2022 இதுதான் தமிழ்நாடு மாடல்! | Ramadan 2022 | Triplicane Big Mosque - S Peer Mohamed
6. 08-04-2022 கிரிக்கெட் வாய்ப்பு: தமிழ் நாடு கிரிக்கெட் லீக் தேர்வு - S Peer Mohamed
7. 02-04-2022 தமிழ்நாட்டில் ரமழான் தொடக்கம் 3-ஏப்ரல் - S Peer Mohamed
8. 15-03-2022 லெப்பை வளவு சாலி சார் அவர்களின் மகன் முஹம்மது ஹசன் அவர்கள் ஆலிம் பைஜி பட்டம் பெற்றார். - S Peer Mohamed
9. 14-03-2022 NEMS school annual sports meet - S Peer Mohamed
10. 14-03-2022 ஏர்வாடி: 5-Mar TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முகாம் - பாப்புலர் ஃப்ரண்ட், இம்தாத் - S Peer Mohamed
11. 14-03-2022 திருக்குறுங்குடி: காதல் மனைவியை கொன்று புதைத்தது ஏன்?- கைதான ராணுவ வீரர் பரபரப்பு வாக்குமூலம் - S Peer Mohamed
12. 04-03-2022 ஏர்வாடி பேரூராட்சியின் தலைவர் தேர்தல் 4-mar-2022 - S Peer Mohamed
13. 04-03-2022 2022-23 நிதிநிலை அறிக்கை விவாதம் - நவாஸ்கனி எம்பி ஆற்றிய உரை., - S Peer Mohamed
14. 22-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் - வெற்றியாளர்கள் - S Peer Mohamed
15. 06-02-2022 2022 - ஏர்வாடி பேரூராட்சி மன்ற தேர்தல் போட்டியாளர்கள் மற்றும் வார்டு விவரங்கள் - S Peer Mohamed
16. 01-02-2022 ஏர்வை எஜுகேஷனல் அகாடமியின் நேரடி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி (1-Feb) - S Peer Mohamed
17. 26-09-2021 ஏர்வாடி எழுத்தாளர் சலாஹுத்தீன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா - S Peer Mohamed
18. 21-09-2021 வெங்கடேஷ் ஏர்வாடி மின் வாரிய ஊழியரின் சேவை - S Peer Mohamed
19. 21-09-2021 ஏர்வாடியில் கஞ்சா விற்பனை - இருவர் கைது - S Peer Mohamed
20. 13-09-2021 ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் - இ, யூ, முஸ்லீம் லீக் ஏர்வாடி - S Peer Mohamed
21. 09-09-2021 Narendra Modi government is selling Indias crown jewels, says Rahul Gandhi - S Peer Mohamed
22. 09-09-2021 ராபியா ஷைஃபி - வெட்கித் தலை குனிகிறோம். - S Peer Mohamed
23. 08-09-2021 #JUSTICEFORSABIYA - S Peer Mohamed
24. 08-09-2021 ஏர்வாடியில் இன்று (8-9-21) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - S Peer Mohamed
25. 20-08-2021 ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஷரீஆ என்றால் என்ன ஏன் - இல்யாஸ் ரியாஜி - S Peer Mohamed
26. 09-08-2021 ஏர்வாடி அருகே பைக் விபத்தில் 2 பேர் காயம் - S Peer Mohamed
27. 24-07-2021 நல்ல மனிதர்கள்: ஷாட்டேஜ் பாபு - S Peer Mohamed
28. 24-07-2021 ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி - Day 3 - S Peer Mohamed
29. 19-07-2021 பைத்துஸ்ஸலாம் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் - S Peer Mohamed
30. 15-07-2021 Eruvai Karan - Nellai Eruvadi Slang Video: பிறையும் பெருநாள் கூத்துகளும் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..