கலக்கும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Posted by S Peer Mohamed (peer) on 6/5/2021 12:40:33 PM

தேடலில் முன்னிலை
தமிழ்நாடு நிதியமைச்சர் குறித்து.

சென்னை, ஜூன் 5 : தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. முக்கியமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதியை வாங்கிக்கொண்டு, சரக்கு சேவை வரி நிலுவை தொகையை தர மறுப்பது குறித்து இவர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகள் சரக்கு சேவை வரி நிலுவை தொகை குறித்தும், ஒன்றிய அரசின் போக்கு குறித்தும் பேச தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். சரக்கு சேவை வரி குழுக் கூட்டத்திற்கு கூட முதல்வர் ஸ்டாலின் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைத்தான் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்து இருந்தார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொருளாதார புலமை காரணமாக வடஇந்திய ஊடகங்கள் பலவற்றில் இவர் விவாதத்திற்கு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு அரசின் குரலாக வடஇந்திய ஊடகங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசப்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை வடஇந்திய ஊடகங்களுக்கு கொண்டு செல்வது, ஒன்றிய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முக்கியமான குரலாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்தியா டுடே சேனலில் ராஜ்தீப் சர்தேசி நடத்திய விவாதத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இதில் தடுப்பூசிக்கு யார் காசு கொடுக்க வேண்டும், மாநில அரசு கொடுக்க வேண்டுமா? அல்லது ஒன்றிய அரசு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி வைக்கப்பட்டது. இதற்கு நம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்ன பதில்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விவாதத்தில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது. ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. வானத்தில் இருந்து வந்துவிடவில்லை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். இது மக்களின் பணம்.

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இதை யார் எப்படி செலவழித்தாலும் மக்களின் பணம் என்பதை முதலில் ஒன்றிய அரசு உணர வேண்டும்.

ஒன்றிய அரசு ஒன்றும் தங்கள் பரம்பரை சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்யவில்லை. மக்களிடம் வாங்கிய பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை சரியாக, முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க ஒப்பந்தபுள்ளிகளை கோரி, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிக சக்தி இருக்கிறது. மாநில அரசு வெளிநாட்டு கடன்களை பல நாடுகளில் இருந்து வழங்க முடியாது. சாதாரண பட்ஜெட் பணிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி இன்றி நாங்கள் கடன் வாங்க முடியாது. அப்படி இருக்கும் போது ஒன்றிய அரசுதான் இதில் தலையிட வேண்டும்.

இது மக்களின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களிடம் வசூலித்த பணத்தில் மக்களுக்கு இலவசமாக வேக்சின் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம், என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது விவாதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவாதம் தேசிய அளவில் ஹிட் அடித்த நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், யாரென்று டிவிட்டரில், கூகுளில் பலர் கேட்கவும், தேடவும் தொடங்கினர்.

ஆணித்தரமாக, பொருளாதார அறிவோடு பிடிஆர் பேசுவதைக் கேட்டு பல மாநில மக்கள் கூகுளில் நேற்றுமுன்தினம் முதல் தேடத் தொடங்கினர். அதிலும் நேற்று முன்தினம் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட நம் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து தேடச் செய்துள்ளனர். அதோடு அமெரிக்காவில் பிஎச்டி, எம்.பி.ஏ படித்தவர் நம் நிதியமைச்சர் என்பதையும் பார்த்துவிட்டு பலர் வியப்பாக டிவிட்டரில் டிவிட் செய்யத் தொடங்கி உள்ளனர்.

தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டுமென்ற விவாதம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு சரக்கு சேவை வரி நிலுவைத் தொகையைத் தர வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் குரல், வடஇந்தியாவில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை சீர் குலைத்து, பொருளாதார வளர்ச்சி குறியீட்டை அதலபாதளத்துக்கு வீழ்ச்சியடைய செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நிதியமைச்சரிடம், இனியாவது பாடம் கற்க வேண்டுமென்றும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

வளர்க தமிழ்நாடு
05.06.2021








Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..