குழந்தை டயாபர்கள் அவசியமா ?

Posted by Haja Mohideen (Hajas) on 2/18/2018 2:06:53 AM

குழந்தை டயாபர்கள் அவசியமா ?

 

நான் ஒரு கிராமப் பகுதியில் சொந்தமாக Medical Shop நடத்தி வருகிறேன். எனது கடையில் ஒரு நாளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு பொருள் என்று பார்த்தால்... அது குழந்தைகளுக்கான பேபி டயாபர்கள்தான் (Pampers, Huggies, etc).

அதில் குறிப்பிட்டுள்ள வாசகமே 'one pamper = one dry night.' என்பதுதான். அதாவது இந்த ஒரு டயாபரைக் குழந்தைக்கு அணிவித்து விட்டால், இரவு முழுதும் குழந்தையின் சிறுநீரானது இதன் பஞ்சுப் பகுதிகளால் உறிஞ்சப்பட்டு, அதில் உள்ள வேதிப் பொருட்களால் ஜெல் (magic gel) நிலைக்கு மாற்றப்படுகிறது. இதனால் குழந்தை ஈர உணர்வால் அழாமல் இரவு முழுதும் தூங்கும்.

அதைவிட முக்கியமாகக் குழந்தை அழுது பெற்றோர்களின் தூக்கம் கலைந்து எழுந்து, குழந்தை சிறுநீர் கழித்த அந்த ஈரத்துணியை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

விசயம் என்னவென்றால்.... பெரியவர்களான நாமே இரவு நேரத்தில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துத் தளர்வான லுங்கி, நைட்டி முதலான ஆடைகளை அணிகிறோம். ஆனால் இந்தப் பச்சிளம் குழந்தைகளுக்குக், காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லாத இந்த டயாபர்களை தினசரி அணிவிப்பது எந்த வகையில் சரியான செயலாக இருக்க முடியும்? அதிலும் வெளியூர் பயணமென்றால் ... பாவம் அந்தக் குழந்தைகள், நாள் முழுதும் டயாபர்களால்தானே சுற்றப்பட்டு இருக்கின்றன.

போதுமான காற்றோட்டம் இல்லாததாலும், சிறுநீரை ஜெல்லாக மாற்றும் வேதிப் பொருட்களின் தாக்கத்தாலும் அலர்ஜியாகிக் குழந்தைகளின் பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் போன்றவை தோன்றுகின்றன.

ஆனால் அலட்டிக்கொள்ளாத நாம் அதற்கும் ஒரு ஆயிண்ட்மென்ட்டைப் பூசிவிட்டு அடுத்த டயாபரை மாட்டி விடுகின்றோம்.

யோசித்துப் பார்த்தால் .... இந்த டயாபர்கள் நம்மிடையே புழக்கத்திற்கு வந்து ஒரு 10 ஆண்டுகள் ஆகியிருக்குமா?

இந்த டயாபர்களின் உபயோகம் இல்லாமல்தானே நமது தாய் தந்தையர் 4, 5 குழந்தைகள் வரையும், நமது தாத்தா பாட்டிகள் 8, 10 குழந்தைகள் வரையிலும் வளர்த்தனர்! அவர்கள் நம்மை வளர்க்க எத்தனை இரவுகளில் எத்தனை முறை தூக்கத்தில் விழித்திருப்பார்கள்!

நாம் வளர்ப்பது ஒன்றோ இரண்டோதானே!

பெற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தைவிட நிம்மதியான தூக்கம் முக்கியம் என்கிற அளவுக்கு மனித மனம் மரத்துவிட்டதோ..! என நினைக்கத் தோன்றுகிறது.

#யாரே_ஒருவர்

https://www.facebook.com/groups/427861373951231/permalink/1825715744165780/






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..