தமிழ்நாட்டு மக்கள் உடனடியாக செய்யவேண்டியது

Posted by Haja Mohideen (Hajas) on 7/29/2017 10:47:37 AM

தமிழ்நாட்டு மக்கள் உடனடியாக செய்யவேண்டியது

 

தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி தமிழ்நாட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து 
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை முடக்கி வைக்கும் தற்போதைய நிகழ்வுகள் சில....

1. Big Boss

எல்லாரையும் பார்க்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயனற்ற மிகப்பெரிய அபத்தமான நிகழ்ச்சி..

2. TNPL

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, வேலை மற்றும் தொழில்களின் மீது இருக்கும் கவனத்தை சிதறடித்து அவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் ஒளிபரப்பத் தேவையில்லாத விளையாட்டு நிகழ்ச்சி..

3. நாடகத்தொடர்கள்.

தத்தம் சேனல்களை பார்க்க வைக்கும், விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 
கொலை, கொள்ளை, கள்ளத்தொடர்பு, மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை, வஞ்சம், கொடூரம், பொறாமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றை பிரதான கதைக்கரு, கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களாக வைத்து பரபரப்பாக கதைகளை நகர்த்துகின்றனர்..

4. ரஜினி & கமல் அரசியல் பிரவேசம்

தனது படத்திற்கு விளம்பரம் தேடி, தனது படத்தை ஓட வைக்கும் குறுக்குபுத்தியுள்ள ரஜினியின் கேவலமான வியாபார புத்தி... தமிழனின் எந்த பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்க யோக்கியதை இல்லாத கன்னடப் பற்றுள்ள கன்னடத்தான் என்கிற போலித்தமிழன்.

எல்லாம் சிரிக்கிறாங்கன்னு பூனை போய் பாத்ரூம்ல சிரிச்சுதாம்.. கமலின் அரசியல் வார்த்தைகள் அப்படிதான்.. பயனுள்ளதாய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய தெரியாத செய்ய முடியாத தமிழ்ப்புலி என்று சொல்லிக்கொள்ளும் பொதுநலத்தைப் பேசி தன்னலத்தைப் பற்றி மட்டுமே செயல்படுத்தும் திருட்டுப் பூனை..

5. அ.தி.மு.க கண்ணாமூச்சி

நோ கமெண்ட்ஸ் (கூத்துகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்)

6. சினிமா, மது, பொழுதுபோக்கு, IPL, கார்ப்பரேட் கவர்ச்சிகள் மற்றும் பல... (பட்டியல் நீளும்)

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க யாரும் களமிறங்கவில்லை...
மக்களை குழப்பத்தோடு வைத்து குளிர்காய நினைக்கும் கேடுகெட்ட நரித்தந்திரவாதிகளின் பிடியில் தத்தளிக்கிறது தமிழ்நாடு...!

!

தமிழர்களே  தமிழ்நாட்டை  காப்பாற்ற களமிறங்குங்கள்...

  • மரம் நடுங்கள்
  • மழைநீர் சேமிப்பை மேம்படுத்துங்கள்
  • விவசாயத்தை காப்பாற்றுங்கள்
  • பொழுதுபோக்கை தூக்கியெறிந்துவிட்டு உங்களுக்காக மேலும் உழையுங்கள்
  • தமிழர்களின் வளர்ச்சிக்கு அனைவரும் ஓரணியில் போராடுங்கள்
  • அரசை கேள்வி கேளுங்கள் 
  • உரிமைகளை கேளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள்
  • ஒருவர் கேள்வி கேட்டால் ஒடுக்கப்படலாம் பத்துபேராய் கேட்டால் கொடுக்கப்படலாம்.. நூறுபேராய் கேட்டால் கொடுத்தே தீர வேண்டும்.
  • லஞ்சம் கொடுக்காதீர்கள் வாங்காதீர்கள். 
  • நமக்கென்ன என்ற போக்கை மாற்றுங்கள். போராடிப்பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
  • நேர்மையாய் நடப்போம்
  • சின்ன தவறென்று நினைத்தால் கண்டியுங்கள், பெரிய தவறாக வளரும் முன்பே..
  • தனிநபர் வருமானத்தை உயர்த்துவோம்.
  • வாழப்பழகுவோம் ஒழுக்கமாய் இனி..
  • ஊழலை எதிர்ப்போம், உண்மையாய் நடப்போம்
  • ஒவ்வொருவரும் மாறினால்தான் மாற்றம்..

 

இதையெல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

நம்முடைய பிள்ளைகள் சோலைவனமாக இருக்கவேண்டிய தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே தவிர தமிழ்நாட்டை பாலைவனமாக்கி அதில் தண்ணீருக்கும் சோற்றுக்கும் அலையும் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக..

இவ்வளவுநாளாய் சும்மா இருந்து 
சும்மா இருந்து
என்ன சுகத்தை கண்டோம்??

வரும் தலைமுறையினர் வாழட்டுமே சுகமாய்... 
நம் முயற்சியால்...

(பகிருங்கள்
பரவட்டும்...!
தமிழ்நாடு
வளரட்டும்..!)
Karthic

https://www.facebook.com/groups/baithussalam/permalink/1398679200200793/

 






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..