ஜமால் சார் - மர்ஹும்

Posted by S Peer Mohamed (peer) on 7/14/2017 3:51:44 AM

ஜமால் சார் !

நான் நமதூர் எலிமெண்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எனக்கு ஆசிரியர் அதன்பின் அதே பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர்

மென்மைக்கு மறுபெயர் ஜமால் சார் என்று சொல்லலாம்

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுக்கும்போது மிகவும் எளிமையாகவும் மாணவர்கள் எளிதில் புறிந்து கொள்ளும்படியும் பாடம் நடத்துவார்கள்

ஜமால் சாரை கண்டு அவரிடம் படித்த எந்த மாணவர்களும் பயந்ததை நான் பார்த்ததில்லை மாறாக .," மிகவும் மரியாதை " கொடுப்பதை பார்த்திருக்கின்றேன் நான் உள்ப்பட . அந்த அளவுக்கு எல்லா மாணவர்களிடமும் அன்பாய் மென்மையாய் பழகும் பக்குவம் கொண்டவர் ஜமால் சார்

படித்த காலத்துடன் ஜமால் சாரின் தொடர்பு விட்டு போய்விட்டது அதன்பின் அவரை நான் சந்தித்தது துபாயில் ( 1978 ) துபாயில் அன்றைய புகழ் பெற்ற bank of oman நிறுவனத்தில் நல்ல அந்தஸ்தான பதவியில் இருந்தார் துபையில் பணியாற்றிய நமதூர் ஏர்வாடி மக்கள் எல்லோரிடமும் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள்

இந்த நேரத்தில்தான் துபையில் " eman " தொடங்கப்பட்டது 1978 ஈமானின் முதல் பொருளாளராக இருந்து மிகவும் கண்ணியமாய் எல்லோரும் மதிக்கதக்க அளவில் செயல் பட்டார் . ஜமால் சார் துபாயை முடித்து விட்டு ஊருக்கு வரும்வரை அவர்தான் ஈமானின் பொருளாளராக இருந்தார் என்று நினைக்கின்றேன்

நானும் துபாயில் இருக்கும்போது 13 / 14 ஆண்டுகள் ஜமால் சாருடன் பழகி கழித்த உன்னத தருணங்கள் மனசு மறக்காதவை பழக எளிமையானவர் ஆலோசனைகள் வழங்குவதில் அனுபவஸ்தர் அடுத்தவரை உள்ளன்போடு நேசித்து பாசம் கண்ட மரியாதைக்குரிய ஜமால் சார் அவர்கள் இன்று (4-Jul-2017) இறைவனடி சேர்ந்திட்ட (வபாத் ) செய்தி கிடைத்தது

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் யாவையும் மன்னித்து  அன்னாரின் மண்ணறையை வெளிச்சமாக்கி
ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தை கொடுப்பதோடு  அவரை பிரிந்து வாடும் குடும்பத்தார் யாவருக்கும் பொறுமையை கொடுக்க உன்னிடம் துவா செய்கிறோம் ...!

Peer Mohamed

 

இன்று 06.07.2017 அஸர் தொழுகைக்குப் பின்னர் கீழ முஹல்லம்
பள்ளியில் ரபீக் ஹஸரத் அவர்கள்,

 ஜமால் சார் அவர்கள் இப் பள்ளிக்கு செய்த சேவைகளையும், தன்னை இப்பள்ளியின் இமாமாக நியமனத்திற்கு காரனமாக இருந்ததையும் நன்றியுடன் நினைவு கூறினார்கள்.

வந்தவர்கள் அனைவரும் ஜமால் சாருக்காகவும், அன்னாரின் குடும்பத்தார்களுக்கும்
துஆ செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.

ஜனாஸா தொழுகைக்கு பெருந்திரளாக ஊர் மக்கள் கலந்துகொண்டார்கள்.
ரபீக் ஹஸரத் ஜனாஸா தொழுகை  தொழவைத்தார்கள். அதன் பின்பு கீழ முஹல்லம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வல்ல இறைவன் அன்னாரின் மறுமைவாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்

- இப்ராஹீம் கனி, ஈமான்.


 

ஜமால் சார் - ஒரு ஈமானிய ஆளுமை
========================
நம்மை விட்டு மறைந்த ஜமால் சார் அவர்கள் நமது ஈமான் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும் அதன் முதல் பொருளாளர் என்பதும் நினைவுகூரத்தக்கது.
ஈமான் சங்கம் மூலமாகவும் முஹல்லா மற்றும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு  சமூக நலப்ப்ணிகளில் தன்னலம் பாராமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பொதுப் பணிகளில் உள்ளவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய சகிப்புத் தன்மையும் நிதானமும் மார்க்கப் பற்றும் அவர்களிடமிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்.

நமதூர் மக்களுக்கு இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய ஒரு தனியார் முஸ்லிம் கல்வி நிறுவனம் ஆரம்பித்ததிலும் முக்கிய பங்காற்றி முன்னோடியாக் இருந்தவர்

ஈமானுடைய தற்போதைய பணிகளிலும் வயது வித்தியாசம் பாராமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். கடந்த வருடம் முதல் ராணி மெட்ரிக் பள்ளியில் ஈமான் சார்பாக நடத்தப்படும் தீனியாத் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஜமால் சார் அவர்கள் தான்  அஸ்திவாரமாக இருந்தார்கள் என்பது மறக்கமுடியாது. அது சமயம் ராணி பள்ளி மேடத்தை சந்திக்க அவர்களுடன் சென்ற போது  , மேடம் எழுந்து நின்று , சார் முன்னால் உட்கார மாட்டேன் என்றும் சார் வந்து சொல்வதால் தீனியாத் பாட வகுப்புகள் நடத்த மறுக்க முடியாது என்று சொன்னதும் நெகிழ்ச்சிக்குரிய நினைவுகள்.

ஈமானின் வேர்களில் ஒருவரான அவர்கள் ஈமானிய மொட்டுகளுக்காகவும் உழைத்துள்ளார்கள். ஒவ்வொரு வருட நிகழ்ச்சிக்கும் காவல்துறை அனுமதி மற்றும் முஹல்லா நிர்வாகிகளை அழைப்பது போன்ற பணிகளில் மனமுவந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அடுத்த வருடத்துடன் 40 ஆண்டை பூர்த்தி செய்யும் இந்த மகத்தான ஈமான் அமைப்பின் மூலமாக இன்ஷா அல்லாஹ் இறுதி நாள் வரை செய்யப்படும் அனைத்து நற்காரியங்க்ளின் நன்மைக்ளிலும் ஈமானிய விதைகளை விதைத்தவர்களில் ஒருவர் என்ற முறையில் அன்னாருக்கும் அதன் நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் கபூல் செய்வானாக.

ஜமால் சார் அவர்களின் மறைவு ஒரு ஆரவாரமில்லாத ஆளுமையின் இழப்பு என்றால் மிகையல்ல. அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த சுவனத்தையும் அவர்களின் குடும்பத்தார்க்கு சிறந்த பொறுமையையும் வழங்குவானாக.

அவ்ர்கள் விதைத்து விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த ஈமானிய மரம்  சோலையாகி கனிகள் தருவதற்காக நாம் ஒவ்வொருவரும் அதில் பங்கெடுப்பதும் அவர்கள் முன்னெடுத்து சென்ற பணியைத் தொடர்வதன் மூலம் மீண்டும் ஒரு மதீனாவிற்கான முயற்சிகளில் நம்மை முழுமையாக இணைத்து கொள்வதுமே நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த நினைவேந்தலாக இருக்கும் என எண்ணுகிறேன்.

மண்ணறை மணம் வீச .. மனமார்ந்த பிரார்த்தனைகளுடன்...
அப்துல்லாஹ் இப்னு ஷாபி


 I wish to share a few thoughts about Jamal Sir. He was my head master and my class teacher in my seventh and eighth standards in 1973 & 1974. Then I had close contacts interacting with him in Eman matters as its treasurer in Dubai in 1989. Then I dealt with him on personal and family matters. Then lastly I was interacting with him on Keezha Muhallam affairs. During all these phases of interaction, I never ever saw him upset or angry with anyone. He was cool and gentle. Amazing qualities everyone should adapt, but I am not able to. Alhamdulillah he was such a good person. Masha Allah. May Allah reward him suitably! I remain praying...

 - Mohamed Ali, Dubai.







Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..