கோடையிலும் வற்றாத குடிநீர் ஊரணி சாதித்து காட்டிய ஓரிவயல் கிராம மக்கள்

Posted by S Peer Mohamed (peer) on 4/17/2017 11:55:57 AM

கடலாடி:கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரிவயல் கிராமத்தில், கோடையிலும் வற்றாமல் நிறைந்து காணப்படும் குடிநீர் ஊரணியால் அக்கிராமத்திற்கு பெருமையும், பாராட்டும் கிடைத்து வருகிறது.

ஓரிவயல் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ளது 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பன் கோயில் ஊரணி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊரணியை நன்கு துார்வாரி, அதில் கிடைத்த மண்ணைக்கொண்டு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டது. ஊரணியை சுற்றிலும் கரைப்பகுதியில் வேலிக்கற்கள் ஊன்றியும், கால்நடைகள் செல்லாதவாறு கம்பிவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது.

கரையோரங்களில் நிழல்தரும் மரங்கள் செழிப்பாக வளர்ந்து பசுமையாக காட்சி தருகிறது. 2,100 பேர் வசிக்கும் இக்கிராமத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியதால் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை இல்லை. லாரிகளில் விலைக்கு வாங்கி நீரை பயன்படுத்தும் அவசியமும் இக்கிராம மக்களுக்கு ஏற்படவில்லை.

குடிநீர் ஊரணி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செந்துார்பாண்டியன், 65, நவநீதகிருஷ்ணன், 48, ஆகியோர் கூறுகையில், ஓரிவயல் பாசனக்கண்மாயின் வெட்டுத்தாவு பள்ளங்களில், பருவமழை காலங்களில் தேங்கிய மழைநீரை, கிராம பொது நிதியில் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து கருப்பன் கோயில் ஊரணியில் பம்பு செட் மூலம் நிரப்பினோம்.

கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குறைந்தளவு பெய்த மழைநீரை சேகரித்ததன் பலனாக, இன்றுவரை தண்ணீர் அதிகளவு உள்ளது. 15 அடி ஆழம் கொண்ட ஊரணியில், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் ஊரணி நீரை குடங்களில் சேகரித்து செல்கின்றனர். இதற்காக ஊர் சார்பில் காவலாளி ஒருவரை நியமனம் செய்து பராமரித்து வருகிறோம்.

ஊரணி நீரை நன்கு காய்ச்சி பருகுகிறோம். 300க்கும் மேற்பட்ட மயில்கள், புறாக்கள், கொக்கு, செம்மூக்கு நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தண்ணீரை தேடி இந்த ஊரணியில் தஞ்சம் புகுகின்றன. மழைநீரில் நிறைந்து காணப்படும் ஊரணியை பார்த்து, அரசு அலுவலர்கள், இதர கிராமத்தினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர், என்றனர்.








Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..