செல்லாத பணமும் சில சிந்தனைகளும்

Posted by S Peer Mohamed (peer) on 11/27/2016 11:41:06 AM

கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது.
*
புதிய இந்தியா பிறந்து விட்டது.
*
மோடி சாதித்துவிட்டார்" 
*
என நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!
*
முதலில்,சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
*
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடிகள்.
*
அதில்,500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடிகள். 
*
அதில் ,கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம்.
*
அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி. அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். 
*
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், வங்கிகளில் ,அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தாக RBI தகவல் உள்ளது. 
*
RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
*
ஆகவே,மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே.
*
அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், இதிலும் சில கோடிகள், வெள்ளையாக மாறியிருக்கும்.
*
எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே.
*
ஆனால்,வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள்,பதுக்கியுள்ள பணம் 100 லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும்.
*
நம்மூரு நத்தம் விஸ்வநாதனே, 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது.
*
இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள், நாடு முழுக்க உண்டு.
*
அரசியல், சினிமா, தொழில்,பங்குச் சந்தை,ரியல் எஸ்டேட் எனப் பல வழிகளில் பணம் சேர்த்து , வரி கட்டாமல் பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில், மிகப் பத்திரமாக உள்ளது.
*
கறுப்பு பணம் ஒழிப்பில், உண்மையிலேயே,பாஜக அரசுக்கு ,அக்கறை இருந்தால் ,இந்த 100 லட்சம் கோடியைப், பறிமுதல் செய்திருக்க வேண்டும். 
*
ஆனால்,அதைச் செய்ய மாட்டார்கள்.செய்ய முடியாது.
*
காங்கரசும் செய்யாது. பாஜக வும் செய்யாது.
*
ஏன் ?
*
இவர்கள்தான்,அப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போட,சட்டப்படி அனுமதித்தவர்கள்.
*
அப்படிப்பட்ட பணத்தை மீட்க இயலாமல், சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டுத்,தன்னைக் கறுப்புப் பண மீட்பராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்.
*
"இல்லை,இல்லை வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க, மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் ,நீங்கள் இன்னும் அப்பாவியே! 
*
வெளிநாட்டு சுவிஸ் வங்கி ஒன்று ,தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை, அரசிடம் ஒப்படைத்தது.
*
அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிட வில்லை ,மன்மோகன் அரசும்,மோடி அரசும்.
*
பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி, அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்?
*
அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை அரசிடம் கேட்டது, உச்ச நீதிமன்றம். 
*
அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான்.
*
"மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" 
*
என ,நீங்கள் எதிர்க்கேள்வி கேட்கக் கூடும்.
*
நிச்சயம் அப்படி இல்லை. 
*
தேர்தலில் வாக்களித்தபடி, விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலைகள் குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நபர் ஒருவருக்கு 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில், நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது.
*
ஆனால் ,இதையெல்லாம் ஒருக்காலமும், மோடி அரசால் செய்ய முடியாது. 
*
ஏனெனில் ,இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது, கார்பரேட் முதலாளிகள்தான்.
*
"அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? 
*
உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன்.
*
1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு.
*
அதற்கு ஊதியமாக, வசூலிக்கும் பணத்தில், கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது.
*
அதற்குப் பதிலாக, மாணவர்களின் கல்விக்கடனில்,40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே? 
*
செய்தார்களா ?செய்யமாட்டார்கள்.
*
ஏனெனில் ,மாணவர்களை விட, ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம்.
*
2. நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் ,வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. 
*
ஆனால், ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கம் + கம்பெனியை வாங்க, 
*
அதானி நிறுவனத்திற்கு 6000 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது, SBI வங்கி. 
*
அதானி நலன்தான், அரசுக்கு முக்கியம்.
*
"எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?" என்று கேள்வி எழுப்புகிறீர்களா?
*
அதற்கான பதில்:
*
நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர்கள்.
*.
இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை, சமூகத்தின் அடித்தட்டிலிருந்து,பார்க்கப் பழகுங்கள்.
*
ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால், பயனடையப் போவது யார்? என ஆராயுங்கள்.
*
அதற்கெல்லாம் தேச நலன்.... தேசப்பற்றி....ராணுவ தியாகம் என்று கூப்பாடு போட்டு அடித்தட்டு மக்களின் வாழ்கையை நசுக்காதீர்கள்.....






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..