என்ன தவறு செய்தான் என் மகன்? - மூன்று இலட்சம் அரசு நிவாரணமும், முஸ்லிம் சமூகத்தின் மன நிலையும்!

Posted by S Peer Mohamed (peer) on 12/28/2015 12:23:02 AM

"என்ன தவறு செய்தான் என் மகன்? என் மகனை திரும்பக் கொடுக்க முடியுமா?

பத்து இலட்சம் இல்லை. கோடியே கொடுத்தாலும் என் மகனின் இழப்புக்கு அது ஈடாகாது.
எனக்குத் இலட்சங்களும், கோடிகளும் தேவை இல்லை. என் மகனை அநியாயமாக கொலை செய்த கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என் மகனுக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது.
இதுதான் எனக்கு வேண்டும்"


-கலெக்டர் சந்திப்புக்குப் பின் பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் சகோதரன் ஷஹீத் காஜா முகைதீன் பழனிபாபாவின் வாப்பா மன வேதனையோடு, கண்ணீர் வடித்து உதிர்த்த வார்த்தைகள் இவை.
அவரின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள மூன்று இலட்சம் நிவாரணத் தொகையை குறித்து


"மாஷாஅல்லாஹ்",  "அல்லாஹு அக்பர்", "வெற்றி", "நன்றி" என்றெல்லாம் பதிவுகளைப் பார்க்கின்றபோது பயமாகவும், வேதனையாகவும், ஆவேசமாகவும் இருக்கிறது.


சகோதரர்களே! இந்த மூன்று லட்சத்திற்காகவா நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்?
அமைதியாக இருந்த அரசு இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்றால் நாம் சிந்திக்க வேண்டாமா?
அரசின் இந்த அறிவிப்பு நம்முடைய போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் நிர்பந்த அடிப்படையில் வெளிவந்திருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்கிறோம். அதே தருணத்தில் நம்முடைய கோரிக்கையும், வேண்டுகோலும், எதிர்ப்பார்ப்பும் இதுவல்ல என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.
நிவாரணம் தீர்வாகாது.


அப்துர் ரஷீது படுகொலை உட்பட பல படுகொலைகளில் பாடம் படித்த பிறகும் அரசின் இது போன்ற அறிவிப்புகளில் நாம் ஆறுதல் அடைந்தால் அதைவிட அறியாமை வேறொன்றும் இருக்க முடியாது.
நமது சமூகத்தின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்கான அரசின் ஓர் கண்துடைப்பு நாடகமாகவே இதை நாம் பார்கிறோம்.

 

  • வழக்கு சரியான கோணத்தில் செல்ல வேண்டும்.
  • உண்மைக் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
  • இனி இது போன்ற செயல்கள் தொடராமல் தடுக்கப்படும் விதத்தில் நமது பகுதியில் வன்முறையை வளர்க்கும் அத்துனை நிகழ்வுகளும், அவற்றை தூண்டுவோரும் முற்றாக ஒடுக்கப்பட வேண்டும்.
  • ஷஹீத் காஜா முகைதீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
  • நிவாரணத்தை 10 இலட்சமாக அதிகரிக்க வேண்டும்.

இவைகள் நடந்தால் மட்டுமே நமது நீதிக்கான போராட்டம் அர்த்தமுள்ளதாக ஆகும்.
அதுவரை இந்த மூன்று இலட்சம் மற்றும் அரசின் இது போன்ற அனைத்து அறிவிப்புகளும் வெறும் பசப்புகளே!  சகோதரர்களே!  பசப்புகளுக்கு நாம் பழியாகி விடக்கூடாது.


ஷஹீதாகி இறைவழியில் இரத்த சாட்சியம் அளித்துள்ள  நம் சகோதரன் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் 

  • நமது ஒற்றுமைக்கானது.
  • நமது விழிப்புணர்வுக்கானது.
  • நமது பாதுகாப்புக்கானது.
  • நமது நல்வாழ்வுக்கானது.

அதில் ஒரு சொட்டை நாம் வீணடித்தாலும் அதற்கான விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.
உண்மையான நீதி கிடைக்கும் வரை உறுதியோடு போராடுவோம்!

-  Nellai Eruvadi Sunnath Jamath 












Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..