இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!

Posted by Haja Mohideen (Hajas) on 11/19/2014 1:42:51 AM

இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!

டெல்லி: "நவீன அடிமைகள்" அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 இடத்தில் உள்ளது என்ற தகவல் குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!

உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் உள்ள 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், வாக்ஸ்ப்ரீ பவுண்டேசன் அமைப்பும் இணைந்து 167 நாடுகளில் நடத்திய குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடிமைத் தளையை ஒழிக்கும் நோக்கத்தில் ஆண்டு தோறும் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 35.8 மில்லியன் மக்கள் நவீனக் கால அடிமைகளாக வாழ்கிறார்கள் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் நவீன அடிமைகள் அதிகம் வாழும் பட்டியலில் முதலிடத்தில் மவுரிடானியா உள்ளது. 2 ஆவது இடத்தில் உஸ்பெகிஸ்தான், 3 ஆவது இடத்தில் ஹைதி, 4 ஆவது இடத்தில் கத்தார், 5 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் உள்ளனர் என்றும், அந்த 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 125 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 596 மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள்.

இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல் போன்ற காரணங்களால் இந்தியாவில் பெண்கள் நவீன அடிமைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன அடிமைகள் கலாச்சாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கையை வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடிமைத் தனத்தை ஒழிகக சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும், ஆட்களை வலுகட்டாயமாக வேலை வாங்குபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.com/news/india/at-14-million-india-has-most-number-people-under-modern-slavery-215136.html






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..