நெல்லையில் ரூ.25 கோடி மின் திருட்டு: மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

Posted by Mohamed Rafiq (namaduoor) on 5/8/2012

நெல்லையை சேர்ந்த, ராகுல் ரத்ததான கழக அமைப்பாளர், பிரம்மா என்பவர், 2010 ஜனவரி முதல், 2011 டிசம்பர் வரை இரண்டு ஆண்டுகளில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், தொழிற்சாலைகளில் எவ்வளவு மதிப்பில் மின்திருட்டு நடந்துள்ளது, எவ்வளவு அபராதம் செலுத்தியுள்ளனர், அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற விவரங்களை, தகவல் அறியும் ஆணையத்தின் மூலம் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டத்தில் மட்டும், 1,200 நிறுவனங்கள் மற்றும் வீடுகளில், மின்திருட்டு நடந்துள்ளது. இதில், நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை நிறுவனத்தில், 2010, அக்டோபர், 22ம் தேதி இரவில், மின்வாரிய அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், "கொக்கி மூலம்' மின்திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகள், காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால் எளிதில் மின்திருட்டு நடக்கின்றன. மின்திருட்டு பட்டியலில், பத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மட்டுமல்லாது, வீடுகளிலும் சிலர், மின் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, 1,200 பேரின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும், குறைந்தபட்சம், ஐந்து லட்சம், 10 லட்சம் ரூபாய் என அபராதம் செலுத்தியுள்ளது. நெல்லை தாழையூத்து பகுதியில் செயல்படும், கல்குவாரி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், ஏதாவது புகாரின் பேரில், அதிகாரிகள் சோதனை நடத்திய பின் தெரிய வந்தவை. அப்படி தெரியாமல், இன்னமும் மின்திருட்டு தொடர்ந்து நடப்பது அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்தூத்துக்குடி: தூத்துத்குடி மாவட்ட தொழிற்சாலைகளில் இன்னும் மோசமான மின்திருட்டு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகரது ஆலையில், 50 லட்சம் ரூபாய்க்கு மின்திருட்டு நடந்தாலும், அந்த நிறுவனத்தினர் அபராதம் செலுத்தாமலேயே தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும், 2010, 2011 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின்திருட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இத்தகைய தகவல்களை திரட்டிய பிரம்மா கூறியதாவது: இந்த தகவல்களை திரட்ட, ஆறு மாதம் ஆனது. சில நிறுவனங்களின் பெயர்களை, வேண்டுமென்ற மறைக்கும் நோக்குடன், அதிகாரிகள் செயல்பட்டனர். சாதாரணமாக, மின் கட்டணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டால், மின் துண்டிப்பு, அபராதம் என, பொதுமக்களிடம் கண்டிப்பு காட்டும் மின்வாரிய அதிகாரிகள், இத்தகைய கோடிக்கணக்கான மின்திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு பிரம்மா கூறினார்.






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..