Home >> News >> Detail
  Login | Signup  

பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்!

Posted by Haja Mohideen (Hajas) on 4/30/2012

 

பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்!

திங்கள்கிழமை, ஏப்ரல் 30, 2012, 17:59 [IST]

 

டெல்லி: இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும் பாடுபடுத்தி வருவதாக கேலப் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
கேலப் பைனான்சியல் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup's Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குறியீட்டு எண் தொடர்பான கருத்துக் கணிப்பில் 3ல் ஒரு இந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்களது பொருளாதாக நிலை மோசமாகியுள்ளதாக 31 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலமும் இதே போல இருக்கப் போகிறது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது.
அதாவது 2011ம் ஆண்டில் 4ல் ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்போது அது 3ல் ஒருவர் என்ற அளவுக்கு மோசமாகியுள்ளது.
அதே போல கடந்த ஆண்டு 'நல்லா இருக்கேன் சார்' என்று பதில் சொன்னவர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு 13 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது போன வருடம் 5ல் ஒரு இந்தியர் சந்தோஷமாக இருந்தார். அது இந்த ஆண்டு 8ல் ஒரு இந்தியர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அதிலும் கிராமப் புறங்களில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 36 சதவீதம் பேர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூற, நகர்ப் பகுதிகளில் இது 21 சதவீதமாக உள்ளது.
பொருளாதார மந்தம், உயர்ந்து போன வட்டி விகிதம், கைக்கு எட்டாத அளவுக்கு போன வங்கிக் கடன்கள், பல புதிய திட்டங்களை ஒத்திப் போட்டுவிட்ட நிறுவனங்கள், இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் முடக்கம் என எல்லா பக்கமுமே நிலைமை நல்லாயில்லை.
இந்த விஷயத்தில் இந்தியாவை விட சீனாவும், பிரேசிலும் பரவாயில்லை என்கிறது கேலப் கருத்துக் கணிப்பு.

http://tamil.oneindia.in/news/2012/04/30/business-inflation-takes-away-feel-good-factor-one-third-indians-aid0090.html


Other News
1. 20-11-2017 உலக அழகியும் - அழகு சாதன சந்தையும். - Haja Mohideen
2. 14-11-2017 திருநெல்வேலி நினைவுகள்...!! - Haja Mohideen
3. 09-11-2017 மீத்தேன் திட்டத்தின் உண்மை பின்னணி - Haja Mohideen
4. 31-10-2017 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! - Haja Mohideen
5. 31-10-2017 சென்னையில் வசிக்கும் தோழமைகளின் #கவனத்திற்க்கு... - Haja Mohideen
6. 27-10-2017 எதுக்கு road tax கட்டுறோம்? அப்புறம் எதுக்கு toll gate வசூலிக்க படுகிறது? - Haja Mohideen
7. 27-10-2017 மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்தில் மாற்றம்? - Haja Mohideen
8. 24-10-2017 சவுதி அரேபியா - எதிர்காலத்திற்கான ஒரு கணிப்பு ஆய்வு - Haja Mohideen
9. 16-10-2017 ஏர்வாடி - மதம் கடந்து மனித நேயம் - Haja Mohideen
10. 13-10-2017 எச்சரிக்கை!! உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா - Haja Mohideen
11. 11-10-2017 ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி - Haja Mohideen
12. 10-10-2017 இந்திய அரசின் ஹஜ் மானிய மோசடி!_* - Haja Mohideen
13. 07-10-2017 தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள் - Haja Mohideen
14. 05-10-2017 நம் பாரம்பரியம் - Haja Mohideen
15. 26-09-2017 சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை ? - Haja Mohideen
16. 24-09-2017 ஆண்டி இந்தியனின் ஒருவன் - Haja Mohideen
17. 24-09-2017 கமலின் - நல்ல நேர்காணல்🙏🙏 - Haja Mohideen
18. 23-09-2017 ஊழலை ஒழிப்பேன் - சின்னவா_கமல் - Haja Mohideen
19. 21-09-2017 கொட்டும் கனமழை... நிரம்பி வரும் தமிழக அணைகள்- விவசாயிகள் மகிழ்ச்சி - S Peer Mohamed
20. 20-09-2017 இஸ்ரோ Vs. புல்லட் ரயில் - Haja Mohideen
21. 11-09-2017 நீட் வழக்கில் அநீதிகள்! - Haja Mohideen
22. 06-09-2017 சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் - Haja Mohideen
23. 02-09-2017 ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை - S Peer Mohamed
24. 02-09-2017 அனிதா - தூக்கம் தொலைத்த ஓர் இரவு! - S Peer Mohamed
25. 29-08-2017 களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… ! - S Peer Mohamed
26. 28-08-2017 ஹீலர் பாஸ்கர் ஒரு நாள் ஏர்வாடி பயிற்சி முகாம் புகைப் படங்கள். - S Peer Mohamed
27. 27-08-2017 ஈமானிய மொட்டுக்கள் - 2017 போட்டோஸ் - S Peer Mohamed
28. 25-08-2017 ஏர்வையில் புகழ் பெற்ற திண்ணைகள்.... - Haja Mohideen
29. 23-08-2017 WARNING FOR PARENTS. - Haja Mohideen
30. 14-08-2017 டாக்டர் கபீல் கானுக்கு மடல்: - Haja Mohideen


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..