Home >> News >> Detail
  Login | Signup  

தமிழகத்திலிருந்து அத்துமீறி நுழையும் தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு

Posted by Haja Mohideen (Hajas) on 12/11/2011

 

தமிழகத்திலிருந்து அத்துமீறி நுழையும் தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு

 
 
 
Kumuli
தேனி: கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த குமுளிக்கு சென்றனர். அவர்கள் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் குமுளிக்குள் செல்ல முயன்றனர்.

குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது கேரளாவைச் சேர்ந்த சிலர் கல் வீசித் தாக்கினர்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே பலர் நுழைந்தனர். அவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் நுழைய ரோசாப்பூ கண்டம் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ஒரு கேரள மாநிலத்தவர் வீட்டை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த 10 பேரையும் தாக்க துரத்தினர். அவர்களில் 6 பேர் தப்பி தமிழகத்திற்கு வந்துவிட்டனர். சிக்கிய 4 பேரை அப்பகுதி மக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடிவந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து குமுளிக்குள் அத்துமீறி நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.
 

Other News
1. 23-07-2017 இமாம்களையும்/முஅத்தின்களையும் பற்றி கொஞ்சம் சிந்திப்போம் - Haja Mohideen
2. 22-07-2017 ஒரே ஊர்! ஒரே பாங்கு! ஒரு சிறிய யோசனை!! - Haja Mohideen
3. 20-07-2017 உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ? - Haja Mohideen
4. 20-07-2017 மிக விரைவில் தூத்துக்குடி திருநெல்வேலி மக்கள் அனைவரும் புற்றுநோயால் சாகவுள்ளனர் - Haja Mohideen
5. 19-07-2017 புதிய இந்தியாவில் இளைஞர்களுக்கு என்ன உத்தியோகம்? - Haja Mohideen
6. 14-07-2017 #NotInMyName - அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் - S Peer Mohamed
7. 14-07-2017 களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை - S Peer Mohamed
8. 14-07-2017 ஜமால் சார் - மர்ஹும் - S Peer Mohamed
9. 13-07-2017 உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் - Haja Mohideen
10. 13-07-2017 Why the family of a murdered RSS worker thanked a devout Muslim in Karnataka - Haja Mohideen
11. 12-07-2017 அமர்நாத் யாத்திரை தாக்குதல் பின்னணி என்ன? - Haja Mohideen
12. 09-07-2017 In riot-hit Basirhat, Muslims pool money to help Hindu neighbours - Haja Mohideen
13. 08-07-2017 Gau rakshaks followed Jharkhand trader for hours before lynching him | A blow by blow account by pol - Haja Mohideen
14. 06-07-2017 வேடிக்கை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படித்த அன்பு சொந்தங்களே . - Haja Mohideen
15. 06-07-2017 முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..? - Haja Mohideen
16. 06-07-2017 ஜமால் சார் - ஒரு ஈமானிய ஆளுமை - Haja Mohideen
17. 04-07-2017 ஜமால் சார் ! - Haja Mohideen
18. 01-07-2017 ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் - Haja Mohideen
19. 28-06-2017 India needs to legally reclassify hate crimes as acts of terror. - S Peer Mohamed
20. 28-06-2017 Indians protest lynching of Muslims - S Peer Mohamed
21. 27-06-2017 15 year old Junaid Khan stabbed to death; brother says were called beef eaters - S Peer Mohamed
22. 26-06-2017 EID Celebration: LV Street Photos - S Peer Mohamed
23. 20-06-2017 உலகம் முழுவதும் _ஒரே_மாதிரி! - Haja Mohideen
24. 17-06-2017 அனைத்து சமுதாய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி - Haja Mohideen
25. 15-06-2017 லண்டன் தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்! - Haja Mohideen
26. 14-06-2017 மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை ! - Haja Mohideen
27. 12-06-2017 "பயித்தியார பய ஊர்ல பணியார மழ பெஞ்சிச்சாம்". பிளாஸ்டிக் அரிசி, முட்டை - Haja Mohideen
28. 11-06-2017 பிளாஸ்டிக் அரிசி மற்றொரு போலி பரப்புரை - Haja Mohideen
29. 02-06-2017 கவிக்கோ : ஒரு தந்தையைப்போல என்னை நேசித்தவர் - S Peer Mohamed
30. 28-05-2017 மக்களை போராட விடுங்கப்பா .. - Haja Mohideen


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..