பணகுடி பகுதியில் போலி வெளிநாட்டுவேலை வாய்ப்பு நிறுவனங்களில் போலீசார் ரெய்டு

Posted by Haja Mohideen (Hajas) on 3/25/2011

பணகுடி பகுதியில் போலி வெளிநாட்டுவேலை வாய்ப்பு நிறுவனங்களில் போலீசார் ரெய்டு
 
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2011,03:00 IST

 

பணகுடி:

பணகுடி வட்டார பகுதிகளை சேர்ந்த 8க்கும் மேற்பட்ட போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது ரகசிய போலீசார் ரெய்டு நடத்தினர். இதன்மூலம் சுமார் 80 லட்ச ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோகத்தில் பணகுடி, வள்ளியூர், காவல்கிணறு, வடக்கன்குளம், ராதாபுரம், கூடன்குளம், ஆரல்வாய்மொழி உட்பட பல்வேறு பகுதிகளில் போலியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த படித்த மற்றும் ஏழை இளைஞர்களிடம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாங்கி தருவதாகவும், இலவச விசா வாங்கி தருவதாகவும் கூறி மும்பைக்கு அழைத்துச் சென்று அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.குறுகிய கால இடைவெளியில் விசா வரும், வெளிநாட்டு வேலை உறுதியாக கிடைக்கும் என்று போலியான பல்வேறு நிறுவனங்கள் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிறுவனங்கள் ஏதாவது லைசென்ஸ் நம்பர்களை குறிப்பாக கேரளா, மும்பை போன்ற பகுதிகளை சேர்ந்த ஏஜன்சிகளின் நம்பர்களை பயன்படுத்தி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து அரபு நாடுகளுக்கு ஆட்கள் தேவை என்று தினசரி நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் செய்கின்றன. இதன் மூலம் படித்த மற்றும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருவதாக உள்ளூர் போலீசார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அனுப்பபட்டது.போலி விசாக்கள் மற்றும் போலியான நிறுவனங்கள் மூலம் அனுப்பபடும் இளைஞர்கள் மற்றும் வீட்டு வேலைக்காக அனுப்பபடும் பெண்கள் உட்பட பலர் வெளிநாட்டு மோகத்தால் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பல்வேறு பொதுநல அமைப்புகள் மாவட்ட அளவிலான போலீசாருக்கு புகார் தெரிவித்ததின் பேரில் போலீசார் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து போலி நிறுவனங்கள் நடத்தும் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது ரெய்டு நடத்தினர்.அதில் 8 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது மாவட்ட ரீதியாக குற்றப்பிரிவு சம்மதத்தோடு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியும், அவர்களது நிறுவனங்களை ரத்து செய்யவும் குடிபெயர்ப்பு அதிகாரிக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது. இதன்மூலம் 80 லட்சம் ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராதாபுரம் தாலுகா பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=212825






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..