நெல்லை 500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி கைது: லேப்டாப், பிர்ன்டர் பறிமுதல்

Posted by Haja Mohideen (Hajas) on 11/6/2010

500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில் கைது: லேப்டாப், பிர்ன்டர் பறிமுதல்

நவம்பர் 07,2010,04:18 IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கணவன், மனைவி இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள், லேப்டாப், ஸ்கிரீன் பிரின்ட் மிஷின் மற்றும் கார் என 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

நெல்லை ஜங்ஷன் பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு ஒருவர் 500 ரூபாய் நோட்டை மாற்றி 200 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி சென்றார். இதுபோல் அவர் தொடர்ந்து 500 ரூபாயை மாற்றுவதும், மீதமுள்ள ரூபாயை வாங்குவதுமாக இருந்தார். இதனால் அவர் மீது பட்டாசு கடைக்காரருக்கு  சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை கடைக்காரர்கள் பரிசோதனை செய்த போது, ரூபாய் நோட்டுகளின் நம்பர்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இதையடுத்து பட்டாசு கடைக்காரர் அவரை பிடித்து நெல்லை ஜங்ஷன் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரஷித்(47) என்பதும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பழையபேட்டை இ.பி.,அலுவலகம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் கூறினார்.

 

இதையடுத்து பழையபேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கலர் ஜெராக்ஸ் பிரின்டர், ஸ்கேனர், லேப்டாப் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு தயாரிப்பதற்கு அப்துல் ரஷித்திற்கு உதவியாக இருந்ததாக அவரது மனைவி அஷ்வதி(45) கைது செய்யப்பட்டார்.

 

"திடுக்'தகவல்: கேரளாவில் அப்துல் ரஷித் டிசைனிங் இன்ஜினியரிங்காக வேலைபார்த்து வந்தார். அவரது முதல் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். பின்னர் அஷ்வதி என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டை ஸ்கேனர் மூலம் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஸ்கீரின் பிரின்டிங் மூலம் காந்திபடம், கம்பிகோடு, ஆகியவற்றை பிரின்ட் செய்து 500 ரூபாய் கள்ளநோட்டை தயாரித்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் பல ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக அப்துல்ரஷித்தை ஏற்கெனவே கேரள போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.dinamalar.com/district_detail.asp?id=121659






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..