வேண்டுகோள்: ஏர்வாடி பொது ஜ‌மாத்

Posted by S Peer Mohamed (peer) on 10/10/2010

எல்லாப்புகழும் இறைவனுக்கே


அன்புடையீர்,

                    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

     ஏர்வாடி பொது ஜமாத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு தாங்கள் முயற்சிகள் செய்து வருவதாக அறிகிறேன், மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எடுக்கும் முயற்சி இறைவன் அருளால் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

 ஏர்வாடி பொது ஜமாத் 1978ம் வருடம் நமது ஊரில் இரு சமுதாயத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தொடங்கப்பட்டது. அந்த பிரச்சனையில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களில் சிலரின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டதையும,; வழக்கு மன்றத்திற்கு பல வருடங்கள் அவர்கள் அலைந்ததையும் அதில் நான் ஒருவன் என்பதையும் அதன் காரணமாக அரசு பணியில் மீண்டும் சேர்வதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தும் அந்த வாய்பை இழந்தவன்; என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இருப்பினும் உங்களுடைய ஆதரவாலும்,  ஒத்துழைப்பாலும், இறைவன் அருளாளும் நான் நல்ல நிலையில் இருக்கின்றேன். அனைத்து சமுதாய மக்களும் மதிக்கும் வகையில் வாழ்ந்து வருகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே

 1978 வருடத்திலிருந்து ஏர்வாடி பொது ஜமாத்திற்கு பல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடைய நிர்வாகத்தில் பொது ஜமாத் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் அல்ஹாஜ்.ளுஆ.ஜாலாலுதீன்  அவர்களிடம் தலைவர் பதவி திணிக்கப்பட்டு சில நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் பொது ஜமாஅத்  தலைவராக பதவியேற்றார். அவர்கள் பதவியேற்றப்பின் முறைப்படி மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.  சிறந்த நிர்வாகி, எல்லோரையும் அரவனைத்து செல்வார்கள். சமுதாய மக்களிடையை ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்த்து வைப்பார்கள்  என்று நாம் நம்பினோம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் நாம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.. ஏர்வாடி கீழ முஹல்லாஹ் பள்ளிவாசல் முடக்கப்பட்டபோது நிர்ப்பந்தத்தால் தலையிடாமல் அவர்கள் ஒதுங்கியதால் தற்போதிய தலைவர்; ஜனாப் து.முகம்மது இப்ராஹிம் அவர்கள் தலைமையில், கீழ முஹல்லாஹ் பள்ளி வாசல் மீட்கப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே. எனவே, ஜனாப் து.முகம்மது இப்ராஹிம் அவர்கள் பிரச்சனையின் அடிப்படையில் பொது கருத்தின் மூலம் பொது ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        தற்போது தாங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் சில அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஏர்வாடியில் உள்ள சில முஹல்லாக்களில் ஜமாஅத்;  முறைப்படி செயல்படவில்லை. அதற்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுகுழுவும், செயற்குழுவும் இல்லை.  சில முஹல்லாக்கள்; கருத்து வேறுபாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. எனவே அடிப்படை சரியாக இல்லை. அடிப்படை இல்லா கட்டிடம் நிலைக்காது. ஒவ்வொரு முஹல்லாவும் 10 உறுப்பினர்கள் கொண்ட பட்டியலில் தரவும் அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறீர்கள். ஆனால் அந்த பட்டியல் முஹல்லாஹ் முத்தவல்லிகளின் விறுப்பு, வெறுப்புகளுடன் தயாரிக்கப்பட்டவையாகும். முறைப்படி பொது கருத்தின் அடிப்படையில்  தயாரிக்கப்பட்டவை அல்ல என்பது பொதுவான கருத்து.

       தாங்கள் புதிய நிர்வாகிகளை பொது ஜமாஅத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மேற்கண்ட அடிப்படை பிரச்சனைகளை முதலில் களைய வேண்டும், அதன் மூலம் நல்ல அடிப்படையுடன் கூடிய பொது ஜமாஅத் அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதில் அவசரம் காட்டவேண்டாம்.

       மேலும், பொது ஜமாஅத் தலைவரை  தேர்ந்தெடுக்கும் போது கீழ்;கண்ட  தகுதிகள் நிர்ணகிக்கப்பட்டால்  பொது ஜமாஅத் சிறப்பாக அமையும், நிலைத்து நிற்கும் என்பது பொதுவான கருத்து.

 

1.       தலைவர் பதவி திணிக்கப்பட கூடாது.

2.       பொது கருத்து அடிப்படையில் இருக்க வேண்டும் அல்லது தேர்தல் நடத்தப்பட வேண்டும்

3.       சுன்னத்துவல் ஜமாஅத் கொள்கை  அடிப்படையில் 5 நேர தொழுகையாளியாக இருக்கவேண்டும்.

4.       முழு நேர பணி செய்பவராக இருக்க வேண்டும்.

5.       ஓரளவாவது  மக்கள் பணியில் ஈடுபட்டவராக இருக்க வெண்டும்.

6.       ஓரளவு பொருளாதார வசதி கொண்டவராக இருக்க வேண்டும்.

7.       சாமானிய மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும்.

8.       மத்திய, மாநில் அரசுகளையும் அதன் அதிகாரிகளையும் பிரச்சனையின் அடிப்படையில் சந்திக்கும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

9.       உறுதியானவராகவும் எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாதவராகவும்  இருக்க வேண்டும்

10.    அரசியல் கட்சியில் பொறுப்பில்  இருப்பவர்கள் பதவி ஏற்றதும் பொருப்பை விட்டு விலக வேண்டும்.

 

                             வஸ்ஸலாம்

                                                   

இங்ஙனம்,

அண்ணாவி MAS உதுமான்

நாள் : 08.10.2010      

செயலாளர், ஏர்வாடி வளர்ச்சி மன்றம்,
ரஹ்மத் கல்வி மற்றும் அறக்குழு
இஸ்லாமிய பைத்துல்மால்






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..