திருநெல்வேலி, நவ. 25: திருநெல்வேலியில் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் டிசம்பர் 12, 13 ஆம் தேதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இப்போது இóந்த முகாம், அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
டிசம்பரில் நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் பிப்ரவரி மாதம் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.