நெய்யாற்றின்கரை அருகே கார்- லாரி மோதலில் தமிழ் நாட்டை சேர்ந்தவர் சாவு 3 பேர் படுகாயம்
நெய்யாற்றின்கரை, நவ.18-
நெய்யாற்றின்கரை அருÚ க நேற்று அதிகாலை கார்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏர்வாடியை சேர்ந்தவர்
நெல்லை அருகே உள்ள நாங்குநேரி ஏர்வாடி தபால் நிலைய தெருவை சேர்ந்தவர் மாது பிள்ளை (வயது 34). டிரைவர். இவர், சுப்புலட்சுமி (50), கோபாலன் (55), தினேஷ் (23) ஆகியோருடன், உறவினர் ஒருவரை வழியனுப்ப நேற்று திருவனந்தபுரம் விமான நிலை யம் வந்தார்.
அவரை வழிய னுப்பிவிட்டு, அவர்கள் 4 பேரும் திரு வனந்தபுரம் விமான நிலை யத்தில் இருந்து ஒரு காரில் ஏர்வாடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் அந்த கார் நெய்யாற்றின்கரை மூன்று கல்லின்மூடு பகுதியில் செல்லும் போது, எதிரே வந்த லாரியுடன் எதிர் பாராத விதமாக மோதியது.
ஆஸ்பத்திரி செல்லும் வழியில்...
இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருவ னந்தபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மாது பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
சுப்புலட்சுமி, கோபாலன், தினேஷ் ஆகியோர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். மாது பிள்ளை உடல் மருத்துவ கல்லூரி பிண அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நெய்யாற் றின்கரை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=527819&disdate=11/18/2009&advt=2
|