ஜாமியா இஹ்ஸானுல் உம்யான் (பார்வையற்றோர் மதரஸா)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு பார்வையற்றவருக்காக 40 அடிவரை வழிகாட்டுவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிடும். மற்றொரு ரிவாயத்தில் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகிறது". அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி). நூல்: தப்ரானி பாகம் 3; பக்கம்: 138

தமிழகம் முழுவதும் பார்வையற்ற முஸ்லீம்களுக்காககல்வி நிறுவனங்களோ, ஆதரவு இல்லங்களோ, நமது சமூகத்தில் இல்லை. இதன் காரணமாக . பார்வையற்ற முஸ்லீம்கள் பிற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும், ஆதரவு இல்லங்களிலும் தங்கி கல்வி பயிலும் காலங்களில் அவர்கள் மூலமாக பெற்ற உதவிகளினால் ஈர்ககப்பட்டு இஸ்லாத்தை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். (இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன்).

5பார்வையற்ற முஸ்லீம்களின் இந்தக் கவலையான நிலை மாறவும், அவர்களின் இம்மை மறுமை வாழ்க்கை வெற்றிக்காகவும் அல்லாஹ்வின் உதவியால் தமிழ்நாட்டில் முதன்முறையாக முஸ்லிம் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 8. 2009 ஆம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)

இந்த மதரஸாவில் குர்ஆன் மனனம் செய்தல், மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் சுன்னத்தான வழிமுறைகள் கற்றுத் தரப்படுகின்றது. மேலும் பார்வையற்றோருக்கான புள்ளி எழுத்துக்கள் மூலம் (பிரைலியின் மூலம்) தமிழ், ஆங்கிலம் , அரபி மொழிகள் கற்றுத் தரப்படுகின்றது மற்றும் 3. TNPSC மற்றும் அரசாங்கத்தின் இதர பணிகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் அரசின் சலுகைகள் மற்றும் சுயதொழில் சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கக்கூடிய ஆலோசனை மையமும் இயங்கி வருகிறது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

இங்கு பார்வையற்ற மாணவர்களுக்கு உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மதரஸாவிற்கென்று நிரந்தர வருமானமோ சொந்த இடமோ கிடையாது. இத்தகவலை காணும் நல் உள்ளங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பார்வையற்ற மாணவர்களின் ஈருலக வெற்றிக்கான ஒளி காட்டும் விழியாக தங்களது உதவிகள் அமையும்.

உதவி செய்யும் நல்லுள்ளங்களுக்காக பார்வையற்ற மாணவர்கள் அனுதினமும் துஆச் செய்கிறார்கள்.

குறிப்பு: தங்கள் பகுதியில் முஸ்லிம் கண் தெரியாதவர்கள் வசித்தால் அத்தகவலை தெரிவிக்கவும். மேலும் உங்கள் தொடர்புகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் இத்தகவலை பகிரவும்.

முகவரி:
ஜாமிஆ இஹ்ஷானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸா,
அழகர்கோவில் ரோடு,
மாத்தூர் பிலால் நகர்
மதுரை.
செல்: +918973854134, +919942113079.
Address:
JAMI EHSAANUL UMYAN
Madrassa for visually impaired Alagar koil Road
Mathur Bilal Nagar
Madurai.
Cell: +918973854134, +919942113079.