Home >> News >> Detail
  Login | Signup  
Eruvadi Muslim Association







ஈமானின் புதிய தலைவர் நியமனம் .

Posted by S Peer Mohamed (peer) on 3/16/2019 5:54:57 PM

 

தேதி:15 மார்ச், 2019

ஈமானின் தற்போதைய தலைமையின் பதவிகாலம் கடந்த 2018 ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவுபெற்றது.

ஆனால்அந்த நேரத்தில் ஈமானிய மொட்டுக்கள், ஈமானின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஈமானின் 40ஆவது ஆண்டு மலர் வெளியீடு ஆகிய முக்கியமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி சூரா உறுப்பினர்களின் ஆலோசனையின் படி தள்ளிவைக்கப் பட்டது.

அல்ஹம்துலில்லாஹ். அப்பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று விட்ட நிலையில், கடந்த மாதம் நடந்த சூரா கூட்டத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முதல் கட்ட பணிகள் திட்டமிடப்பட்டது. அதன் படி சூரா உறுப்பினர்கள் மற்ற சூராவில் உள்ள உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு இதனைப் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரவர் சூரா உறுப்பினர்களையும் உறுதிப் படுத்தினர்.

இன்று (15-மார்ச்-2019) சகோதரர் அப்துல்லாஹ் இல்லத்தில் புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் ஈமானின் அனைத்து சூரா உறுப்பினர்களும் பங்கேற்றனர்.ஈமானின் கெளரவ ஆலோசகர்கள் சகோதரர் அலி (ENOC),  சகோதரர் ஷம்சுதீன் ஷாபி அவர்களும் இதில் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு ஈமானின் செயளாலர் இப்ராஹீம் கனி அவர்கள் ஈமான் 40ஆவது ஆண்டு மலரை வழங்கினார்கள்.

சூரா உறுப்பினர்கள் தாங்கள் தொடர்பு கொண்ட ஈமான் உறுப்பினர்களின் கருத்துக்களை இக்கூட்டத்தில் பதிவு செய்தனர். பின்னர் சகோதரர் பீர் இஸ்லாத்தில் தலைமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். பின்னர் சகோதரர்  ஹனீஃப் அவர்கள் ஈமானின் பைலாவின் அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையினை விவரித்தார்.

அதன் பின்னர் சகோதரர் அலி அவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது என்னென்ன குணங்களின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று விவரித்தார்கள். அதன் பின்னர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி  நடைபெற்றது.

இதில் நேரில் பங்கேற்ற சூரா உறுப்பினர்கள்;

1. அல்தாஃப்
2. ஹனீஃப்
3. தெளஃபீக்
4. அஹமத் முஹைதீன்
5. பீர் முஹம்மத்
6. முஹைதீன் (City Gold)
7. ஷாபி
8. இப்ராஹீம் கனி
9. செய்யது
10. ஜமால் (City Gold)
11. ரபீக் (அபு தாபி)
12. ஆரிஃப் (அபு தாபி NMC)
13. அமீர் புஹாரி
14. ஜெய்னுல்
15. அப்துல்லாஹ்
16. ஸர்ஃப்ராஸ்

நேரில் வரமுடியாத சூரா உறுப்பினர்களான 17. உவைஸ்,  18. முஹம்மது (அபு தாபி), 19. நவ்ஸாத்  ஆகியோர் தங்களது  தேர்வை மொபைல் மூலமாக மேற்பார்வையாளர்களிடம் தெரிவித்தனர். அதிமகான சூரா உறுப்பினர்களின் தேர்வின் படி சகோதரர் ஹனீஃப் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.  அல்லாஹு அக்பர். ஹனிஃப் அவர்கள் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களை துணைத் தலைவராக நியமித்தார்கள். அல்லாஹு அக்பர்.

இன் ஷா அல்லாஹ் அடுத்த சூரா கூட்டத்தில் மற்ற நிர்வாகிகளைத் தலைவரும், துணைத்
தலைவரும் இணைந்து நியமனம் செய்வார்கள். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகோதரர் ஹனீஃபிற்கும் துணைத் தலைவர் அப்துல்லாஹ்விற்கும்  வாழ்த்துகள். சிறப்பான தேர்வு. அல்ஹம்துலில்லாஹ்.

இவர்களது  சீரிய தலைமையில் ஈமான் மென்மேலும் சிறப்புடன் பணியாற்றிடவும், மீண்டும் ஒரு மதினா என்ற இலக்கை நோக்கி வீரியமாக செயல்படவும் பிரார்த்திக்கின்றோம். இலக்கை அடைந்திட அனைவரும் இணைந்து  செயல்பட்டிட வேண்டும். மிகப்பெரிய பளுவான சுமையை அனைவரும் இழுத்து செல்லும்போது எளிதாக கொண்டு  செல்லலாம். அனைவரும் இழுக்கும்போது ஒருவர் இழுக்காமல் இருந்தாலும் அதனை கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும். ஒருவரின் அலட்சியம், சோம்பல் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே அனைத்து சூரா மெம்பர்களும் முழுமையாக தலைமைக்கு கட்டுப்பட்டு, செய்ய வேண்டிய பணிகளை சிறப்புடன் செய்ய கேட்டுக் கொள்கிறோம். 

அல்லாஹ் நமது பணிகளை ஏற்று ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக.  அவன் விரும்பக் கூடியதை செய்யும் வலிமையையும், அவன் வெறுப்பதிலிருந்து விலகி கொள்ளும் பண்பையும்  தந்திடுவானாக.

ஈமானின் 40 ஆண்டு மலர் ஈமானின் அடுத்த பத்தாண்டிற்கான இலக்குகளை தெளிவாக விளக்குகின்றது. ஒவ்வொருவரும் அதனை வாங்கி படிக்குமாறு அன்புடன் இந்த நல்ல தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

ஈமானின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இந்த அளப்பரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தனது சக முஸ்லிம் சகோரரது துயரத்தை போக்குவது மஸ்ஜிதுந் நபவியில் இஃதிகாஃபில் ஈடுபடுவதை விட சிறந்த பணி என்பதை உணர்ந்து தங்களால் ஆன பங்களிப்பை உவப்புடன் முன்வந்து வழங்கவேண்டும்.

அல்லாஹ் நாடினால் நமது இந்தப் பணி மீஸான் தராசில் நன்மையின் எடையினை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்
ஈமான் அறக்கட்டளை .





EMAN NEWS
1. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
2. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
3. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
4. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
5. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
6. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
7. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
8. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
9. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
10. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
12. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
13. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
14. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
15. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
16. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
17. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
18. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
19. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
20. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
21. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
22. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
23. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
24. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
25. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
26. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
27. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
28. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed
30. 16-00-11 EID Get together; Nov - 2011 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..