ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு

Posted by S Peer Mohamed (peer) on 12/21/2017 12:39:47 PM

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் ஏர்வாடியின் நீர் வளத்தை பாதுகாக்க கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

1. தெருக்களில் மழை நீர் சேகரிப்பு தளங்கள் அமைப்பது.
2. ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுப்பது மற்றும் சுத்திகரிப்பது.
3. ஆற்றில் தடுப்பணைகள் அமைத்து நீலத்தடி நீரை அதிகரிப்பது.
4. வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது.
5. வீடுகளில் கழிவு நீரை உறிஞ்சும் தொட்டிகளை அமைப்பது.

இதன் ஆரம்பமாக தற்பொழுது, முஹைதீன் பள்ளித் தெருவில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து கொண்டிருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த முறை வெற்றி பெற்றால் அடுத்தடுத்த தெருக்களிலும் இதே முறையில் அமைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்த கட்டமாக இரண்டாவது தெரு மற்றும் மதினா நகரில் ஆற்றில் கலக்கும் சாக்கடைகளை தடுத்து சோக் பிட் முறையில் தூய்மைப் படுத்தப்படும்.

இரண்டாவது தெரு பாலத்தின் அருகில் எளிதான முறையில் தண்ணீர் தேங்க குளித்துறை அமைக்க நினைக்கிறோம். இதில் உங்களுடைய யோசனைகள் வரவேற்கப்படுகிறது. இதை பற்றி மேலும் விபரங்கள் அறிய சகோதரர் முஹைதீனை (9566773469) தொடர்பு கொள்ளவும்.
அடுத்ததாக இந்த குழுமத்தில் உள்ள நாம் எல்லோரும் நமது வீடுகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும். இதனை உடனடியாக நாம் எல்லோரும் செய்தால் ஒரு நல்ல உதாரணத்தை மக்களுக்கு காட்ட முடியும்.. உங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவு நீர் வடிகட்டும் தொட்டிகள் அமைக்க உங்களுக்கு தகவல்கள் தேவைப்படின் எங்களை அணுகவும்.

மேற் கூறியவைகளை திட்டமிட்ட படி முடித்தால் நாம் நமது திட்டத்தின் முதல் மைல் கல்லை அடைந்ததாக அமையும். பின்னர் நாம் நமது இரண்டாவது மைல் கல்லை நோக்கி நகரலாம்.

மேற் கூறியவைகளை செய்துமுடிக்க உங்கள் அணைவரின் பங்களிப்பும் அவசியமாக இருப்பதால். அணைவரும் ஒன்றாக இணைந்து இந்த திட்டத்தை செயல் படுத்த உறுதுணையாக இருக்கும் படி கேட்டுகொள்கிறோம்.

நமது குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் முஹைதீன், தங்கவேல் சார் மற்றும் ஜனாப் சலாகுத்தீன் ஆகியோர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்கள் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அதிகமாக இந்த பணிக்காக வழங்கிடுங்கள். அல்லாஹ் நம்முடைய இந்த முயற்சியை பெரும் வெற்றியாக்கி நமது மறுமை வாழ்கையை சிறப்பாக்கி வைப்பானாக.

நமது அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் நாம் செய்யும் இந்த ஸதகதுல் ஜாரியாவில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறோம்.


இப்படிக்கு
நீர் மேலாண்மைக் குழு
ஈமான் அறக்கட்டளை
9 டிசம்பர் 2017

வெளிநாடு சகோதரர்கள் இந்த திட்டங்களில் பங்கெடுக்க , ஆலோசனைகள் தெரிவித்திட சகோதரர் ஹனீப் முஹம்மத் அவர்களை தொடர்புக் கொள்ளவும். வாட்சப் : +971563434819











EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
6. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
7. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
8. 25-33-16 ஈமானிய மொட்டுக்கள் 2016 - S Peer Mohamed
9. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
10. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..