Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
(2) சவூதி அரேபியா
Posted By:sisulthan On 1/28/2009

சவூதியானது அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது. மத்தியகிழக்கின் பல்வேறு இனக்குழுக்களின் துவக்க இடமும் இது தான்.சவூதியானது நபூத், நஜ்த், ஹிஜாஸ், ரப்-உல்-ஹாலி ஆகிய நான்கு பெரும் பாலைவனங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் நஜ்த் நீங்கலாக மற்ற பகுதிகள் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நஜ்த் பகுதி தற்போதைய ஆட்சி பரம்பரையான சவூத் குடும்பத்திடம் இருந்தது. இந்த தீபகற்பம் இங்குள்ள இனக்குழுக்களின் வேறுபட்ட வாழ்வனுபவத்திற்கு மூலாதாரமானதாகும். அவர்களின் வாழ்க்கை பாங்கு பாலைவனச்சூழலை எதிரொளிப்பதாக இருந்தது. இவர்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். அப்பகுதியில் கூடாரமிட்டு தங்களுக்குதேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் ஒட்டக கூட்டங்களோடு நகர்ந்தார்கள். வேறு சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தேடி பல பகுதிகளுக்கும் நகர்ந்தார்கள். இவர்களுக்கென்று எவ்விதமான இலட்சிய உணர்வு இருக்கவில்லை. இவர்களே பதூயீன்கள். இந்த தீபகற்பத்தில் பேரீத்தப்பழ விவசாயம் பெருமளவில் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள்.
இன்றைய சவூதியானது 1932 ல் அப்துல் அஸீஸ் இப்னு சவூத் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன் முன்னர் அது ஒருங்கிணைவை அடைந்திருக்கவில்லை. பல்வேறுபட்ட நபர்களின் கட்டுப்பாட்டில்அதுஇருந்தது. நஜ்தை அதிகாரம் செய்த சவூத் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டார். இவரே வஹ்ஹாபிசத்தின் அரசதிகார வடிவம்.
இந்த இடத்தில் பிரிட்டனின் வார்ப்பான அப்துல் வஹ்ஹாபை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதிருக்கிறது. வஹ்ஹாபியத்தின் தந்தையான அப்துல் வஹ்ஹாப் நஜ்த் பாலைவனத்தை அடுத்த உயைனாவில் பிறந்தார். மதகல்வியை முடித்த பிறகு அடுத்துள்ள பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. மத்தியகிழக்கின் பெரும்பகுதி அப்போது துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் இருந்தது. மத்திய கிழக்கை கைப்பற்றுவதற்கான குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதிகளை சொந்தமாக்குவதற்கான கருவியாக பிரிட்டன் இவரை பயன்படுத்திக் கொண்டது. பிரிட்டன் காலனிய அமைச்சக அதிகாரியான ஹெம்பரை இதற்காக களம் இறக்கியது. இந்த பணிக்காக இஸ்லாமிய அடிப்படைகளை கற்றுத்தேர்ந்த ஹெம்பர் அரபி மற்றும் துருக்கி மொழியையும் கற்றார்.
ஆரம்பத்தில் துருக்கி வந்த அவர் அஹ்மத் எபண்டி என்பவரிடம் ஹதீஸ்கள் குறித்து விரிவாகக் கற்றுக் கொண்டார்.பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு அப்துல் வஹ்ஹாபை சந்திக்கிறார். அப்துல் வஹ்ஹாபுடனான சந்திப்பு ஹெம்பருக்கு ஒரு துவக்க புள்ளியாக மாறுகிறது. அப்துல் வஹ்ஹாபுடனான பல்வேறுபட்ட உரையாடல்கள் ஹெம்பருக்கு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற உதவின. இதற்கிடையில் பிரிட்டன் அன்று ரியாத் பகுதியை ஆண்டுவந்த இப்னு சவூதிடம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிறகு ஹெம்பர் அப்துல் வஹ்ஹாபை இப்னு சவூதிடம் அறிமுகப்படுத்தினார். மூளை+அரசதிகாரம் இரண்டும் சேர்ந்து கொண்டதால் பிரிட்டன் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற தொடங்கியது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன் வைத்தல் என்ற கொள்கையின் படி இப்னு சவூத் பலரை கொன்று குவித்தார். பல்வேறு பட்ட வன்முறைகள் இதன் பேரில் நடந்தேறின. அப்துல் வஹ்ஹாபின் மூளை ஒரு பெரும் முடுக்கியாக இருந்தது.பிரிட்டன் தன் உளவாளியான ஹெம்பர் மூலம் சாதித்த இவ்விஷயங்கள் ஹெம்பரின் டைரிகுறிப்பில் காணகிடைக்கிறது. இந்த ஆவணம் பிரிட்டனின் ஆவண காப்பகத்தில் இருக்கிறது.மேலும் இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.இதை மறுத்து தூய்மைவாதிகள் தரப்பில் பல்வேறு காலகட்டங்களில் மறுப்புகள் வெளியாயின. ஆனால் அவர்களால் அந்த மறுப்புக்கான தெளிவான ஆதாரத்தை தெரிவிக்கமுடியவில்லை.வஹ்ஹாபிசத்தின்
பின்புலம் இது தான். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க பகுதியில் அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதி சவூத் குடும்பத்திடம் இருந்தது. இது துருக்கிய உதுமானிய பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இதனால் அவர்கள் இப்னு ரஷீத் என்பவரை தூண்டி விட்டு சவூத் குடும்பத்தினரிடமிருந்த பகுதிகளை கைப்பற்றினர். இதனால் சவூத் குவைத்திற்கு சென்றார்.பின்னர் சவூதின் மகன் அப்துல் அசீஸ் குவைத்திலிருந்து திரும்பி வந்து 1901 ல் பிரிட்டன் துணையுடன் தன் மூதாதையர் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். பிரிட்டனின் முழு ஆதரவு இருந்ததால் அவரால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடிந்தது.1902ல் மக்கா மற்றும் மதீனாவை கைப்பற்றினார். வஹ்ஹாபிய கருத்தியல்படியான அனைத்துவித அரங்கேற்றங்களையும்அப்துல் அசீஸ் செய்தார். அறிவியல் வளர்ச்சியை அவர் வஹ்ஹாபியஅடிப்படையில் பார்த்தார். தொலைபேசி, ரேடியோ, ஷவர் போன்றவைஇஸ்லாமிய அடிப்படைக்கு விரோதமாக பார்க்கப்பட்டது. பின்னர் அவராலேயே அது ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.(தற்போதையதூய்மைவாதிகளின் லேப்டாப், சி.டி,டி.வி.டி, வீடியோ கான்பரன்ஸ் மாதிரி). அப்துல் அசீஸ் எல்லைகளை விரிவுபடுத்தி ரியாத்தை தன்தலைநகராக மாற்றினார். 1932 ல் அரேபிய தீபகற்பம் முழுவதுமான பகுதி மன்னராட்சி சவூதி அரேபியா என பெயரிடப்பட்டது. முப்பதுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது சவூதிய வளர்ச்சியின் பெரும் துவக்கப்புள்ளி. இது சவூதியின் வடிவத்தில் பெரும்மாற்றத்தை கொண்டு வந்தது. சவூதிகளின் வாழ்க்கைத்தரம் இதனால் மாறியது. பெட்ரோ-குழாய்கள் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டன. இரண்டாம் உலகபோரின் மிக முக்கிய இயங்கு சக்தியாக பெட்ரோல் மாறியது.சவூதியின் வடிவமைப்பே பெட்ரோலாக மாறியது.இவருக்கு பிறகு அவருடைய மகனான பைசல் பதவிக்கு வந்தார். பைசலின் ஆட்சிகாலத்தில் சவூதி இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏராளமானோர் வர தொடங்கினர்.(வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் முதன் முதல் வேலைக்காக வரதொடங்கியது சவூதியில் தான்) இவர்களின் உழைப்பு அவர்களின் வாழ்வியக்கமாக இருந்தது. ஐரோப்பிய மூளையும், வளரும் நாடுகளை சேர்ந்தவர்களின் மலின உழைப்புமே இவர்களை இன்றும் ஒட்டகங்களிலிருந்து, பென்ஸ் காருக்கு நகர்த்தி வருகிறது. காரிலிருந்து வரும் புகை எல்லா இடைவெளிகளையும் இட்டு நிரப்பி வருகிறது.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..