Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம்
Posted By:sohailmamooty On 1/3/2009

hvor hurtigt virker amlodipin

amlodipin bivirkninger online
 
Tamil entertainment portal Koodal.com

இரண்டாம் உலகப்போரில் பிரான்சின் நிலப்பகுதிகளை ஹ’ட்லரின் ஜெர்மனி ஆக்கிரமித்துக் கொண்டது. எனவே அந்த ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க பிரான்ஸ் தனது காலனியாதிக்கத்திற்குட்பட்ட அல்ஜ“ரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து காலாட்படைகளை திரட்டி போர்க்களத்திற்கு அனுப்பியது. அந்தப் படைவீரர்களும் பிரான்சை தனது தாய்நாடாகக் கருதியே விடுதலைப்போரில் பங்குபெற்றார்கள். உயிர்த்தியாகமும் செய்தார்கள். இத்தகைய மேன்மையான அர்ப்பணிப்பு மனோநிலையுடன் அவர்கள் பிரஞ்சுப்படையுடன் இரண்டறக் கலந்திருந்தாலும், பிரஞ்சு அரசாங்கத்தாலும் ராணுவத்தாலும் அவர்கள் நிராகரிப்பிலான இரண்டாம் பிரஜையாகவே வழிநடத்தப்பட்டார்கள். அல்ஜ“ரிய, ஆப்பிரிக்க படைவீரர்கள் தம் இன்னுயிரை அர்ப்பணிக்கத் துணிந்தநிலையிலும், தாம் தாய்நாடாக மதிக்கும் பிரான்ஸ் தேசத்தின் நீடித்த இனவெறி அரசியல் நிலைப்பாடு தம்மை அவமானப்படுத்துவதை சகித்துக்கொள்ளமுடியாமல் தவித்தனர். தமது அடையாளங்களை உறுதிசெய்துகொள்ளவேண்டிய நெருக்கடி நிலையும் உயிரை பலிகேட்கும் துர்வேட்கையும் ஒருசேர இணைந்த போரினை அவர்கள் எதிர்கொண்டார்கள். தமக்காக போர்புரியும் மக்கள்மீதும் இனத்துவேஷத்தை கட்டவிழ்த்துவிட்ட பிரஞ்சு ஆதிக்க மனோநிலையையும் அதற்கெதிராக மனம் வெம்பிய மனித உள்ளங்களின் கொந்தளிப்பையும் படைப்புக்களமாகக் கொண்டு 2006இல் வெளியான திரைப்படம் ''பொற்காலம்'' (Days of Glory)1.
1943, அல்ஜ“ரியாவின் ஒரு கிராமப் பிரதேசம். ஒரு பெரியவர் தெருவொன்றில் வீரத்துடனான தன்னெழுச்சியுடன் குரல்கொடுத்துக் கொண்டே நடந்துவருகிறார். ''பிரான்சின் நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்திருக்கும் ஜெர்மனியர்களை நாம் துரத்தவேண்டும். அனைவரும் வாருங்கள்! நமது ரத்தத்தால் ஃபிரஞ்சு தேசியக்கொடியை கழுவி சுத்தப்படுத்தவேண்டும்! பிரான்சை சுதந்திரமடையச் செய்யவேண்டும்!'' இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரள்கின்றனர். மைய கதாபாத்திரங்களில் ஒருவனான சையத்தும் அந்தக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து செல்கிறான். அவனது தாய் அவனைப் பின்தொடர்ந்து ''போருக்குச் செல்லவேண்டாம் திரும்ப வந்துவிடு'' எனத் தடுக்கப்பார்க்கிறாள். ''பிரான்சிற்காகப் போரிடப்போகிறேன்'' என்று உறுதியுடன் கூறுகிறான் சையத். ''போரில் உன்னைக் கொன்றுவிடுவார்கள். உன்னை இழந்துவிட்டால் வறுமை என்னைச் சூழ்ந்துவிடும்'' என தாய் பதிலளிக்கிறாள். சையத் தனக்காக பிரார்த்திக்கச் சொல்லிவிட்டு அனைத்து இளைஞர்களும் துரிதமாக ஏறிக்கொண்டிருக்கும் ராணுவ ஊர்தியில் ஏறிக் கொள்கிறான்.

அதேவருடம், பிரான்ஸை மீட்க மொரோக்கோ நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் படையில் யாசிர் மற்றும் அவரது இளைய சகோதரர் லார்பியும் வருகிறார்கள். பல்லாண்டுகளாகத் தொடர்ந்திருக்கும் அரசியல் சூதாட்டத்தில் வளர்ச்சி žரழிந்து பொருளாதார நலம்குன்றின குடும்ப வறுமையின் காரணமாகவே இவர்கள் போரில் பங்குபெறுகிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள செடிஃப் பிரதேசத்திலிருந்து புறப்படும் படையில் அப்தெல்காதரும் மெசௌத்தும் பங்குபெறுகிறார்கள். நால்வரும் ஒருங்கிணையப்பெற்ற படைக்கூட்டம், பிரான்சை நோக்கிய பயணத்தில் 1944இல் இத்தாலி நாட்டில் சந்திக்கிறது. இந்தப் படையின் ஆணையிடும் அதிகாரியான சார்ஜெண்ட் மார்டினஸ் பரிசோதனைப் பயிற்சிகளை நடத்துகிறார். அப்தெல்காதர் தூர வைக்கப்பட்டிருக்கும் குடுவையை மிகத் துல்லியமாகக் குறிபார்த்துச் சுடுகிறான். சையத்தின் சட்டைப்பையில் வெடிகுண்டை சொருகி ''வெளியே எடு'' என மார்டினஸ் கூற, சையத் அறியாமையான மனோகதியோடு அதனைப் பிடுங்குகிறான். வெடிகுண்டின் கைப்பிடி உடைந்து கீழே விழ, மார்டினஸ் பதறிப்போய் துரிதமாகப் பிடுங்கி தூர வீசுகிறார். குண்டு பயங்கரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது. மார்டினஸ் கோபத்தில் சையத்தின் வயிற்றில் துப்பாக்கியின் பின்முனையால் பலமாகக் குத்த, அவன் சுருண்டுவிழுகிறான். அருகில் நிற்கும் மெசௌத் இந்தச் செயலுக்கு மறுப்பு கூற, மார்டினஸ் அவனருகில் வந்து ''உங்கள் அனைவரின் வாழ்வும் சாவும் என்கையில் உள்ளது'' என்று அதிகாரத் தோரணையில் பதிலளிக்கிறான். மார்டினஸ் சக மனிதம் சார்ந்து எல்லைக்குட்பட்ட பற்றுணர்ச்சி கொண்டவன்தானெனினும், பிரெஞ்ச் அரசாங்கம் மறைமுகமாகவும் தேவைப்பட்டால் நேர்முகமாகவும் செயல்படுத்தும் இனவெறிக் கொள்கையின் பிரதிநிதியாகவே இறுதியில் எஞ்சிநிற்பவன்.

அவ்விதம் நேர்முகமாக தனது கொடிய குணத்தைக் காட்டும் காட்சியொன்று படத்தில் வருகிறது. அனைவரும் வரிசையில் நின்று உணவு பெறும் களமொன்றில், பிரத்யேக உணவாக வைக்கப்பட்டிருக்கும் தக்காளிப் பழங்கள் பிரஞ்சுக்காரர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. அல்ஜ“ரியர்களுக்கோ, ஆப்பிரிக்கர்களுக்கோ மறுக்கப்படும் உணவு அது. மனம் தாளாது ஒரு ஆப்பிரிக்கப் படையினன் ஒரு தக்காளிப் பழத்தை எடுக்க, உணவளிப்பவன் அவனது கையிலிருக்கும் பழத்தைப் பறித்துவிடுகிறான். ஆப்பிரிக்கப் படையினன் அவன்மீது கோபம்கொண்டு ''ஏன் பறித்தாய்?'' எனக் கேட்க, அவன் ''பழம் உனக்குத் தருவதற்கில்லை'' என்று பதிலளிக்கிறான். ஆப்பிரிக்கப் படையினன் மனம் கொந்தளித்து அவன்மீது பாய, மார்டினஸ் வந்து அவனைத் தடுக்கிறார். அவனது உரிமைகோரும் ஆவேசம் காரணமாக தக்காளிப் பழத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறார். இந்த சம்பவத்தினை அருகிலிருந்து பார்க்கும் மெசௌத் ''ஏன் அனைவருக்கும் பழங்கள் தரப்படுவதில்லை?'' என பிரச்சினைக்குரிய கேள்வியை எழுப்புகிறான். அவனைச் சுற்றியிருக்கும் படையினரும் அக்கேள்வியை சத்தமெழுப்பி ஆமோதிக்கின்றனர். மெசௌத்தின் உணவுப் பாத்திரத்தை மார்டினஸ் பிடுங்கி உணவுப்பாத்திரத்தில் கொட்டிவிட, மௌனம் தகிக்கும் பார்வையுடன் மெசௌத் தக்காளிப் பழப் பெட்டியை தரையில்போட்டு அனைத்துப் பழங்களையும் ராணுவக் காலணியணிந்த காலால் மிதித்து நசுக்கிவிட்டு, ''இப்போது பழம் யாருக்குமில்லை'' என்று திகைத்துநிற்கும் மார்டினஸைப் பார்த்துக் கூறுகிறான். சுற்றிநிற்கும் கூட்டம் கையிலிருக்கும் உணவுக்குடுவைகளைத் தட்டி கரகோஷம் எழுப்புகிறது. போரில் சரிசமமாக போராடும் படையினரின்மீது, இருப்பளவிலும் மனதளவிலும் மாத்திரமல்லாமல், உண்ணும் உணவிலும்கூட பாகுபடுத்தும் குணத்தைக் காட்டும் பிரஞ்சு ராணுவத்தின் இன ஒதுக்க மனோகதியை அடர்த்தியான அணுகல்களுடன் சித்திரிக்கிறது இந்தக் காட்சி.

ஜெர்மனியப் படையைத் துரத்தும் பணியில் வாகை சூடிவிட்டு நகரம் திரும்பும் படையினர்களுக்கு மக்களனைவரும் வீதியில் கூடி தமது வரவேற்பினை ஆர்ப்பரிப்பாக நிகழ்த்துகின்றனர். அப்தெல்காதர் அந்தக் கூட்டத்தினிடையே வந்து கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவிக்கும் ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அவள் ஒரு பிரஞ்சுப் பெண். அன்றிரவு அவளோடு இணைகிறான். அந்த விடுமுறை நாட்கள் அவளோடு கழிய, மீண்டும் போர்க்களத்திற்கு திரும்பவேண்டிய நிலையில், அவளிடம் பிரியாவிடைபெற்றுக் கிளம்புகிறான். அவனது வாழ்வில் அவள் ஒரு புதிய அர்த்தமாகிறாள். அவளும் அவனை அவ்விதமே உணர்கிறாள். ஆயினும், இரு உள்ளங்களின் தனிப்பட்ட உணர்வுக்கலப்பு மாத்திரமே போதுமானதாகிவிடுமா? பிரஞ்சு ராணுவம் அவர்கள் இருவரின் உறவுக்கலப்பிலும் ஒருசிறிதும் வெட்க உணர்வற்று உள்நுழைகிறது. அப்தெல்காதர் போர்க்களத்திலிருந்து அவளுக்கு எழுதும் கடிதங்கள் ராணுவத் தபால்நிலையப் பிரிவில் ரகசியமாகத் தடுக்கப்படுகின்றன. அதேகதிதான் அந்தப் பெண் எழுதும் கடிதங்களுக்கும். ''ஒரு பிரஞ்சுப் பெண் அயலானைக் காதலிப்பதா?'' எனும் இனவெறிக் கொள்கையே இந்தத் தடைச்செயலுக்கான காரணமாக ஊடறுத்து நிற்பது. ஆனால் அப்தெல்காதர் தனது இன்னுயிரை துச்சமென மதித்துப் போரிட்டுக் கொண்டிருப்பது தனது அந்தரங்கத்தை ஊடுருவி நிற்கும் பிரான்ஸ் தேசத்தைக் காப்பாற்ற முயலும் நடவடிக்கைகளுடன் தொடர்கிறது.

யாசிரும் லார்பியும் ஒரு தேவாலயத்திற்குள் நுழையும் காட்சி. லார்பி அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலைத் திறந்து எவ்விதக் குற்றவுணர்வுமின்றி காசுகளைத் திருடப் பார்ப்பான். யாசிர் வேண்டாமெனத் தடுப்பார். உடனே லார்பி கேட்கிறான், ''இது கடவுளுடையதா?'' யாசிரின் பதில், ''அவற்றைத் தொடாதே'' என்பதாக வருகிறது. லார்பி காசுகளை மீண்டும் உண்டியலிலேயே கொட்டிவிடுகிறான். உடனே யாசிர் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் யேசுவின் சிலையைச் சுட்டிக்காட்டி, ''அவர்களது கடவுள் நிறையவே துன்பப்பட்டிருக்கிறார்'' என்று கூறுகிறார். லார்பி தனது உள்ளாழத்திலிருந்து கேட்கிறான், ''நான் சிறுவனாயிருந்தபோது, நமது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பிரஞ்சு ராணுவத்தினர் கொன்றார்களே, அந்தச் செயலை எந்தப் பெயரில் அழைப்பாய்?''

மறைக்கவியலாத வரலாற்றின் அவமானிக்கத்தக்க வஞ்சக முகத்தை லார்பியின் கேள்வி தோலுரித்துக் காட்டுகிறது. தம்மை வஞ்சித்த மனித இனத்தின் நலனைக் காக்க போரில் ஈடுபடும் யாசிரும் லார்பியும் வேர்தொலைந்த அடையாளங்களைப் பற்றிக் கொண்டிருப்பவர்களாக தனிமைப்பட்டு நிற்கிறார்கள். எனினும், தம் தோள்மீது ஏற்றப்பட்ட சுமையான அடையாள ஓரவஞ்சனையின் மூர்க்கமான தாக்கங்களற்று சக மனிதனை சமனியல்புடன் பார்க்கும் குணம் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றிருப்பதை அவர்களது குணப்பாங்கு வெளிக்கொணர்கிறது.

பிரஞ்சு ராணுவ அதிகாரிகள் அனைவருமே அல்ஜ“ரிய, ஆப்பிரிக்கர்களை ''முஸ்லீம்கள்'' என்றே அடையாளப்படுத்தி படம் முழுக்க குறிப்பிடுகின்றனர். அதேசமயம் போர்க்களம் என்று வந்துவிட்டால் தாய்நாட்டைக் காப்பாற்ற அனைவரும் தியாகம் செய்யவேண்டும் என்று வசனம்பேசி படைச் சமநிலையை பொய்மையுடன் பேணுகிறார்கள். மார்டினஸ் மாத்திரமே அவ்வப்போது தமது படையிலுள்ள மற்றைய இனத்தவரை சக மனிதர்களாக அணுகுபவன். தாம் தனிமைப்படுத்தப்படும் நிலையிலும், அவர்கள் தீரத்துடன் போராடுவதும், தமது அரிய உயிரை ஈந்துவதும் தியாகத்திலான தொடரனுபவமாகிறது.

மெசௌத்தின் துணிச்சலான போர்த்திறனைப் பாராட்டும் கொலோனல், மார்டினஸ’ன் தலைமையில் மெசௌத் உள்ளிட்ட ஒரு குழுவை வாஜெஸ் எனும் போர்த்தளத்திற்கு அனுப்புகிறான். அந்தக் குழுவில் அப்தெல்காதர், சையத், யாசிர் மற்றும் லார்பி பங்குகொள்கின்றனர். வாஜெஸ் ஒரு குளிர்ப்பிரதேசம். பாதிவழியிலேயே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு வெடித்து, பலர் இறந்துவிடுகிறார்கள். லார்பியும் அந்தச் சம்பவத்தில் பலியாகிவிடுகிறான். மார்டினஸ’ற்கும் பலத்த அடிபட்டுவிடுகிறது. எனவே மெசௌத் மீதமிருக்கும் சிறுபடைக்கு தலைமையேற்கிறான். ''அனைவரும் கொல்லப்பட்டுவிடுவோம், எனவே திரும்பிச் சென்றுவிடுவோம்'' என அனைவரும் மெசௌத்திடம் வற்புறுத்திக் குரல்கொடுக்க, மெசௌத் ''நமது கடமையைச் செய்யவேண்டும், அப்படி நாம் கொல்லப்பட்டுவிட்டால், நமது தியாகத்தை ஒட்டுமொத்த பிரான்ஸ் தேசமுமே ஏறிட்டுப் பார்க்கும்'' என்று துணிந்த மனதுடன் பதிலளிக்கிறான். மெசௌத்தின் பேச்சை மறுக்கவியலாமல் அனைவரும் பின்தொடர்ந்து, வழியே தென்படும் சிறு கிராமமொன்றிற்குள் நுழைகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் சக படையினரின் உடல்கள் ரத்தம் உறைய வீழ்ந்து கிடக்கின்றன. பிரஞ்சுப்படையினர்தான் வருகிறார்கள் என அறிந்துகொள்ளும் அக்கிராமத்து மக்கள் பதுங்கின இடங்களிலிருந்து வெளியே வருகின்றனர். மெசௌத்தின் தலைமையிலான குழு அங்கு முகாமிடுகிறது.

மறுநாள் ஜெர்மனிய காலாட்படை அந்தக் கிராமத்திற்குள் நுழைய, அதனைத் தடுத்து மெசௌத் உள்ளிட்ட அனைவரும் திறமையாகப் போரிடுகின்றனர். எனினும், ஜெர்மனியப்படையினர் கைபீரங்கிகளால் அவர்களது இருப்பிடங்களை தாக்கி அழிக்கின்றனர். இந்தத் தாக்குதலில் மெசௌத்தைத் தவிர்த்து அனைவரும் உயிரிழக்கின்றனர். மெசௌத்தும் கொல்லப்பட்டுவிடுவான் எனும் இறுதிப்புள்ளியில், மற்றொரு பிரஞ்சுப்படைக் குழு அவ்விடத்தில் திரண்டு ஜெர்மனியப்படையினரை அழித்தொழிக்கிறது. தனது குழுவை பறிகொடுத்துவிட்டு தனித்து நிற்கும் மெசௌத்தைத் கண்டுகொள்ளாத பிரஞ்சுப்படையினர் அங்கிருக்கும் கிராம மக்களைக் காப்பாற்றிய தற்பெருமை பதிவாக வெளியுலகத்திற்குக் காட்டவென வீடியோபடம் எடுத்துக் கொள்கின்றனர். மெசௌத் இதனை கவனித்தபடியே கடக்கிறான். மனசாட்சியுள்ள சில கிராமத்தினர் கைதட்டல் எழுப்பி மெசௌத்தின் வீரத்தைப் பாராட்டுகின்றனர். பின்பு படையினரோடு திரும்பும் மெசௌத் கொலோனலிடம் பேசமுயல, அங்கிருக்கும் பிரஞ்சுக்கார படையினன் ஒருவனால் தடுக்கப்படுகிறான். அலட்சியமாக, மற்றொரு குழுவில் மெசௌத்தை இணைத்துக் கொள்ளக் கூறிவிட்டு அகல்கிறான். மெசௌத்தின், அவனது தோழர்களின் தியாகம் ராணுவத்தில் பதவி உயர்வை வேண்டியல்ல என்றாலும், அவன்மீது மீண்டும் தீண்டப்படும் நயவஞ்சகப் பார்வைமிக்க இனவெறியின் நிழலாட்டம் இதயத்தின் பிடறியில் அடித்து துன்புறுத்துகிறது. மெசௌத் இனத்துவேஷத்தின் துரோகத்தைச் செயலற்ற அதிர்வுடன் எதிர்கொள்ளும் மனிதப்பிரதியாக வரலாற்றின் அழிக்கவியலாத சாட்சியமாகிறான்.

போரின் கொடியமுகத்தை உலகளாவிய அளவில் வெளியான பல திரைப்படங்கள் நமக்குச் சுட்டியுணர்த்தி இருக்கின்றன. எனது ஞாபகத்தில், ''சேவிங் பிரைவேட் ரியான்'' திரைப்படமும், ''தின் ரெட் லைன்'' திரைப்படமும் மறக்க இயலாதவை. இந்தப் படங்கள், போர்க்களம் தாட்சண்யமற்று கொடூரமாக விளைவிக்கும் உயிர் பறித்தல்களை பார்வையாளர்களின் இதயம் அடியாழத்திலிருந்து அதிருமளவிற்கு திரையில் உருப்படுத்தினவை. எந்தவொரு கணத்திலும் விலை மதிக்கவியலாத உயிர்பலியீடு நிகழ்த்தப்படலாம் என்கிற அபாயத்திலான பதைபதைப்புடனேயே இயந்திர பாவனையின் உன்மத்தத்தோடு மனித இருப்பு சூறையாடப்படுவதை இந்தத் திரைப்படங்களின் போர்க்களக் காட்சிகள் சுடும்நிஜத்தின் யதார்த்தத்தோடு சித்திரித்தன. போரை அவசியத்திலான வாழ்வுப்போக்காக வžகரக் கற்பனை செய்யும் எந்தவொரு இறுகிய குணம் படைத்த மனிதனையும்கூட மனதளவில் நிலைகுலையச் செய்துவிடுவதான நேரடித்தன்மையை இந்தத் திரைப்படங்கள் உருவாக்கித் தந்தன. இந்தப்படங்களைப் போலவே, ''பொற்காலம்'' திரைப்படமும் போரின் யதார்த்தத்தை பார்வையாளர்களது கண்ணெதிரே நிகழ்த்திக்காட்டுகிறது. படையினர்கள் சடாரென குண்டுகள் துளைக்கப்பெற்று உயிர்துறக்கும் காட்சிகளைக் காணும்போது அரங்கத்தில் அமர்ந்திருந்து அசைவற்றுவிட்டிருக்கும் நாம் திரைப்பரப்பை வெறுமனே பார்வையிடுதலின் வாயிலாகவே உடலுறைந்து போய்விடுகிறோம். அன்பிலும் நேயத்திலும் தவழவேண்டிய மனித இருப்பிலான உலகம் அகந்தையிலும் அழிவிலும் எங்ஙனம் சுகம் கண்டது எனும் விடைமறுக்கப்பட்ட கேள்வி நமது சிந்தனையின் எண்ணத்துள் நிழலாடுகிறது.

இயற்கையின் மாபெரும் விந்தையான மனித உயிர் என்பது கழிவுப்பொருளில் ஒட்டியிருக்கும் தூசியளவிற்குக் கூட போர்த்தளத்தில் மதிக்கப்படுவதில்லை. பூமியின் வளங்களை சுயநலத்தில் கோடிட்டுக் கொண்டு தேவையைத் தாண்டின பெரும்பகுதியை சேமித்துக் கொள்ள முண்டியடிக்கும் உடைமைப்போட்டியின் உற்பத்திகளாக பலியிடப்படுவது அப்பாவி மனித உயிர்கள் மாத்திரமே என்பதை வரலாற்றின்மீது கால்பதித்து கடந்துவந்த போர்களும் போர்களை பேராசையின் ஆயுதங்களாக்கிய ஆதிக்க சமூகங்களும் உணரக்கூடுமானதுதான்.

''பொற்காலம்'' திரைப்படத்தின் மூலவேர் நாட்டை மீட்கும் போர் குறித்த கதையாடலிலிருந்து எழவில்லை. மாறாக, அந்தப் போரில் தாம் ஆதரவளித்துப் போரிடும் நாட்டையே தமது தாய்நாடாகக் கருதிய சக இனமக்களுக்கு இழைக்கப்பட்ட இனவெறிக் கொள்கையை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் தொடர்புடையது. வஞ்சிக்கப்பட்ட உள்ளங்களின் மௌனப்பார்வையை உள்ளடக்கியது. அந்த மௌனப்பார்வை நிகழ்காலத்திலும் உலகின் பரப்புக்களில் தொடர்ந்திருப்பதான இனத்துவேஷத்தைக் கண்டு மனம்வெம்பி žற்றம்கொள்வது.

படத்தின் இறுதிக்காட்சி 60 ஆண்டுகள் கழித்து நிகழ்கிறது. நிஜ மனிதராக வாழும் முதியவரான மெசௌத் போர்த் தியாகிகளின் கல்லறைக்குச் செல்கிறார். அங்கு பிரஞ்சு, அல்ஜ“ரியா, ஆப்பிரிக்கா எனும் இனபேதமற்று ஒரேவிதமான சமநிலையில் ஆயிரக்கணக்கான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் மத்தியிலே அப்தெல்காதர், சையத், யாசிர் மற்றும் லார்பி ஆகிய தமது நிஜ படைத்தோழர்களின் கல்லறைகளைத் தேடியமர்ந்து, பொங்கியெழும் துயரத்தினூடாக தனது இதயத்திலான அஞ்சலியைச் செலுத்துகிறார். படத்தின் ஒரு காட்சியில் சையத் சொல்வான், ''ஒரு நாட்டிற்கு நான் சுதந்திரம் பெற்றுத்தந்தால், அதுவே எனது தாய்நாடு'' என்று. அது ஒருவிதத்தில் உண்மைதான். உண்மையாகவே போரிட்டு மாண்ட சையத் இறப்பின் வாயிலாகவே பிரான்ஸை தனது தாய்நாடாக தக்கவைத்துக் கொண்டுவிட்டார். ஆயினும், போரில் மாளாமல் உயிரோடு மிஞ்சின மெசௌத்திற்கு பிரான்ஸ் இப்பொழுதும் இருப்பளவில் அந்நிய உணர்வளிக்கும் தேசம்தான். இதனை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அதுவே சுடும் நடைமுறையிலான யதார்த்தம்.

1959இல், பிரான்ஸ’ன் காலனியாதிக்கத்திலிருந்த நாடுகளிலிருந்து திரண்டு வந்து பிரான்ஸைக் காக்கும் போரில் செயலாற்றிய காலாட்படைக்கு அளித்துவந்த ஓய்வூதியத்தை பிரான்ஸ் அரசாங்கம் முடக்கிவைக்க சட்டமியற்றியது. திரும்பவும் ஓய்வூதியம் வேண்டி வெகுகாலம் கோரப்பட்ட நிலையில், 2002இல் பிரான்ஸ் அரசாங்கம் முழு ஓய்வூதியத்தையும் வழங்க திரும்ப ஆணையிட்டது. எனினும் அடுத்தடுத்து பீடமேறும் நிகழ்காலம் உள்ளிட்ட அரசாங்கங்கள் அந்த ஓய்வூதிய வழங்குதலை, தொடர்ந்து முடக்கம் செய்து நிறுத்திவைத்துள்ளன. இதுவே நம் காலத்திய அரசியல் தனக்கு மட்டுமே பிடிபடும் சூட்சுமங்களுடனான புன்னகையுடன் மனமுவந்து அந்த போர்த்தியாகிகளுக்கு வழங்கியிருக்கும் ''பொற்காலம்''.

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..