Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு
Posted By:sohailmamooty On 12/31/2008

xanax weed combo

xanax and weed reddit

கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு

 
ஹவானா, டிச. 30-

கியூபாவில் கம்யூனிஸ்ட் புரட்சி ஏற்பட்டு 50 ஆண்டு கள் நிறைவடையவுள்ளது. இதற்கான பொன்விழாவை வரும் ஜனவரி 1-ம் தேதி பிரம்மாண்டமாகக் கொண்டாட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த விழாவில் பல் வேறு உலக நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப் பாக, கம்யூனிஸ்ட் கொள் கையைப் போற்றி வரும் வெனிசுலாவின் அதிபர் ஹுகோ சாவேஹும், பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மொரேல் ஸும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்வார் கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த 50 ஆண்டு களுக்கு முன்பு ஹவானா வில் உள்ள செஸ்பெடெஸ் பூங்காவில்தான் கம்யூ னிஸ்ட் புரட்சியின் வெற்றி குறித்து ஃபிடல் காஸ்ட்ரோ மக்கள் மத்தி யில் உரை நிகழ்த்தினார். இதைக் கௌரவிக்கும் விதத்தில் அந்தப் பூங்கா விலேயே கம்யூனிஸ்ட் புரட்சி யின் 50-வது ஆண்டு நிறைவு விழா கொண்டா டப்படவுள்ளது.

கியூபாவில் ஃபல்ஜென் சியோ பாடிஸ்டா என்பவர் அமெரிக்காவின் ஆதர வோடு சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இதை ஃபிடல் காஸ்ட்ரோ கடுமை யாக எதிர்த்தார். இதனால் காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்ட அமெரிக்கா பல் வேறு வழிகளில் எவ்வ ளவோ முயற்சி செய்தது. எனினும், கடைசி வரை அமெரிக்காவால் காஸ்ட் ரோவை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தனது துணிவாலும், கடுமையான தொடர் போராட்டத்தாலும் ஃபல் ஜென்சியோ பாடிஸ்டா வுக்கு சரியான பாடம் புகட்டி கியூபா மண்ணில் தான் நினைத்தபடி கம்யூனிஸத்தை மலர வைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

அன்று முதல் கியூபா மக்களின் நெஞ்சைவிட்டு நீங்காதத் தலைவராக இருந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோ (82) முதுமை யால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, அவரது சகோதரரும், ஆரம்பத்தி லிருந்து அவரது போராட் டத்துக்கு தோள்கொடுத்த வருமான ரால் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். அந்த வகையில், ரால் காஸ்ட்ரோ கடந்த பிப்ரவரியில் முறைப் படி அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
 
 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..