should i get an abortion buy abortion pill Subject: ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்! "எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்" - வாஷிங்டன் போஸ்ட்
ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்!
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 "எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்" கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது. "இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!" என்கிறார் இவர். ஒரு பிரபல மேற்கத்திய செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாகியின் இக்கூற்றினைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன. இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் உண்மைக்குப் புறம்பான அத்தகைய செய்திகளின் முகமூடிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழிந்து விடுவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சில அறிவுஜீவி(!) எழுத்தாளர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊடகங்களிலிருந்து அகற்றினால் மட்டுமே நடுநிலைப் பத்திரிகை எனும் பெயரினைத் தக்க வைக்க இயலும் என்ற நிலைக்கு மேற்கத்திய ஊடகங்களே தள்ளப்பட்டுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டே வருகிறது.
WaPo Editor: I Want More Muslim Journalists
http://www.newsbusters.org/blogs/warner-todd-huston/2008/03/05/wapo-editor-i-want-more-muslim-journalists
Media to blame for Islamic misconceptions
Washington Post editor says near-absence of Muslim voice in newsrooms, poor translations contribute to lack of understanding.
http://www.dailypilot.com/articles/2008/03/04/religion/dpt-bennett03042008.txt
|