Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பொறாமை தீ(யது) அணைப்போம்
Posted By:peer On 7/27/2008

zoloft and weed interaction

zoloft and weed online
பொறாமை தீ(யது) அணைப்போம்….இறைவனை என்றும் நினைப்போம்

- கமால் ஜீனத் குழுமம் ஈடிஏ அஸ்கான் துபாய்-050 8444097       

அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம். நிறைவான வாழ்வு.
அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள  உயர்வும் இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது" என்றார்.
பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம்
நான் அவரிடம் சொன்னேன் 'நண்பரே! உங்களையும் மற்றவர்களையும் வருமானத்தையும்; செல்வத்தையும் வைத்து எடை போடாதீர்கள்
இறைவன் அதற்குப் பதிலாக
'நல்ல குணமுள்ள மனைவியை தந்திருக்கலாம்"
'ஊனமற்ற அறிவுள்ள குழந்தையைத் தந்திருக்கலாம்"
'உங்களுக்கோ அல்லது மனைவி பிள்ளைகளுக்கோ கடுமையான நோயைத் தராமல் நீண்ட ஆயுளைத் தந்து அருள் செய்திருக்கலாம்"
'உங்கள் பிள்ளைகளுக்கு நீண்ட மணவாழ்க்கையை தரலாம்"
இதற்கெல்லாம் மேலாக உங்களையும் என்னையும் எந்தவித ஊனமும் இல்லாமல் படைத்தானே....மாறாக உதாரணத்திற்கு நம்மை குருடனாக படைத்து செல்வத்தை அள்ளித் தந்தாலும் நம் உள்ளம் நிம்மதி அடையுமா? இல்லை நமக்கு செல்வத்தையும் வருமானத்தையும் வாரி வழங்கி விட்டு நமக்கு அற்பஆயுளை வழங்கி இருந்தால் என்ன நன்மை? என்றேன்.
நான் தொழும் பள்ளியில் தொழுகை நடத்துபவருக்கு இரு கண்களும் கிடையாது. அவருக்கு மனைவி பிள்ளைகள் உண்டு ஆனால் அவரால் மனைவியையும் தன்னுடைய அழகான மழலைச் செல்வங்களையும் கண்குளிரக் காண முடியாது. எவ்வளவு பெரிய சோதனை.
'எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதிக சம்பளத்தையும் செல்வத்தை இறைவன்; தந்திருக்கலாம் ஆனால் நல்ல பண்புகளற்ற ஒரு மனைவி அமைந்தால் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?"
'எத்தனையோ பெரிய செல்வந்தர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அவர்களிடம் போய்க் கேளுங்கள். இத்தனை பணம் இருந்து என்ன உபயோகம்? கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்பார்கள்"
'எத்தனையோ பேருக்கு குழந்தை பிறந்து அதை அற்ப ஆயுளில் பறிகொடுத்து துன்பப்படுவார்கள்"
'எத்தனையோ பேருக்கு பிள்ளை பிறக்கும். ஆனால் கேன்சர் போன்ற கொடிய நோயுடனோ அல்லது கடுமையான ஊனத்துடன் பிறக்கும் அல்லது மூளைவளர்ச்சியற்ற பிள்ளையாக இருக்கும்"
'எத்தனையோ பேர்கள் அவர்களுக்கோ அல்லது அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கோ கேன்சர் சிறுநீரகக் கோளாறு இதய நோய் போன்ற கொடிய நோய் தாக்கி சொல்ல முடியாத கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"
'எத்தனையோ பேர்கள் தங்களின் மகள்; சிறு வயதில் கணவனை இழந்து விதவையாக அல்லது விவாகரத்தாகி மணவாழ்க்கையை இழந்து தங்களுடன் வாழ்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்"
என் சொந்தக்காரர் ஒருவருக்கு பத்து பிள்ளைகள். அதில் நான்கு பெண்மக்கள். பிள்ளைகள் அனைவரும் பிறக்கும்போது எந்தவித ஊனமின்றித்தான் பிறந்துள்ளார்கள். ஆனால் அதில் 3 பெண்மக்களுக்கும் ஒர் ஆணுக்கும் 10 வயதிற்கு மேல் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு வித நோய் தாக்கி இடுப்புக்கு கீழும் மேலும் கைகளும் செயலிழந்து போய்விட்டன. அந்தப் பெற்றோர்கள் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள்? இது எவ்வளவு பெரிய சோதனை. இறைவன்; செல்வத்தை தந்து விட்டு இதுபோல் ஒரு சோதனையைத் தந்தால் நம்மால் நிம்மதியாக உறங்கமுடியுமா?
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி பல வருடங்களாக ஆஸ்த்மா நோயால் துன்பப்படுகிறார். அவர் சிலநேரம் தன் நிலையை எண்ணி சலித்துக் கொள்வார். அதேநேரத்தில் அவருக்கு இறைவன் நல்ல கணவனையும் நெடிய மணவாழ்வையும் நல்ல பிள்ளைகளையும் அருளிpயிருக்கிறான். இது பெரிய நன்மை இல்லையா?
என் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து உயர்நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார். அவர் விரும்பியவாறு அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தும் சில காரணங்களுக்காக வேலை பறிபோனது. பல நேரங்களில் வேலை போனதைப் பற்றி எண்ணி வருந்துவார். நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்து என் பிள்ளைகளையும் உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். என் திட்டம் நொறுங்கிப்போனதே ஆண்டவன் என் ஆசையை நிறைவேற்றவில்லையே என்பார். ஆனால் இறைவனின் அருளைப் பாருங்கள்! அவரின்;; மகள் டாக்டர் ஆகிவிட்டாள். அவர் வெளிநாட்டு வேலை மற்றும் சம்பாத்யம் போனதற்காக இறைவனை தூற்றாமல் தனக்கு அறிவுள்ள மகளைத் தந்ததற்கும் அவள் தன்னுள்ளம் உவக்கும்வண்ணம் டாக்டர் ஆகச் செய்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா!
அதேநேரத்தில் அவருடன் வெளிநாட்டில் பணியாற்றிய ஒருவர் அவரைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பவர் கோடீஸ்வரர். அவர் தன் பிள்ளைகள் டாக்டராக இஞ்சினியராக வேண்டும் என்று விரும்பினார் இருந்தாலும் அவருக்கு செல்வத்தை வாரி வழங்கிய இறைவன் அறிவுள்ள பிள்ளைகளை அவருக்கு வழங்கவில்லை. அவரிடம் செல்வம் இருந்தது. என்ன பயன்? அவர் இதை என்னிடம் சொல்லி வருந்தியுள்ளார்.
ஓரு பணக்காரரின்; மகள் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்தாள். அவளுக்கு இன்னொரு திருமணமும் ஆனது. அதுவும் விவாகரத்தில் முடிந்தது. தன் மகளின் நிலையை எண்ணி எண்ணியே மனமுடைந்து போன அவர் அந்த துக்கத்திலேயே இறந்தார்.
என் சொந்தச் சகோதரி அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு பிள்ளைகளை ஒன்றை பிரசவிக்கும் போதும் மற்றொன்றை 10 மாதங்களிலும் இழக்க நேரிட்டது. இது ஒருவருக்கு பெரிய சோதனை இல்லையா?
நமக்கு தலைவலி அல்லது வயிற்றுவலி ஏற்படுகிறது. அது ஒரே நாளில் குணமாகாமல் ஓரிரு நாட்கள் நீடித்தால் நமக்குள் என்ன எண்ணம் உடனே ஏற்படுகிறது. ஐயோ! நமக்கு மூளையில் கேன்சரோ அல்லது வயிற்றில் கேன்சரோ என்ற எண்ணம் ஏற்பட்டு அந்த எண்ணம் நம்மை என்ன பாடுபடுத்துகிறது. அந்த நேரத்தில் நம் செல்வமும் சம்பளமுமா நம் கண் முன் வரும்? நாம் விரைவிலேயே இறந்துவிடுவோமோ என்ற பயம் ஏற்படுவதில்லையா? யாராவது இதை மறுக்கமுடியுமா?
என்னுடன் பணியாற்றிய ஒருவர் வயிற்றில் கேன்சர் வந்து இறந்து போனார் இளவயதில் (35 வயதில்) இவர் இறக்கும் போது அவர் பிள்ளைக்கு வயது 10. அவர் மரணத்தருவாயில் அவர் மனைவி மற்றும் பிள்ளையைப் பார்த்து அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? என் இளவயது மனைவியோடு நன்கு வாழ வேண்டிய வயதில் இறக்கிறேனே! ;……என் பெண் பிள்ளை வளர்;ந்து அதற்கு திருமணம் செய்து பேரன் பேத்தியைப் பார்காமல் இறக்கிறேனே!…….. என்று என்னவெல்லாம் எண்ணி அந்த உள்ளம் வெந்திருக்கும் இறக்கும்தருவாயில். எண்ணிப்பார்ப்போமே.. அவரின் பெற்றோர்கள் மனைவி மகள் எந்த அளவு உள்ளம் வருந்தியிருப்பர்கள்;;;. அவர் நிலையில் இருந்து நாம் யோசித்துப் பார்த்தால்தான் அவர்பட்ட வேதனை நமக்குப் புரியும்.
இளவயதில் விதவையான பெண்ணிடம்; கேட்டால் நீண்ட மணவாழ்வு தான் பெரிய செல்வம் என்பாள். செல்வத்தை பெரிய கிருபை என மாட்டாள்.
பிள்ளை இல்லாதவர்களிடம்; கேட்டால் பிள்ளைபாக்கியம் தான் பெரிய பாக்கியம்; என்பார்கள்.
கெட்ட கணவன் அமைந்தவள் நல்ல கணவன் தான் பெரிய சொத்து என்பாள். 
ஒருவருக்கு இறைவன்; குறைவான சம்பளத்தையோ அல்லது செல்வத்தையோ தந்து விட்டு அதற்குப் பதிலாக
'அமைதியான அடக்கமான நற்குணமுள்ள மனைவி மற்றும் அறிவு நிறைந்த பிள்ளைகளைத்; தந்திருப்பான் "
'அவர்களுக்கு ஊனத்தையோ கொடூரமான நோய்களான கேன்சர் போன்றவற்றை தராமல் கிருபை செய்யலாம்;"
'அவருக்கே கொடிய நோய்களைத் தராமல் அருள் செய்யலாம்;"
'அவருக்கும்; மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயளைத் தரலாம் "
'அவரின்; பிள்ளைகளுக்கு மணவாழ்வு நெடியதாக மகிழ்வானதாக ஆக்கித்தரலாம்; "
ஆகவே இறைவனின் நமக்கு செய்துள்ள நன்மைகளை நாம் அனைவரும் நமது கண்கள் வெளிப்படையாக காணும் அல்லது இறைவனுக்கு அருளுக்கு அளவுகோலாக நாம் வைத்திருக்கும் வருமானம் மற்றும் செல்வம் இவற்றை மட்டும் வைத்து கணக்குப் போடாமல் அத்தகையோரை பார்த்துப் பொறாமைப்படாமல் நாம் சிந்திக்காமலே இருக்கும் மேற்சொன்ன நன்மைகளை வைத்து சிந்தித்து மனசாந்தி அடைவோமேயானால் நம் மனம் அமைதி அடையும். பொறாமை ஏற்படாது. நிச்சயம் இறைவனுக்கு நாம் எல்லா நிலைகளிலும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக ஆகிவிடுவோம்.



Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..