Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
குர்ஆனில் 'ஹுத்ஹுத்' (الْهُدْهُد) பறவை
Posted By:jasmin On 6/15/2008

'ஹுத்ஹுத்' (الْهُدْهُد)  மரங் கொத்திப்பறவை

மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை. இறைமறை கூறுகிறது:-

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். (27:20)

لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ
 

'நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்' என்றும் கூறினார். (27:21)

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِن سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ
 

'(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.' தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். 'ஸபா' என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.' என்று கூறியது.(27:22)

إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ

'நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு  (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.'(27:23)

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ اللَّهِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

'அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி,சூரியனுக்கு ஸுஜூது
செய்வதை நான் கண்டேன்.அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு
ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்.
ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை'(27:24)

أَلَّا يَسْجُدُوا لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ
 

'வானங்களிலும்,பூமியலும்,மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்,இன்னும் நீங்கள்
மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு
அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? '(27:25)

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

'அல்லாஹ்-அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை.(அவன்) மகத்தான
அர்சுக்கு உரிய இறைவன்' (என்று ஹுத்ஹுத் பறவை கூறிற்று.(27:26)

தகவல்களைச் சேகரித்து வரும் அரசு தூதர்!

மரங்கொத்தி வெகுதொலைதூரம் சென்று அதற்குரிய உணவை மட்டுமல்ல, மனிதர்க
ளுக்குத் தேவையான செய்திகளையும் சேகரித்து வருகிறது. நபி சுலைமான்(அலை) அவர்களிடம் ஸபாநாட்டு ராணிபற்றியும் அவர்களின் மக்களைப் பற்றியும் தகவல்களைக்கொடுத்து அவர்கள் ஏகத்துவ நெறியின்பால் வருவதற்கு துணைபுரிந்தது என்று திருமறை அல்குர்ஆன் 27:20-26 எனக் கூறுகிறது.

அது பேசியது என்றும், அது பேசிய மொழியை நபி சுலைமான் அலை) அவர்கள் அறிந்திருநதார்கள் என்றும் (27: 20-26) குர்ஆன் கூறுகிறது.

இதனை ஆய்வு செய்த அறிவியலார் அவை மரங்களில் பொந்துகளை துளைத்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதுமட்டுமல்ல, மரத்துளைகளை தங்களின் உணவுக்கிடங்காகவும் பயன்னடுத்துகின்றன. பறவைகள் தங்கள் அலகுகளைப்பயன்படுத்தி மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மரங்;களை கொத்துகின்றன.

இந்த வேகத்தில்; கொத்தினால் அதன் அலகுகள் பாதிக்காதா? இரண்டாகஉடைந்துவிடாதா ? தொடர்ந்து மிக வேகமாக கொத்துவதால் அதன் மூளைகள் பாதித்து மயக்கமேற்படாதா? போன்ற என்ற ஐயங்கள் நமக்கு எழலாம்.

இடிதாங்கிகள் (Shock Abserbers)

ஆனால் அதன் அலகுகளிலே அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் அபார அமைப்பு அதைப்
பாதுகாத்து எஃகு போன்ற பலத்தை அளிக்கிறது. அதன் மூளை தலையின் பின் பகுதியில் அலகுகளுக்கு நிகராக பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது துளையிடும் போது அவற்றின் கீழ் அலகை ஒட்டியுள்ள சதைப்பகுதி
இடிதாங்கியைப்போல (அதாவது மோட்டார் காரின் ளூழஉம யுடிளநசடிநசள) போன்று செயல்பட்டு வேகமாகத் துளையிடுவதால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நிற்கிறது.

ஓவ்வொரு மரங்கொத்தியும் தனக்கே உரிய தனிப்பட்ட சிறப்புயல்புகளைக் கொண்டுள்ளது. சில வகை மரங்கொத்திகள் சோளப் பொறிகளை தாம் இட்ட துளைகளில் சேமித்து வைக்கிறது.

50000 சோளப்பொறிகள் வரை சேமித்து வைக்கும் திறமை

கோடை காலம் முழுவதும் பட்டுப்போன மரங்களில் ஆயிரக்கணக்கான துளைகளைப்
போட்டுவைக்கின்றன. குளிர்காலத்தில் அவற்றை உணவாகக்கொள்கின்றன.துளையிடும் இந்த இனம் ஒவ்வொரு துளையிலும் ஒவ்வொரு சோளப்
பொறியைச் சேமித்து வைக்கிறது. இவ்வாறு சேமிக்கும் மரங்கொத்திப் பறவைகள்
எவ்வளவு சேமித்து வைக்கும் என நினைக்கிறீர்கள்? ஐந்தா பத்தா? இல்லை. ஒரு பெரிய மரத்தில் 50000 சோளப்பொறி வரை சேமித்து வைக்கும் திறமை கொண்டவை.

அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளின் அதிசயச்செயல்களைப் பற்றி வியந்து வியந்து அவன்      வல்லமையைப் புரிந்து அவனையே வணங்கி அவனுக்கு நன்றிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தப் பறவையின் ஏகத்துவ உணர்வைத் தெரிந்து நாமும் ஓரிறைந் கொள்கையில் உறுதியாக இருப்போமாக!




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..