Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பாலின் வழியாக பரம்பொருளை அறிவோம்!
Posted By:peer On 8/15/2022 5:50:33 AM


▪︎பால் தரும் கால்நடைகள்

பால் என்பது, பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற பெண்விலங்கின் பால்சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவம். வெள்ளாடு, செம்மறியாடு, பசுமாடு, எருமைமாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளிலிருந்து
பால் கிடைக்கிறது.

▪︎குட்டிகளோடு சேர்ந்து நமக்கும்...

இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன் படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை  செரிக்கும் திறன் பெறும்வரை தாயின் பாலே முதன்மை உணவு. தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப்படும் மஞ்சள் நிறப்பால்  சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக் குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக் கின்றது.

குட்டிகள் குடித்தது போக எக்ஸ்ட்ராவும் சுரக்க வைத்து அதை நமக்கும் புகட்…
[9:03 AM, 7/20/2022] +91 95664 51650: ▪︎பாலின் வழியாக
பரம்பொருளை அறிவோம்!
-----------------------------------
▪︎பால் தரும் கால்நடைகள்

பால் என்பது, பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற பெண்விலங்கின் பால்சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவம். வெள்ளாடு, செம்மறியாடு, பசுமாடு, எருமைமாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளிலிருந்து
பால் கிடைக்கிறது.

▪︎குட்டிகளோடு சேர்ந்து நமக்கும்...

இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன் படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை  செரிக்கும் திறன் பெறும்வரை தாயின் பாலே முதன்மை உணவு. தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப்படும் மஞ்சள் நிறப்பால்  சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக் குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக் கின்றது.

குட்டிகள் குடித்தது போக எக்ஸ்ட்ராவும் சுரக்க வைத்து அதை நமக்கும் புகட்டுவது இறைவனது மிகப்பெரிய ஓர் அருள்.

▪︎பாலில் உள்ள ஊட்டச் சத்துகள்

பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகள். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம், இரட்டைச்சர்க்கரை உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
கொழுப்பு நீக்காத பாலில் சுமார் 35% கொழுப்பு உள்ளது.
இதை ஒரு கொள்கலத்திலிட்டு, பாலாடையத் தனியாக பிரித்து கொழுப்புக் குறைவான பால் தயாரிக்கலாம்.
நுண்மையான துளைகளின் வழியாகப் பீச்சப்படுவதால் கொழுப்புச் சத்து சமமாகப் பரவி எளிதில் செரிக்கக் கூடியதாகப் பால் உள்ளது.

▪︎ஒரு கல்லில் பல மாங்காய்

பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம்
பாலிலிருந்து பல உபப் பொருட்களைப் பெறலாம்.
பாலை நொதிக்கச்செய்வதன் மூலம், தோய்த்து
அல்லது கட்டிபடச் செய்து  தயிரைப் பெறலாம்.
பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து 
நிறைந்த  வெண்ணெயைப் பெறலாம்.
பக்கப் பொருளாக நீர்த் தன்மையான 
மோரையும் பெறலாம். 
வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும்
சுவையும் மிக்க  நெய்யையும் பெறலாம்.
பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் 
பாலாடைக்கட்டியையும் பெறஇயலும்.
இதல்லாமல், பால் மூலமாக பல இனிப்பு
பலகாரங்களும் தயாரிக்கப் படுகின்றன.

▪︎பால் உருவாகும் விதம்

பிராணியின் குடலில் தீவனம் செரிமானம் ஆனவுடன் இரத்தம், பால், உணவுக் கூழ் ஆகிய ஒவ்வொன்றும் அதனதன் இடங்களைச் சென்றடையும்.

இரத்தம் நாளங்களுக்கும்... பால் மடிக்கும்... சிறுநீர், சாணம்... முறையே சிறுநீரகம், சாணக்குடலுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிடும்.

இவற்றில் ஒன்று இன்னொன்றுடன் கலப்பதுமில்லை; தனித்தனியாக பிரிந்தபின் ஒன்று இன்னொன்றுடன் சேர்வதுமில்லை. மற்றொன்றாக மாறிவிடுவதுமில்லை.

ஆக...சாணமோ பச்சை நிறம், இரத்தமோ சிவப்பு நிறம்,
இந்த இரண்டு நிறத்துக்கும் இடையே தூய வெண்மை யான பால் வெளியாவது இறைவனின் படைப்பாற்ற லுக்கான சான்றுதானே!

▪︎பாலை நாம் உருவாக்க முடியுமா?

கால்நடைகள் புற்பூண்டுகளை உண்டுவிட்டு தூய்மை யான பாலை நமக்குத் தருகிறது. அதே புற்பூண்டுகளை நாமோ பிற விலங்கினங்களோ உண்டு விட்டு இதுபோல பாலைத் தரமுடியுமா? அல்லது ஏதாவது ஒரு ஆலையில் புற்பூண்டுகளைப் போட்டு அரைத்துக் கூழாக்கி இதுபோல பாலை உற்பத்தி செய்ய முடியுமா, என்ன?

▪︎இதோ, இந்த பேருண்மையை
திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள் :

'உறுதியாக கால்நடைகளில் உங்களுக்கு ஒரு பாடம் உண்டு. அதன் வயிறுகளிலிருந்து சாணத்துக்கும் இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் (காண்போருக்கு) மிகத்தூய்மையான, அருந்துவோருக்கு மிக இதமான (தடைபடாமல் மிருதுவாக தொண்டையினுள் இறங்கும்) பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்!' [குர்ஆன் 16 : 66]
----------------------------------------
▪︎கே ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..