Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஜனநாயக வழியில் போராட வீதிக்கு வந்தால் திரும்பி செல்ல வீடிருக்காது என்று விதி எழுதுகிறது பாஜக.
Posted By:peer On 6/13/2022 10:53:30 AM

தாரிக்கின் மலை!

ஜனநாயக வழியில் போராட வீதிக்கு வந்தால்
திரும்பி செல்ல வீடிருக்காது என்று விதி எழுதுகிறது பாஜக.

சந்தோஷம். எனக்கு ஒரு வரலாறு ஞாபகம் வருகிறது.

எட்டாம் நூற்றாண்டில் தளபதி தாரிக் தலைமையில் ஏழாயிரம் பேர் கொண்ட சிறு படை கடல்கடந்து ஸ்பெயின் கரைக்கு வந்திறங்கியது. அவர்கள் வந்த கப்பல்கள் கடலில் நின்றிருந்தன.

யாராவது போர் செய்யாமல் திரும்பிப் போக விரும்புகிறீர்களா? என்று தளபதி தாரிக் கேட்டார். இல்லையென்று முழங்கினார்கள் படைவீரர்கள். மாலை நேரத்தில் திடீரென்று எல்லா கப்பல்களும் தீப்பற்றி எரிந்தன.

எதிரிகளின் சதியா என்று முஸ்லிம்கள் திகைத்து நின்றபோது "இல்லை. நான் தான் எரிக்க உத்தரவிட்டேன்" என்றார் தளபதி தாரிக். போரிட்டு முன்னேறி செல்ல முடிவெடுத்த நமக்கு திரும்பிச் செல்லும் கப்பல்களின் தேவை எதற்கு என்றார்?

போர் துவங்கும் நேரம் வந்தது. ஸ்பெயின் மன்னன் ரோட்ரிகஸின் ஒருலட்சம் பேர் காெண்ட படையை பனிரெண்டாயிரம் பேர் கொண்ட சிறுபடை எதிர்காெள்ள வேண்டும். (தாரிக்குடன் வந்த ஏழாயிரம் பேர், பிறகு உயரதிகாரி மூஸா பின் நுளைர் அனுப்பி வைத்த ஐயாயிரம் சேர்த்து பனிரெண்டாயிரம்.)

போர் துவங்கும் முன் தளபதி தாரிக் முஸ்லிம் படையினரின் முன்வந்து உரையாற்றினார். எனதருமை சகோதரர்களே! உங்களுக்குப் பின்னால் கடல்; உங்களுக்கு முன்னால் எதிரிகள். "போர் ஒன்று தான் இப்போது சாத்தியம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த நிலையில் நீங்கள் பொறுமையோடும் இன்னும் ஈமானில் உறுதியோடும் இருப்பதை தவிர வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்."

தளபதியின் வீர உரையை கேட்ட முஸ்லிம் படை ரோட்ரிகஸின் பெரும்படையை சீக்கிரமே தோற்கடித்தது. அதன்பிறகு எண்ணூறு ஆண்டுகள் ஸ்பெயினில் இஸ்லாம் தான் கோலோச்சியது. ஐரோப்பாவின் முகமே மாறியது.

தளபதி தாரிக் இப்னு ஜியாத் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றார். அவர் முதன்முதலில் வந்திறங்கிய இடம் இன்றுவரை அவர் பெயரால் தான் அழைக்கப்படுகறது. அது தான் ஜிப்ரால்டர். ஆம். அங்கிருந்த மலைக்குன்றுக்கு தாரிக் என்று பெயர் சூட்டினார்கள். மலை -ஜபல். ஜபலுத்தாரிக் - தாரிக்கின் மலை. அது தான் இன்று ஜிப்ரால்டர் என்று மருவிநிற்கிறது.

திரும்பி வீட்டுக்கு செல்ல வழியில்லை என்ற சூழ்நிலையில் ஸ்பெயின் பேரரசையே வீழ்த்தி அதை தம் வீடாகவும் தம் நாடாகவும் மாற்றிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் தான் முஸ்லிம்கள்.

திரும்பி வீட்டுக்கு செல்ல வழியில்லை என்பதற்கே அப்படியென்றால் திரும்பி செல்ல வீடே இல்லை என்று இக்கட்டில் தள்ளும்போது எவ்வளவு நாள் தான் சும்மா இருப்பார்கள்?

வீடுகளில் இருந்தல்ல; வீதியிலிருந்தே வெகுவிரைவில் ஒரு வரலாறு எழுதப்படும். அதில் முன்னுரையே பாசிசத்தின் முடிவுரையாகத்தானிருக்கும். 

வெள்ளையனையே தோற்கடித்து நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர்கள முஸ்லிம்கள். இந்த கொள்ளையர்கள் எம்மாத்திரம்?

இடித்து தள்ளப்பட்ட கற்களிலிலிருந்தே ஜனநாயக தூணை கட்டி எழுப்புவோம் இன்ஷா அல்லாஹ்!

 - ஜாபிர் பாக்கவி.





(This is a historical FAHAD MASJID at GIBRALTAR in (Andalusia) Spain. This had been built in memory of famous Muslim general Tariq bin Ziyad. He landed where the mosque stands today)





General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..