Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம். ஆனால்.
Posted By:peer On 2/22/2022 10:25:10 AM

*காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம். ஆனால்...* ?
=======================================
▪️யெமென் அரசர்களில் ஒருவரான வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்கிறார். யெமெனில் விட்டு வந்திருக்கும் நிலத்திற்கு ஈடாக ஒரு நிலப்பகுதியை அவருக்கு நபிகளார் பரிசாக வழங்கினார்கள்.
▪️அந்த நிலம் எங்கே உள்ளது? என்பது குறித்து வழிகாட்ட, முஆவியா (ரலி) அவர்களை நபிகளார் கூடவே அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆவியா (ரலி), செருப்பு அணிவதற்குக்கூட வசதியின்றி கடும் ஏழ்மையில் இருந்தார்.
▪️வாயில் ஒட்டகத்தில் பயணிக்க, முஆவியா (ரலி) அருகே நடந்து வருகிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்...
▪️முஆவியா (ரலி): "ஒட்டகத்தின் பின்னால் என்னையும் அமர வையுங்களேன்''.
▪️வாயில்: "அரசர்களின் பின்னால் அமரும் அளவுக்கு உமக்குத் தகுதி இல்லை''.
▪️முஆவியா (ரலி): "எனில், உமது செருப்பையாவது தாரும்''.
▪️வாயில்: "அரசர்களின் செருப்பை அணியும் அளவுக்கு உமக்குத் தகுதியும் இல்லை. வேண்டுமெனில், ஒட்டகத்தின் நிழலில் நடந்து வாரும்''.
▪️காலம் மாறியது. காட்சியும் மாறியது.
▪️தேசத்தின் கலீஃபாவாக முஆவியா (ரலி) மாறுகிறார். வாயிலுக்கு அப்போது 80 வயதிருக்கலாம். முஆவியாவைச் சந்திக்க நாடி சிரியாவுக்கு வருகிறார் வாயில். அவையில் நுழைகிறார். அரியணையில் அமர்ந்து இருந்த முஆவியா (ரலி) எழுந்து வந்து, வாயிலை வரவேற்று, தன்னுடைய அரியணையில் அமர வைத்தார்.
▪️ஒட்டகத்தின் நிழலில் நடக்கச் சொன்ன நிகழ்வை நினைவூட்டி, "அந்த முஆவியாதான் நான்'' என்றார். பின்னர் வெகுமதிகள் வழங்கினார்.
▪️கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தோடிய கண்ணீர் துளிகளினூடாக வாயில் கூறினார்: "வேண்டாம்! என்னைவிட தகுதி வாய்ந்தவருக்கு இதைக் கொடுங்கள். இருந்தாலும் உமது பொறுமையைப் பார்த்தபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... அந்த நாள் மீண்டும் திரும்பி வந்தால், உம்மை எனது தோள்களில் சுமப்பேன்''.
▪️பாடம்: இங்கே செழிப்பும் நீடிப்பதில்லை. ஏழ்மையும் நீடிப்பதில்லை. பொறுப்பும் நீடிப்பதில்லை. பதவியும் நீடிப்பதில்லை.
▪️எனவே, சுற்றியுள்ள மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! ஏனெனில், உலகம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலமை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை.
▪️ *ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் இஸ்லாமிய சகோதரத்துவம்.. மாறவே மாறாது! மாறவும் கூடாது!!*
▪️"காலத்தை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம் (குர்ஆன் 3:140)
✒️ *நூஹ் மஹ்ழரி*



Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..