Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தமிழ்நாடு முதல்வர் - இது ஒரு வகை போர் தந்திரம்.
Posted By:peer On 6/6/2021 4:37:24 PM

இது ஒரு வகை போர் தந்திரம்.
தடுப்பாட்டம் என்று கூட சொல்லலாம்.
கிரிக்கெட்டில் எதிர்முனையில் வரும் ஆட்டக்காரர்கள் எல்லாம் 50,60 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகிப் போவார்கள்.
ஆனால், நம்ம கவாஸ்கர் மட்டும் 3 நாளா கிரீஸ்ல, பசை தடவுன மாதிரி நின்னுக்கிட்டு,
25 ரன் தாண்டவும் மாட்டார்.
அவுட் ஆகவும் மாட்டார்.
இப்போ நம்ம புரோக்கர் பய
சூனா. பானா. என்ற சகுனி சுப்ரமணி கத்துவது போல,
கவாஸ்கரை டிவி திரையில் பார்த்து
‘சீக்கிரமா அவுட்டாகி போய் தொலையேன்’
என்று சென்னையில் இருந்து கொண்டு,
என்னமோ அவருக்கு கேட்கும் என்ற நெனப்புல நாங்க கத்துவோம்.
நிதானம்.
கணிப்பு.
குறிக்கோள்.
விமர்சனங்களை புறம்தள்ளுதல்.
அதனால்தான் கவாஸ்கர் உலகப்புகழ் பெற்றார்.
(கவாஸ்கர் என்னக்கி சங்கி ஆனாரோ அன்றே அவரை ஊத்தி மூடி ஓரமா உக்கார வச்சிட்டாங்க என்பது தனிக் கதை)
இப்போ விஷயத்துக்கு வருவோம்.
இது ஒரு வகை போர் தந்திரம்.
தடுப்பாட்டம் என்று கூட சொல்லலாம்.
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”
முதலில்,
மக்கள் இவரை பற்றி புரியனும்.
அடுத்து,
இவரின் செயல்களை மக்கள் அங்கீகரிக்கனும்.
பிறகு,
அரசின் செயல் வேகத்தை பார்த்து ஆச்சரியப்படனும்.
அப்புறம்,
இவரையும், இவரின் தலைமையில் உள்ள அரசையும்,
அடி மனதில் இருந்து மக்கள் பாராட்டனும்.
கடைசியா,
இவரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து ‘ஒன்றியம்’ விக்கித்து பதபதைத்து செய்வதறியாது விழி பிதுங்கனும்.
முக்கியமா,
மீடியா என்ற போர்வையில்,
இந்த கோரோனா காலத்திலும்,
கையில் இவ்ளோ பெரிய மைக்கை வச்சிக்கிட்டு,
லோ லோன்னு தெருத்தெருவா திறியும் கேவலப்பட்ட ஊடகங்கள்,
இவரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து
தங்களின் நவ துவாரங்களையும் மூடிக் கொள்ள வேண்டும்.
எந்த சங்கிகளை அழைத்து,
என்ன மாதிரி தலைப்பில்,
எதைப்பற்றி விவாதிக்க வேண்டும்
என்று கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல்,
காட்டுக் கத்தல் கத்த வைத்து,
மக்களை எப்படி பதட்டம் அடைய வைக்கலாம் என கீழ்தரமாக எண்ணி செயல்பட்ட அத்தனை தொலைகாட்சிகளும்
பைத்தியம் பிடித்து அலையனும்.
அதன்பின்,
கனகச்சிதமாக,
ஒவ்வொண்றாக நடவடிக்கை வரும்.
கண்டிப்பாக வரும்.
அப்போ வாயடைத்து இவர்கள் விக்கித்து பார்ப்பார்கள்.
வேல். வேலுன்னு,
கத்து கத்துன்னு கத்தி
ஊர் ஊரா ஓடியதற்கு
பதிலடியாக:
பழனிவேல்.
முத்துவேல்.
என ஒற்றை வார்த்தை கூறி ஓட வச்சாச்சு.
இனி ஒவ்வொரு வினைக்கும்
அதன் வழியிலேயே எதிர் வினை உண்டு.
PTR அவர்களின் ஆங்கில வார்த்தைகளுக்கு,
என்னுடைய 63 வயசுக்கு அப்புறம் இப்போ கூகுள் டிரான்ஸ்லேட்டில் அர்த்தம் தேடுகிறேன்.
ஒவ்வொரு அமைச்சர்களின் செயல்பாடும்,
முழு திருப்தியுடன் மகிழ்ச்சி அளிக்கிறது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர் உதய நிதி அவர்களின் செயல்பாடு பிரமிக்க வைக்கிறது.
இதுவரை கண்டதில்லை இது போன்று.
புதுத் தொடப்பம்.
நல்லாத்தான் பெறுக்கும் என்று சங்கிகள் கதறுவது காதில் கேட்கிறது.
அதே துடைப்பத்தால் இவர்களை அடித்து விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.
ஒன்றியம்.
தமிழ் நாடு.
அமைச்சர்.
இப்படி சாதாரண வார்த்தைகள் கூட,
சங்கிகளின் ஆசனவாயில் ஊசி பச்சை மிளகாயை சொருகியது போன்று உள்ளது.
சின்னத்திரையில்,
அடிமைகளின் ஆட்சியில்,
அதிகாரத்துடன் திமிர் வாதம் பேசிய
அறிவு கெட்ட பொய்யறிவு ஜீவிகளாக
வலம் வந்த நூல் ஆளுமைகள்,
ஆடு என்றார்கள்.
ஆடிட்டர் என்றார்கள்.
ஆசிரியர் என்றார்கள்.
அறிவு ஜீவிகள் என்றார்கள்.
ஆனால் இன்றோ,
பதட்டத்தில், படபடப்பில்,
கோமாளிகள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
பொய்யருவி மணியன் போன இடம் தெரியவில்லை.
மேஜர் மாலன் மேஜைக்கு அடியில்.
கராத்தே தியாகுவை காணவே காணோம்.
குடிகார ராதாரவி குப்புற படுத்துட்டான்.
முருக்குக்கம்பி மச்சான்ஸ் நமீதா மூலைல.
வீனாப்போன விந்தியா வெளியவே வரல்ல.
பொறியுருண்ட பொன்னார் போன இடம் தெரியல்ல.
சிப்ஸ் சேகர சீண்டுவாரில்ல.
ஓபிஎஸ் மகன் ஓடியே போயிட்டான்.
டாடியின் மகன் புல்டாக் தலையையே காணோம்.
கூட்டுறவு சங்கங்கள்.
மத்திய கூட்டுறவு வங்கிகள்.
பஞ்சாயத்துக்கள்.
சுய உதவி குழுக்கள்.
என அங்கிங்கெனாதபடி
அனைத்து இடத்திலும் ஆக்கிரமித்துள்ள சங்கிகள் அடிமைகள் அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும்.
அதுவரை அமைதிகாத்துத்தான் ஆக வேண்டும்.
இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு.
இதற்கெல்லாம் முன்னோட்டம்தான்:
கட் அவுட் கூடாது.
பொய்யுரை வாழ்த்து கூடாது.
சாலையில் கால் கடுக்க போலீஸ் கூடாது.
கட்சி கொடி பதாதை கூடாது.
சாலைகள் அடைப்பு கூடாது.
கால் நக்கும் கலாச்சாரம் கூடாது.
மறைவான செயல்பாடு கூடாது.
அடிமை அமைச்சர்கள் கூடாது.
இந்த கொடிய கொரோனா தொற்று ஒழிந்த பின்,
அனைத்து துறையும் வளர்ச்சியை நோக்கி.
முடிவா,
திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட இவரின் பெருந்தன்மையான நடவடிக்கைகளை பார்த்து,
நம் தலைவருக்கு இடம் இல்லை என்றவர்களுக்கு?
அப்பட்டமா கொள்ளை அடித்தவர்களுக்கு?
அநியாயமாக எங்களிடம் நடந்து கொண்டவர்களுக்கு?
என்ன தீர்வு?
என்று எரிச்சல் பட்டு சலிப்படையும் அளவுக்கு இன்று வந்து பதிவிடுகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன்.
எங்கேயோ சாலை வசதி கூட முழுமையாக இல்லாத ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு,
சாலை ஓர சுமைதாங்கி கல்லில் அமர்ந்து அங்கலாய்க்கும் ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு தெரிந்தது,
நேரு
பொன்முடி
கனிமொழி
பெரியசாமி
துரை முருகன்
போன்றோருக்கும்
இன்னும் இதில் பெயர் குறிப்பிடாத மற்றோருக்கும் தெரியாமலா இருக்கும்?
தெரியும்.
பொருத்தார் பூமி ‘ஆழ்வார்’.
ஸ்டாலின் ஆட்டம் ஆரம்பம்.
உடைந்த செய்தி:
அதாங்க பிரேக்கிங் நியூஸ்:
49 IPS அதிகாரிகள் பணி இட மாற்றம்.
அதிலும் பலருக்கு பதவி உயர்வுடன்.
அனைவருமே முத்துக்கள்.
தேடித்தேடி எடுத்துள்ளார்.
எங்கள் மாவட்டம் திரு: செந்தாமரைக் கண்ணன் அவர்கள்.
முதல்வர் யார் என்று தெரிகிறதா?
முதல்வர் பூகம்பம் என்று புரிகிறதா?
அமைதி.
நிதானம்.
பொருமை.
புதிய தமிழ் நாடு.
புதுமையான செயல் பாடு.


-அலிமாலிக் பீர் முஹம்மது.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..