Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஏர்வாடியின் மூன்று முத்துகள்...
Posted By:peer On 6/6/2021 4:07:01 PM

1980 மற்றும் 90களில் நெல்லை ஏர்வாடியான நமதூரிலிருந்து தமிழகத்தின் தலைநகரமான மதாராஸ்/சென்னைக்கு வேலை தேடி வருபவர்களுக்கு தங்களால் இயன்ற வரை தங்களின் வியாபார தொடர்புகளின் மூலம் எந்த பிரதிபலனும் பாராமல் வேலை தேடி / வாங்கி தருவது இந்த மூன்று பேரும் தங்களின் கடமையாக செய்தவர்கள்.
 
சென்னை மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தவர்கள். நெல்லை ஏர்வாடி வாழ் சென்னை மக்களை ஒன்றினைத்து சென்னையிலும், ஏர்வாடியிலும் சமுதாயத்தை மேம்படுத்த ”நெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம்” அமைத்தது முதல் அதன் செயல்பாட்டிற்கு உழைத்தவர்களில் இந்த மூன்று நபர்களும் முக்கியமானவர்கள்.
 
1. மறைந்த சிந்தாமதார் என்ற பேட்டை லெப்பை சிந்தா அவர்கள்.
2. மறைந்த KSM புகாரி என்ற மெஜெஸ்டிக் புகாரி அவர்கள்.
3. மறைந்த SKM மீரான் என்ற சூப்பர் பைன் மார்பில்ஸ் மீரான் அவர்கள்.
 
ஒரு செயலின் காரணமாக கிடைக்க கூடிய தொடர்ச்சியான நன்மைக்கு வித்திட்டு சென்றுள்ளார்கள்.
வேலை தேடும் நபர்களுக்கு இன்று நாம் செய்யும் முயற்சிகளுக்கு அடிப்படையான விதைகளை விதைத்தவர்கள் இந்த மூவர்.
 
அல்லாஹ் இவர்களின் நன்மைகளை பொருந்தி இம்மூவரையும் நிரந்தரமாக சொர்க்கத்தில் உயர்வான ஜன்னத்துல் பிர்தவ்ஸில் நிரந்தமாக தங்குபவர்களாக்கி வைப்பானாக. - ஆமீன்



Stars of Eruvadi
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..