Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
Posted By:peer On 4/13/2021 7:17:34 PM

தொகுப்பு

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இவர்களை கண்ணியப் படுத்தும் விதத்தில் சவுதி அரசாங்கம் கஃபாவின் திறவுகோலை வழங்கி கதவை திறந்து இவர்களுக்கு உள்ளே தொழுக அனுமதித்தது, இவர்கள் மரணித்த பின்பு ஹரம் ஷரீபில் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது, உலக தரமிக்க மன்னர் ஃபைஸல் அவார்டும் இவருக்கு வழங்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதில் கிடைத்த பல லட்சம் ரூபாய்களை ஏழை எளியவர்களுக்கு பிரித்துக் கொடுத்தது நம்மை நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள்,

பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள்.

அறிஞர் யூசுப் அல் கர்ளாவி அவர்களால் "நானறிந்த அஷ்ஷைய்க் அபுல் ஹஸன் நத்வி",
என்ற தலைப்பில் 300க்கும் அதிகமான பக்கங்களில் அரபு மொழியில் ஒரு புத்தகம் எழுதப்பட்டது.

அரபு தேசியத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அரபுகளின் உள்ளத்தில் இஸ்லாமிய அரபு இலக்கிய லீக் என்ற சர்வதேச அமைப்பை நிறுவியவர்கள், இன்று இதன் தலைமை அலுவலகம் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா முகர்ரமாவில் இருக்கிறது,

அரபுகளே சற்று கேளுங்கள் !!

என்ற பல அரபு நாடுகளின் பெயர்களை தாங்கிய இவர்களின் புத்தகங்கள் மிகவும் பிரபலமானது,

"இஸ்லாமியர்கள் வீழ்ச்சியினால் உலகத்துக்கு ஏற்படும் நஷ்டம் என்ன ?",
என்ற இவர்களின் மிக பிரபலமான புத்தகம் இவர்களின் 33 வயதில் எழுதப்பட்டு அதே புத்தகம் இவர்களுடைய ஹஜ்ஜுடைய காலத்தில் ஜும்மா குதுபாவில் இவர்களுக்கு முன்பாகவே ஓதப்படுகிறது,

இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை உருவாக்கியவர்கள்

ஷியா -ஸுன்னத் ஜமாத் மத்தியில்
காலம் காலமாக நிலவி வரும் பிளவுகளை அகற்றி ஒற்றுமையை ஏற்படுத்த கடினமாக முயற்சித்தார்கள்,

காவி அரசாங்கம் அவர்கள் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு அளித்து வந்த தொல்லைகள் தைரியமாக தட்டி கேட்டார்கள்,

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தங்களின் எழுத்துக்களால் குரல் கொடுத்தார்கள்,

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கல்விப் பிரிவில் யூதர்கள் ஆதிக்கம் செய்து வந்த காலத்தில் தங்களது பொறுப்பில் இஸ்லாமிய கல்வி நிலையத்தை எடுத்துக்கொண்டார்கள்,

ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்,

ஆன்மீக சீர்திருத்தங்கள் மற்றும் இஸ்லாமிய வரலாறுகளில் மிகவும் ஆர்வம் கொண்டு பல புத்தகங்களை சமூகத்திற்கு வழங்கியுள்ளார்கள்,

இவர்கள் எழுதிய சிறார்கள் இஸ்லாமிய இலக்கியங்கள் இன்றும் பல பல்கலைக்கழகங்களில் புத்தகங்களாக படித்து தரப்படுகின்றன,

அலிமியான் சாஹிப் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட கூடிய அல்லாமா அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் ஒருமுறை தங்களது தவாஃபை முடித்து வெளிவந்த பொழுது அறிஞர் அலி ஸாபூனி ,நத்வி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களை சிறிது நேரம் சந்தித்து பேசுகிறார்,
அவர் அங்கிருந்து சென்ற பின்
தனது மாணவர்களுக்கு ஒரு நபிமொழியை சுட்டிக்காட்டுகிறார்

"மறுமை நாளின் அடையாளம் அறிஞர்களுடைய மரணத்தின் மூலமாக கல்வி உயர்த்தப்பட்டு விடும் "

(இந்த நபிமொழி அப்துல்லா இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு மூலமாக அறிவிக்கப்படும் ஸஹீஹான ஒரு நபிமொழி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது)

அலீ மியான் ரஹிமஹுல்லாஹ் இப்படிப்பட்ட அறிஞர்களில் ஒருவர் என்று சிலாகித்துக் கூறுகிறார்,

சவுதி அரேபியாவின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரான பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின்
உதவியாளர்களில் ஒருவரான இஸ்மாயில் பின் சஃது பின் அல்அதீக்
கூறுகிறார்
"பொதுவாக புத்தக எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தங்களது மூளையில் இருந்து பதிவார்கள்,

ஆனால் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது உள்ளத்திலிருந்து எழுதுவார், ஆன்மீக ரீதியாக, இறை அச்சத்தை எழுச்சியூட்டும் விதத்தில் அவருடைய எழுத்துக்கள் இருக்கும்,

சவுதி அரேபியா ஆசிரியப் பயிற்சி கல்லூரி
சார்பாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகம்
"உஸூலுத் தர்பிய்யா", அதில் இஸ்லாமிய அறிஞர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்ற தலைப்பில் ஹிஜ்ரிஆறாம் நூற்றாண்டுக்குப் பின்பு மிக சிறந்த முறையில் இஸ்லாமிய சேவைகள் புரிந்த நான்கு முக்கியமான உலமாக்களை குறிப்பிடப்பட்டுள்ளது
அவர்களின் பெயர்கள் வருமாறு

1) பத்ருத் தீன் அல்ஜமாஆ -(இமாம் இப்னு கதீர்,தஹபி,இப்னுல் கய்யூம் அல்ஜவ்ஸிய்யா,தகியுத்தீன் அஸ்ஸுபுகி போன்ற தலைசிறந்த அறிஞர்களின் ஆசிரியர்)

2) அஹ்மத் இப்னு தைமிய்யா -
நூற்றுக்கும் அதிகமான தலைப்புகளில் பல புத்தகங்களை இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கிய
இஸ்லாமிய புரட்சியாளர், ஷெய்குல் இஸ்லாம் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

3) அபூ ஹாமித் அல்கஸ்ஸாலி-
ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டின் முஜத்தித் ,புரட்சியாளர்,ஹுஜ்ஜதுல் இஸ்லாம் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் அறிஞர்
இமாம் அப்துல் காதிர் ஜெய்லானி,
அபுபக்கர் பின் அல்அரபி,அபுல் அப்பாஸ் அல்அக்லீஷி போன்ற பெரும் அறிஞர்களின் ஆசிரியர்.

4) அபுல் ஹஸன் அலி நத்வி
ரஹிமஹுமுல்லாஹ் .

(புத்தகம் -உஸூலுத் தர்பிய்யா-பக்கம்-104




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..