Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கரும்பலகை - புத்தக அறிமுகம்
Posted By:peer On 2/15/2021 3:06:22 PM

அர்ஷியா
அர்ஷியா இந்த ஆனந்த யாழின் தந்தை சையத் உசேன் பாட்ஷா.. வாழ்க்கையை மட்டுமல்ல தனக்கு கிடைக்கும் பெயர் புகழை கூட
அப்பாக்களால் மட்டுமே மகளுக்கும் மகனுக்குமென விட்டுத் தர முடியும். தந்தை என்ற மூன்றெழுத்து ஆகாயங்களால் மட்டுமே
பிள்ளைகளின் பூமி என்றும் செழிப்படைகிறது, அவ்விதத்தில் அர்ஷியா ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட பெண்,

மரணத்தில் மிதக்கும் சொற்கள் என்ற இவரின் சிறு கதை தொகுப்பு குறித்து எழுதும் போது இவர் ஒரு முகமறியா எழுத்தாளர்
அது எனக்கு சற்றே வசதியாய் இருந்ததும் கூட, இப்போது நட்பாகி விட்டார் என்பதும் கூடுதல் வசதி என்ற போதும் இத்தனை பெரிய
எழுத்தாளரின் எளிமை சற்று தைரியப்படுத்தினாலும் இவர் ஆற்றலும் திறமையும் கீழ் வரும் என் பார்வைக்கான வெள்ளோட்டத்துக்கு
நான் தகுதியானவளா என்று என்னை நானே திறனாய்வு செய்து கொள்ள வேண்டிய போது வசதி என்னை வறுமையின்பால் கொண்டு சேர்த்து விட்டது

இனி அர்ஷியாவின் கரும்பலகை

// அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் வாழும் காலத்தில் பிரட்சனைகளை புரிந்துக் கொள்பவர்களாக தெரியவில்லை// என்று அதிகாரத்தின்
முடிச்சவிழ்க்கிறார். இது அனைவரும் அறிந்த அனுபவத்த ஒன்றே. இதன் பொருட்டே அலைகழிக்கப்படும் ஒரு பெண்ணின் கதை தான் கரும்பலகை.
இதை இப்படியும் சொல்லலாம். ஒரு பெண் இதில் அதிகாரத்தின் பிடியில் பாதிக்கப்பட்டவரின் பிரதியாய் நிற்கிறாள் என்றும் கொளலாம்.

இதுவொரு சமூக அக்கறை நூல் சமூக சீர்கேட்டை அச்சு வேறு ஆணி வேறாய் கிழித்தெடுக்கிறது. இது அரசின் பார்வையில் பட வேண்டிய நூல். பட்டுட்டாலும்
என்று நாமே உச் கொட்டிக் கொள்ள வேண்டியது தான் என்பதையும் இந்த நூலில் இவரே சொல்லி விட்டு போகிறார், நாட்டின் மிக மிக பெரிய அஸ்திவாரம் பலமுமான
கல்வியும் அதன் தரம் அதனை போதிப்பவர்கள் தம் நிலை எப்படியெல்லாம் மேம்பட்டும் அலைக்கழிக்கப்பட்டும் வாழ்க்கை சுழற்சியில் சிக்கி சுழன்று கரையேறினார்களா
என்றால் வெறும் கேள்வி குறியே எஞ்சுகிறது இதிலும். இதையும் எதையும் தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த அதே சமயம் இயல்பில் இருந்து
பிசகாத ஒரு சாரசரியும் அதில் சற்று மேம்பட்டு விளங்கும் பெண் தான் ராஜலஷ்மி.

ஒரு நாவலை வாசிக்கலாம் என்று கைக்கொண்டவளிடம் ஒரு வாழ்க்கையை தருகிறார் இவர். இதில் ராஜலஷ்மி கருவேலங்காடு சண்முகம் வாத்தியார் தன சேகர் சங்கீதா செல்வ நாயகி
கருத்தப்பாண்டியன் இன்ப சாகரன் புலிப்பாண்டியம் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பொரண்டையூர் புதிராகுளம், குள்ளப்பன்பட்டி ஆட்டோக்காரர் என இன்னும் இதில் வசிக்கும்
இத்தியாதி கதாபாத்திரங்களில் நான் யாராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு கடைசி வரை விடையில்லாதவளாகவே நாவலை முடித்தேன். குறைந்த பட்சம் கதையின் முக்கிய கதாபாத்திரம் விலக்கு
இதாக வேனும் நான் வாழ்ந்திருக்கலாம் ஓர் அடையாளச் சின்னமாய்.

கல்வித்துறை
அதன் கீழ் வரும் ஆசிரியர் அவர்களின் பணி நிரவல் அதன் இடர் தேவை அவசியம் அலைகழிப்பு சீரழிவு செல்வச்சேதாரம் இதில் விளையாடும் அரசியல் அதில் இருக்கும் பகடைகாய்கள் என ஒன்று விடாமல்
இவர் பேனா குத்தி கிழித்திருக்கிறது. முக்கியமாய் பச்சை இங்க்கின் பதவிசு உமிழப்பட்டிருக்கிறது.

வீட்டை கடந்து பணிபுரியும் பெண் அ ஆண் எத்தனை அவதிகளுக்கு தான் விரும்பியோ அ வாழ்வின் கட்டாயத்தின் பேரிலோ தேர்ந்தெடுத்து செய்யும் வேலையில் எல்லா விளிம்புகளையும் லாப நட்ட
கோட்டை கடந்து அதில் தன்னை எந்த அளவு ஈடுப்பாட்டோடு வேலை செய்கிறார்கள் என்பதும் இதில் வெகு நேர்மையாய் அத்தனை கோணங்களையும் அளந்து எழுதப்பட்டிருக்கிறது.
காசுக்கும் கடமைக்கு வேலை செய்கிறவர்கள் கூலிக்கு மாராடிப்பவர்களாய் மட்டுமே மிகையாகிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று இருக்கும் திறமையை வாங்கும் காசுக்காக வேணும் கூட செலவழிக்க ட்
தயங்குவதும் அதே ராஜலஷ்மி சண்முகம் இன்ப சாகரன் போன்றோர் தம் மட்டு நேர்மையும் வாழ்வின் இயல்பில் ஒன்றிப்போனவர்களாகவும் கதையில் வருவது மாபெரும் ஆறுதல்.
ராஜலஷ்மி கதை நெடுக வியக்க வைக்கிறார். இத்தனை பொறுமை காணாதென்று தோனும் போது தேவைக்கு தலை நிமிரும் சவால் கதாபாத்திரம். கதையெங்கும் ராஜலஷ்மி கதா நாயகியாய் யோக லஷ்மியாய்
வலம் வர சங்கீதா மகுடம் சூட்டிக் கொள்கிறார் நான்கே இடங்களில் இவள் பெயர் பகிரப்படினும் இவள் சொல்லும் நான்கு வரி வார்த்தைகளில் கதை இவளை மேலோங்க செய்திருக்கிறது.
ஆமாம் விளக்கிற்கும் துண்டு கோல் தேவை படுகிறதே. அப்படி தான் ராஜலஷ்மிக்கும். தொடர் குழப்பத்திலும் அலைகழிப்பிலும் அவதியிலும் காலம் கழிக்க நேர்கையில்
நம் புத்தி கூர்மை சற்று மழுங்கித் தான் போகிறதென்பதையும் அர்ஷியா மிக கவனமாய் நேர்த்தியாய் சரியான இடத்தில் புகுத்தி அதை ஹைலைட் செய்திருக்கிறார்.

கதையில் வரும் பஸ் பயணம் மேடு பள்ளம் டீக்கடை டிபன்பாக்ஸ் சைக்கிள் ஆட்டோ அலுவலக ஊழியர்கள் அவர் தம் சம்பாஷனைகள் செயல்களும் நடவடிக்கைகள்
அத்துமீறல் என அனைத்தும் கண் முன் காட்சியாய் நிழலாடுகிறது நாம் கடந்து வந்த அனுபவங்கள் அப்போது மனதில் பேறுருவாய் எழும் பொழுது.

சண்முகம் வாத்தியார் வரும் வரை எனக்கு தெரியவில்லை மறந்திருந்தேன். நானும் ஒரு தமிழாசிரியரின் மகள் என்று.... அந்த பள்ளியில் ஆங்கிலத்தில் நான்கு மாணவர்கள் நல்ல மதிப் பெண் எடுத்திருக்கிறார்கள்
என்றால் அதுக்கு நீங்க தான் டீச்சர் காரணம் என்று சொல்லும் போது நானும் ஆசிரியாய் பணிபுரிந்தவள் அதுவும் ஆங்கில வகுப்பெடுத்தவள் என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது. என் அனுபவத்தில்
பாராட்டுக்கு விட பசங்கள அடிச்சிட்டேன்னு பிரின்சி ரூம்க்கு போய் நின்னது தான் அதிகம். அதுவும் தனியார் பள்ளி. வசதியானவர்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளி அனுபவம் ராஜலஷ்மி போல எனக்கும் உண்டும்
ஆமாம் அவர்களை கண்டிக்காமலே படிக்காமலே மார்க் வாங்கனும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்களை சமாளிப்பதென்பது அத்தனை எளிதல்ல. அதே நேரம் அங்கு தரப்படும் வசதி வாய்ப்புகள் சற்றும்
அரசு பள்ளிகளுக்கு குறைந்ததல்ல என்பதை முதல் சில பக்கங்களில் முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் அர்ஷியா. என்னதான் தனியார் பள்ளிகள் நம்மை அந்தஸ்தில் வைத்து அழகு பார்த்தாலும்
கடைசி காலத்தில் வரும் பின்ஷனுக்கும் சொல்லிக்கொள்ள பெருமையா இருக்கேன்னு அரசு வேலைகளுக்கு நாம் ஆசைபடுவதை விட்டு விடுகிறோமா என்ன? இதன் இரண்டிலும் இருக்கும்
சாதக பாதங்களை மையப்புள்ளியாய் வைத்து எழுதப்பட்டது தான் கரும்பலகை.

மாணவ மாணவிகள் ஊருக்கும் அதன் சுற்று சூழலுக்கும் ஏற்ற விதம் தான் அவர்களின் நாகரீகம் அறிவு சாதூர்யம் இருக்கும். அதை மேம்படுத்துவது ராஜலஷ்மி போன்ற ஒரு சில நல்லாசிரியர்களால் மட்டுமே
இயல்கிறது. கதையெங்கும் கிராமத்து மணத்தை அள்ளி வீசி நம்மையும் அவ்வழக்குக்கு புழங்கச் செய்து பழக்க விட்டிருக்கிறார் அர்ஷியா. நாவலை வாசிக்கும் நேரம் நம்ம ஊர் ஒரு குள்ளன்பட்டிகிராமமாகவும்
விலக்கில் காத்திருக்கும் கிராமத்து பள்ளி ஆசிரியையாகவும் வெட்டவெளி சதுப்பு நிலம் கள்ளச்சாராயம் குட்டி போலீஸ் ஸ்டேஷன் திருந்திய நல்லவன் பேய் பிசாசு புளியமரம் மந்திரம் சூன்யமுன்னும் ஆவி
சாதி கட்டுப்பாடு வாய்க்கா வரப்புன்னு கிராமத்தின் எல்லா வாசத்தையும் நமக்கு பழக்கு வருவதை ஏற்றுக்கொள்ளவும் அதை நெறிபடுத்தி அதில் மேன் மக்களாய் வாழவும் நம்மை பயிற்று விக்கிறார் ஆசிரியர் அர்ஷ்யா

கரும்பலகை வாழ்வின் கட்டாயங்களையும் அரசின் சீரழிவுகளையும் அதில் திறம்பட்ட ஒன்றிரண்டு மேம்பாட்டையும் எழுதி செல்கிறது. சார் இன்னும் எழுத நினைச்சேன். உங்க எல்லையை தொடுவதென்பது
எளியவளுக்கு இயலுமா சொல்லுங்க..

அடுத்து அதிகாரம் குறித்து அறிவோம்.
தமிழ் அரசி






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..