Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தமிழ் புத்தாண்டு தகவல்கள் - பொங்கள் வாழ்த்துகள்
Posted By:peer On 5/24/2020 11:00:45 AM

தமிழ் தாய் உறவுகளுக்கு
புத்தாண்டு தகவலுடன் வாழ்த்துகள்

சுறவம் ~ தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

௧. மறைமலை அடிகளார்
௨. தந்தை பெரியார்
௩. தேவநேயப் பாவாணர்
௪. பெருஞ்சித்திரனார்
௫. பேராசிரியர் கா.நமசிவாயர்
௬. இ.மு. சுப்பிரமணியனார்
௭. மு.வரதராசனார்
௮. இறைக்குருவனார்
௯. வ. வேம்பையனார்
௧௦‌‌‌. பேராசிரியர் தமிழண்ணல்
௧௧. வெங்காலூர் குணா
௧௨. கதிர். தமிழ்வாணனார்
௧௩. சின்னப்பத்தமிழர்
௧௪. கி.ஆ.பெ. விசுவநாதர்
௧௫. திரு.வி.க
௧௬. பாரதிதாசனார்
௧௭. கா.சுப்பிரமணியனார்
௧௮. ந.மு.வேங்கடசாமியார்
௧௯. சோமசுந்தர் பாரதியார்
௨௦. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
௧. கோ.சாரங்கபாணியார்
௨. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
௩. அ.பு.திருமாலனார்
௪. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
௫. கம்பார் கனிமொழி குப்புசாமி
௬. மணி. வெள்ளையனார்
௭. திருமாறன்
௮. இரெ.சு.முத்தையா
௯. இரா. திருமாவளவனார்
௧௦. இர. திருச்செல்வனார்

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள்.

வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு,
மாலை
யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

அ. இளவேனில் - (தை---மாசி)
ஆ. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
இ. கார் - (வைகாசி - ஆனி)
ஈ. கூதிர் - (ஆடி - ஆவணி)
உ. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
ஊ. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (சுறவம்) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

உலகத் தமிழர்களுக்கு, என் மனமார்ந்த நாளையத் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்...🌾
🌱அகத்தினில் அன்பு பொங்க
🌱ஆக்கத்தில் ஆவல் பொங்க
🌱இல்லத்தில் இன்பம் பொங்க
🌱ஈகையிலே அறம் பொங்க
🌱உணர்வினில் உண்மை பொங்க
🌱ஊக்கத்தில் உயர்வு பொங்க
🌱எண்ணத்தில் எழுச்சி பொங்க
🌱ஏற்றத்தில் நிறைவு பொங்க
🌱ஐயத்தில் தெளிவு பொங்க
🌱ஒற்றுமையில் வலிமை பொங்க
🌱ஓய்வினில் அமைதி பொங்க...

பொங்கட்டும் பொங்கட்டும், புதுப் பொங்கல் பொங்கட்டும்...

தங்கட்டும் தங்கட்டும், தங்கத்தமிழ் தரணியெங்கும்...

நண்பர்களே.....

தமிழர் புத்தாண்டு தை...
நம் அனைவருக்கும்!

ஆரோக்கியத்... தை..,
நலத்................... தை,
வளத்.................. தை,
சாந்தத்............... தை,
சமத்துவத்......... தை,
நட்பில் சுகத்..... தை,
பந்தத்................. தை,
பாசத்................... தை,
நேசத்.................. தை,
இரக்கத்.............. தை,
உற்சாகத்........... தை,
ஊக்கத்............... தை,
ஏற்றத்................. தை,
சுபிட்சத்............... தை,

             கொடுத்து...

ஆணவத்.... தை,
கோபத்........ தை,
குரோதத்..... தை,
சுயநலத்...... தை,
பஞ்சத்.......... தை,
வஞ்சத்......... தை,
வன்மத்......... தை,
துரோகத்...... தை,
அலட்சியத்... தை,
அகங்காரத்... தை,

                எடுத்து...

🙏🌹எல்லோரும்🌹🙏 இனிமையாய் வாழ...
 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...*💐






தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..