Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
+2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் ? கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது ? வழிமுறைகள்
Posted By:peer On 5/15/2018 12:38:27 PM

முகம்மது ரபிக்
__________

+2 மாணவர்களே,

நீங்கள் தேர்வில் பெறப் போகும் மதிப்பெண்கள் உயர் கல்வி படிப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் தேர்வு செய்ய உதவ போகின்றன.......


மதிப்பெண்கள், உயர்ந்தாலும் குறைந்தாலும் " உங்கள் வாழ்க்கை உங்கிளிடம் இருக்கும் நல்ல பண்புகள் ( நல்ல ஒமுக்கம் ) மற்றும் திறமையை பொருத்தே அமைய போகின்றன

தேர்வில் மட்டும் அல்ல...
வாழ்க்கையிலும் நீங்கள் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.


இன்ஷா அல்லாஹ் இறை நம்பிக்கையோடு ஆரம்பிங்கள், உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்

என்ன படிக்கலாம் ? எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

என்ன படிக்கலாம் ?

1. முதலில் உங்களுக்கு விருப்பமான எந்த துறையில் வேலைக்கு செல்லப் போகிறிர்கள் அல்லது வேலை வாய்ப்பை உருவாக்க போகிறிர்கள் என்று முடிவு செய்யுங்கள்.

(Teacher, Doctor, Engineer, Scientists, IAS,IPS, Architect, Lawyers Etc...இது போன்று நீங்கள் என்ன ஆக போகிறிர்கள் என்று முடிவு எடுங்கள் )

2.நீங்கள் என்ன ஆக விரும்புகிறிர்களோ, அந்த துறை சார்ந்த படிப்புகளை பட்டியலிடுக.
(LIST THE COURSES)

3. எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும், அரசு வேலைகளில் அதிக வாய்ப்புகளும், தனியார் துறைகளிலும் வாய்ப்புகள் உள்ள படிப்பாக இருக்க வேண்டும்

4. பட்டியலில் உள்ள படிப்புகளில், உங்களுக்கு பிடிக்காத படிப்பை நீக்கிவிட்டு, மீதமுள்ள படிப்புகளில் உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ,உங்களுக்கு பிடித்த ஒரு படிப்பை (course) தேர்ந்தெடுங்கள்

5. தற்போது, உங்களுக்கு பிடித்த ஒரு படிப்பை தேர்ந்தெடுத்திருப்பிர்கள்

_____________

தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்பை எங்கு படிக்கலாம் ??

1.உங்கள் குடும்ப பொருளாதார
சூழ்நிலைக்கு ஏற்ப்ப கட்டணம் உள்ள கல்லுரிகளை பட்டியலிடுக

2. பட்டம் பெறுவதறக்காக பாட புத்தகத்தை மட்டும் படிக்க வைக்காமல் , வேலை வாய்ப்பிற்க்கான பயிற்ச்சிகள் அதிகம் உள்ள கல்லுரியை தேர்ந்தெடுங்கள்

3. குறைந்த கல்விக் கட்டணம் பெறும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள்

4. உங்களுக்கான கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தரும் கல்லுரியை தேர்ந்தெடுங்கள்
_____________

குறைந்த கல்வி கட்டணத்தில் எப்படி படிக்கலாம் ?

1. அரசு பல்கலைக்கழகங்கள் ,அரசு கல்லுரிகள் அல்லது அரசு உதவி பெறும் கல்லுரிகளை தேர்ந்தெடுங்கள்

2. கலந்தாய்வு மூலமாக கல்லுரியை தேர்ந்தெடுக்கலாம்(Counseling)

முதல் பட்டதாரிகளாக இருந்தால், தாசில்தாரிடம் முதல் பட்டதாரிக்கான சான்றிதழை கலந்தாய்வின் போது சமர்பிக்கலாம்.

முதல் பட்டதாரிகளுக்கு, அரசு மற்றும் தனியார் (Self Finance) கல்லுரிகளில் படிப்புகளுக்கு சலுகைகள் உண்டு.

குறிப்பு :

பெற்றோர்களை உங்கள் பிள்ளைகளை படிப்புகளை தேர்வு செய்ய சொல்லுங்கள்

அங்கீகாரம் பெற்ற கல்லுரிகளை தேர்ந்தெடுங்கள்.

கல்லுரியில் உங்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கிதருவார்களா என்று கேட்காதிர்கள், கல்லுரிகள் உங்களுக்கு வாய்ப்புகளை கொடுப்பார்கள் , உங்களிடம் திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்பை பெற முடியும்.

தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற கல்லுரிகள் மற்றும் தான் நல்ல கல்லுரிகள் என்று நினைக்காதிர்கள்

கல்லுரிகளின் கட்டட அமைப்பை பார்த்து தேர்ந்து எடுக்காதிர்கள்

எந்த துறை எடுத்தால், ஒரு லட்சம் வருமானம் கிடைக்கும் என்று கேட்காதிர்கள், உங்களிடம் திறமை இருந்தால் சாதிக்கலாம்.

எந்த படிப்பை படித்தாலும் டிகிரி வாங்கலாம்,

ஆனால் திறமை, கடின உழைப்பு, ஒமுக்கம், இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

முகம்மது ரபிக்
உதவிப் பேராசிரியர்

உயர் கல்வி வழிகாட்டி புத்தகம் பெற / ஆலோசனை பெற

முகம்மது ரஜாக் மெய்னூதீன்

+917502243467

Youtube Channel : Scholar Rabik

Mail : rabik.scholar@gmail.com

SKILLED YOUTH PROFESSIONALS ASSOCIATION ( SYPA)


https://youtu.be/9i67GBUABFs




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..