Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
காவல்துறை நண்பனா?பகைவனா ?
Posted By:peer On 3/1/2018 5:57:36 AM

 

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு ..ஜனநாயக நாட்டில் அனைத்து துறைகளிலும் தவறுகள் மலிந்து கிடக்கின்றன .. அதற்க்கு காவல் துறைகளும் விதி விலக்குகள் அல்ல.

.இந்தியா போன்ற நாடுகளில் ஒரு சமூகம் தன் உரிமைகளுக்காக தவறான வழிகளில் போராடுகின்றது என்றால் அவர்களின் வரலாறு காவல் துறையால் முன்பு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்திகள் தொடர் ஆச்சரியத்தை நீதிக்கான ஊடகவியலாளர்களுக்கு தருகின்றது .

பல எடுத்துக்காட்டுகளை எழுதுவதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் நடந்த தமிழகத்தில் எஸ்.பி. பட்டணத்தில் காவல் துறை அதிகாரி காளி தாஸ் என்பவரால் கொலை செய்யப்பட்ட செய்யது முஹம்மது மற்றும் 2015 ஆம் ஆண்டில் மேலப்பாளயத்தில் கடத்தப்பட்ட சிறுமி முஹம்மது சிறுமி இவர்களை வைத்து காவல் துறை முஸ்லிம் சமூகங்களுக்கு நண்பனா பகைவனா என்று பார்ப்போம் ....

S .P பட்டணம்
செய்து முஹம்மது விசாரணையில் கண்டறிந்த உண்மைகள்:
*************************
1.இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சையது முகமது என்ற 22 வயது இளைஞர், காவல் நிலையத்தில் ஜட்டியோடு அமர வைக்கப்பட்டு, பின்பு கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு சார்பு ஆய்வாளர் காளிதாஸ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர்கள் துரைக்கண்ணு, அய்யப்பன்,தனபால், இளைஞர் காவல் படைக் காவலர்கள் ரவி, மகாலிங்கம் ஆகியோரே பொறுப்பு.

2.விசாரணைக் கைதி சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பி.யூ.சி.எல் – எதிர் – மகாராஷ்டிரா அரசு வழக்கில் உருவாக்கிய ‘காவல் மோதல் சாவுகளில்’ (Police Encounters) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான காவல்துறை நிலையாணை 151-ன் கீழான விதிகள் மீறப்பட்டுள்ளன. இது கடுமையான நீதிமன்ற
அவமதிப்புக் குற்றமாகும்.

3.சந்தேகம் ஏதுமின்றி, தான் சுட்டுக் கொன்றதை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் ஏற்றுக் கொண்டு பாராக் காவலர் புகார் அளித்த நிலையில், கு.பி.ந.ச. பிரிவு 176(1)-ன் கீழ் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறானது, உள்நோக்கம் கொண்டது.

4.கொலை வழக்கு பதிவு செய்வோம் என மக்களிடம் உறுதியளித்த இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதனை மீறியது கடும் கண்டனத்திற்குரியது.

5.காவல் நிலையத்திலேயே சையது முகமது இறந்து விட்டார். ஆனால் ‘இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பும் வழியில் இறந்து விட்டார்’ எனக் குறிப்பிட்டு, சையது முகமதின் தாயார் திருமதி செய்யதலி பாத்திமாவிற்கு திருவாடனை உட்கோட்ட, காவல் துறை துணை கண்காணிப்பாளர், தொண்டி காவல்நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டியன் மூலம் கடிதம்
கொடுத்திருப்பது,வழக்கின் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் குற்றமாகும்.

6.சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமது மீது குற்ற வழக்குகள் ஏதுமில்லை. அவர் எஸ்.பி.பட்டண காவல் நிலைய ரவுடிகளின் பட்டியலில் உள்ளவர் அல்ல.

7.பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா சொல்லியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சம்பவத்தன்று எந்த வன்முறையும் நிகழவில்லை. நடந்த சம்பவங்கள் குறித்து நேரடியாகத் தெரியாமல் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் எச். ராஜா தெரிவித்த கருத்துக்கள் பொறுப்பற்றது, கடும் கண்டனம், நடவடிக்கைக்குரியது.

8.சார்பு – ஆய்வாளர் காளிதாசின் பேஸ்புக் கணக்கு சிறிது காலம் முடக்கப்பட்டு, போட்டோ, பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது,சந்தேகத்திற்கும், விசாரணைக்குரியதாகவும் உள்ளது.

மேலப்பாளையம் சமீரா விசாரணையில் கண்டறிந்த உண்மைகள்:
*************************
1.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 9 வயது சிறுமி முஹம்மது சமீரா ஆவார்.

2.08-02-2015 அன்று மாலை 5 மணிக்கு சட்டத்திற்கு புறம்பான முறையில் காவல்துறையினரால்கடத்திசெல்லப்பட்டுசித்திரவதை செய்யப்பட்டுள்ளார் . இவருடைய தந்தை தென்காசி ஹனீபா தற்போது சிறையில் உள்ளவர் .

3.காவல்துறையினர் சிறுமியின் வாயில் துணியை வைத்து கத்து முனையில் கடத்தி உள்ளனர் . மேலும் முதுகில் அடித்தும் தலையை
அமுக்கியும் விசாரணை நடத்தி மிரட்டி உள்ளனர் ..

4.சம்பந்தப்பட்ட சிறுமியிடம் தன் வீட்டிற்கு வருபவர்கள் பற்றியும் , வருமானம் பெறப்படும் வழிகள் பற்றியும் தேவைற்ற கேள்விகளை
கேட்டுள்ளனர் ..

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி கிடைத்ததா ?
***********************
1.எஸ்.பி.பட்டணம் செய்யது முஹம்மது கொலை வழக்கில் :
கொலைசெய்த காவல் துறை அதிகாரிக்கு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு எதிர் பார்க்கப்பட்ட மரண தண்டனை கிடைக்க வில்லை.

2.உடந்தையாக இருந்த பல காவல் துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவில்லை ...

3.செய்யது முஹம்மது குடும்பத்திற்க்கு வழக்கை சரி செய்யும் நோக்கில் குறைவான நிவாரணம் வழங்கப்பட்டதாக தகவல் ..

4.மேலப்பாளையம் சமீரா கடத்தல் வழக்கில் கடத்தப்பட்ட உளவு துறை அதிகாரியை கைது செய்யப்படவில்லை

5.பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு பாதுகாப்புகள்முறைப்படுத்த வில்லை ...

உரத்த சிந்தனை :
**********
1.நிவாரண நிதியாக தரப்படும் பணங்கள் பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதியை இழப்பீட்டை தர முடியுமா என காவல்துறையும் ,நீதித்துறையும் முதலில் சிந்திக்க வேண்டும் ...

2.இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்டோருக்கு நீதியாக அமையும் என்ற வாதத்தை ஏற்றால் கொலைகாரர்கள் காசு கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் நடுநிலை சமூகங்கள் மீது கொலை முயற்சிகளை கட்டவிழ்க்கலாம்

3.பாதிக்கப்பட்ட சமூகங்கள் பொதுவான விடயத்தில் நீதியை பெற அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். ஒட்டு மொத்தமாக கலந்து ஆலோசித்து கருத்துக்களை ஒருமுகமாக
வெளியிட வேண்டும் மற்றும் போராட வேண்டும்

4.நீங்கள் எந்த அளவிற்கு ஜமாஅத் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றீர்களோ அந்த அளவிற்கு உங்கள் பிரச்சினைகளை காவல் துறை தலையீடு இல்லாமலே உங்கள் பிணக்குகளை முடித்துக் கொள்ள முடியும் ...

5.இது போன்ற வழிமுறைகள் சமூக கட்டமைப்பிற்கு தகுந்தாற்போல
இந்தியாவில் முஸ்லிம்களுக்கான சாதக சட்டங்கள் உருவாக்க காரணமாக அமையும் ..

6.ஒரு இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளில் இரவு நேரங்களிலோ அல்லது ஆண்கள் இல்லாத நேரங்களிலோ ஜமாஅத் அனுமதி இன்றி விசாரணைக்காக காவல் துறை வரக்கூடாது என்ற சட்டத்தை உருவாக்க அடுத்த கட்டமாக கோரிக்கை வைக்க முடியும் ..

7.அதன் மூலம் ஒருவர் செய்த குற்றத்திற்காக , விசாரணை என்ற பெயரில் வயதானவர்கள் , பெண்கள், குழந்தைகள் நோயாளிகள்துன்புறுத்தப்படும் அக்கிரமங்கள் ஒழிக்கப்படும்...

8.இந்தியாவில் இஸ்லாமிய சமூகங்கள் காவல்துறைக்கு நீதிக்கான விடயத்தில் ஒத்துழைப்பு தரும் எண்ணத்திலேயே இருக்கின்றார்கள்.

9.ஆனால் மாறாக காவல் துறையில் அதிகமான அதிகாரிகள் முஸ்லிம்களை திட்டமிட்டு இன்னல்களுக்கு ஆளாக்கும் சதிகளே
தொடருகின்றன . இது காவல்துறை மற்றும் அரசு மீதான நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது .

10.இந்தியாவில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் சிறந்த காவல் துறை அதிகாரிகள் இன்னும் இருக்கின்றார்கள் .. மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாச மதவாத சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் முயற்சியில் கொல்லப்பட்டு இறந்தும் இருக்கின்றார்கள்..

11.அவர்களை போன்ற காவல்துறை வீரர்கள் இந்தியாவில் நீதிக்கான நண்பர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை

12.அதே வேளையில் தொடர் சித்ரவதையால் பாமர மக்களின் ரத்தம் தெறித்து தெறித்து காக்கிச்சட்டை காவிச்ச்சட்டையாக மாறிப்போன பாசிஸ்ட்கள் மக்களால் அடையாளம் காணப்பட்டு களைந்துஎறியப்படவேண்டியவர்களே

அபூஷேக் முஹம்மத்...




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..