Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
யார் இந்துக்கள்??? தமிழர்கள் "ஹிந்துக்களா??" -- விளக்க கட்டுரை தொகுப்பு..
Posted By:Hajas On 1/30/2018 2:44:53 AM

யார் இந்துக்கள்??? தமிழர்கள் "ஹிந்துக்களா??" -- விளக்க கட்டுரை தொகுப்பு..

 

Image may contain: one or more people and outdoor

 

ஹிந்துக்கள் என்னும் தனி அடையாளம்மே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியின் பின் பகுதிகளில் தான் கொடுக்கப்பட்டது.. அதுவரை, இந்தியாவில், சைவர்கள், வைணவர்கள், ஆசிகம், சாகியம் என பல்வேறு பிரிவுகள், தனி தனியான வழிபாட்டு முறைகளை கொண்டிருந்தன.. தமிழகத்தில் அரசர்கள் எந்த பிரிவை பின்பற்றினாரோ, அதுவே அந்நேரத்தில் மக்களின் மதமாக விளங்கியது.. மூத்தோர் (குலதெய்வம், வீட்டு சாமி) வழிபாடு, வீரர்களின் நடுக்கல் வழிபாடு போன்றவைகளே முதலில் தமிழர்கள் மத்தியில் இருந்தது.. பின்னர், சமணம், பவுத்தம் போன்ற சமயங்கள் எழுச்சிபெற்ற காலங்களில், சைவம், வைணவம் போன்றவை, ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற சமய அடியார்களால் மீள்விக்கப்பட்டது.. அப்போதும், சைவம், வைணவம் என பிரிந்தே செயல்பட்டன.. இப்போதும், பெருமாளை கும்பிடும் வைதீக வைணவ பிரிவினர், சிவன் கோயில்களுக்கு செல்லமாட்ர்கள்.. இதிலும், துவைதம், உருவ வழிபாட்டை மறுக்கும் அத்வைதம், விசிட்டாத்துவைதம், வடகலை, தென்கலை என ஏகப்பட்ட பிரிவுகள்...

பொதுவாக சைவ பிரிவு தமிழக மக்களிடைய பரவலாக ஊடுருவிய ஒன்றாக விளங்கியது.. பிராமணர்கள் அல்லாத பல்வேறு சைவ மடங்கள் இங்கு உண்டு.. தமிழ் சமூகம் எப்போது சனதான மனுதர்ம வைதீக வேத மதத்தை எதிர்த்தே வந்துள்ளது.. சைவ மடங்கள், சைவ சிந்தாந்த திருச்சபைகள், சித்தர்களின் மரபுகள், பட்டினத்தார் போன்ற துறவிகள், அருப்பெரும் சோதி வள்ளலாரரின் சன்மார்க்க சபை, முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர் என பல்வேறு காலகட்டங்களில் வைதீக வேத சனாதான மதத்தை, அதின் மக்களை பிரிக்கும், இழிவுபடுத்தும் கொள்கைகளை எதிர்த்து, சமதர்மம் பேசினார்கள்.. ஈழத்திலும் தமிழர்கள் சைவ மதத்தினர் என்றுதான் அடையாளபடுத்திகொண்டனர்..

ஆனால், பிற்காலத்தில், எதிர்ப்பவர்களையும் உள்வாங்கி, "ஹிந்து" என பொது அடையாளம் சனதான மதவாதிகளால் உருவாக்கப்பட்டது.. இந்திய அரசியல் சட்டத்திலும், யார் இந்துகள் என்னும் பிரிவில், யாரல்லாம் முகமதியர் இல்லையோ, கிருஸ்துவர் இல்லையோ, பார்சி இல்லையோ, யூதமதம் இல்லையோ, அவர்கள் எல்லாம் சட்டத்தின்படி இந்துக்கள்.. அதிலும் பவுத்த, சீக்கிய, சமணர் (ஜெயின்) கள், சட்டத்தின் படி இந்துக்கள், ஆனால், மதத்தின் படி இந்துக்கள் அல்ல.. (The Buddhists, Jains and Sikhs are explicitly included in the Hindus by law but separated from the Hindus by religion)

இப்படி பிராமணர்களின் மேலாதிகத்துக்காக, எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட, கலந்து கட்டப்பட்ட கதம்பம் தான் இப்போதைய ஹிந்து மதம்.. ஹிந்து மதத்தின் தேவ மொழி என சொல்லப்படும், பூஜைகள் & மந்திரங்கள், வேதங்கள் இருக்கும் மொழியான சமஸ்கிருதம் இருந்ததற்கான ஆதாரம் கிபி 4 நூற்றாண்டில் தான் உள்ளது.. ஆனால், திராவிட மொழியாகிய தமிழுக்கான ஆதாரம் கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே உள்ளது.. மேலும், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பண்டைய தமிழ் சமூக வாழ்விட தொல்லியல் ஆய்வுகளில், எந்த ஒரு ஹிந்து கடவுள்களின் உருவங்களோ, வழிப்பட்டதற்கான ஆதாரங்களோ கிடைக்கவில்லை..

சைவம் வேறு, வைணவம் வேறு. சித்தர் கர்ப்பிபதை பின்பற்றினால் வேதம் ஒழிய வேண்டும். வேதம் சொல்வதன் படி போனால் சித்தர்கள் அயோக்கியர்கள். அத்வைதம்படி போனால் எல்லாமும் சரியே. நிகிலிசம் சரி என்றால் எல்லாம் மாயையே. காளி நரபலிக்கும் கருப்பு வழிபாடுகளுக்கும். ஊர் சாமி கோயில்கள் பக்கத்து ஊரன் நம் ஊரை அடிக்க வந்த போது அவனை எதிர்த்த மாவீரர்களுக்கு உரியது. முருகன் தமிழ் கடவுள், வடநாட்டானுக்கு தெரியாது. வழிபட மாட்டான். அம்மன் வழிபாடு திராவிடரின் வழிபாடு. இத்தோடு உலகின் பண்டைய குடிகளில் காணப்படும் மூதாதையர் வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய குடிகள் இன்றும் கொண்டிருக்கும் இயற்கை சக்தி வழிபாடு, உலகத்தின் அனைத்து குடிகளிலும் இருந்த/இருக்கின்ற யோனி வழிபாடு, ஆண் குறி (லிங்கம் என்ற சொல் இன்றளவும் ஹிந்தியில் ஆண் குறியை குறிக்கும்) வழிபாடு. இன்னும் எத்தனையோ மார்க்கங்களும் இந்து மகாநதிக்கு அப்பால். இப்படி தான் இந்து மதம் என்ற பெயர் வந்தது.

ஆரியர்கள் திராவிடத்தில் ஊடுருவும் முன்னர் அம்மன் மற்றும் சைவ வழிபாடே பிரதானமாக இருந்தது. ஈழத்தில் சைவ மதம் என்று அழைக்கப்படுவதும் தமிழன் இராவணின் தெய்வமாக சிவபெருமான் இருந்ததும் கவனத்தில் எடுக்கவும். திராவிட வழிபாடுகள் எப்படி ஆரிய நோக்கில் வளைத்து ஒடிக்கப்பட்டு, ஆரிய கடவுள்களை திராவிடர்கள் வழிபடவும் ஆரிய பூசாரிகளை (பிராமணர்கள்) திராவிடர்கள் கொண்டாடும் நிலையும் உருவாக்கப்பட்டது என்பதை Dravidian Gods in Modern Hinduism by Wilber Theodore Elmore, என்ற ஆய்வு நூல் விவரிக்கிறது. இந்த ஆய்வு ஆந்திராவை மையமாக கொண்டது எனினும் தமிழரின் கிராமப்புற வழிபாட்டு முறைகள் அறிந்தவருக்கு ஒப்பிட கூடியதாகவே உள்ளது. மதத்தால் வேருன்றிய ஆரியம், வீரியம் கொண்டதும் வர்ணாசிரம முறை வளர்ந்ததும், இன்றளவும் ஆரியன் இராமன், தமிழன் இராவணனை கொன்றதை நாமே துதிப்பதும் விழா எடுப்பதும் என தமிழன் ஆரியனிடம் சமூக கலாச்சார தேசிய அடிமையாக இருப்பதும் காண கூடியதாக உள்ளது. ஹிந்து வெறியர்களுக்கு பணிய நேர்ந்தால் இராஜபக்சேயை நம் சந்ததியினர் கோயில் கட்டி கும்பிட்டு பிரபாகரன் பொம்மை எரித்து மே 18 ஐ விழாவாக கொண்டாடினாலும் ஆச்சர்யமில்லை. இராவணனுக்கும் இதுவே தான் நடந்தது.

வட நாட்டு ஆரிய கடவுள்களான கிருஷ்ணர், ராமர் போன்றவர்களை, இங்கே உள்ள "இந்து" க்கள் கொண்டாடுகிறார்கள்... ஆனால், நமது தமிழ் கடவுள் முருகனை, வட நாட்டு "ஹிந்து"க்கள் கொண்டாடுகிறார்களா???... இல்லையே..... விநாயகர் சதூர்தியை இங்கே கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கந்த சஷ்டியை அவர்கள் கொண்டாடுகிறார்களா??? இல்லையே..

ஆரியர்கள் இங்கே வந்த போது, அவர்களின் கடவுள்களும் கூடவே இங்கு பரவினர்...இங்கே இருந்து யாரும் அங்கே செல்லாததால், முருகர் போன்ற தமிழர் கடவுள்கள் அங்கே பரவவில்லை...அதே போல, இங்கே உள்ள ஆரிய பார்ப்பனர்கள், காவடி தூக்கி தமிழர் கடவுளான முருக வழிபாட்டை செய்வதில்லை..தை பூசம், ஆடி கிருத்திகை போன்ற பண்டிகைகளை, பிற தமிழர் கொண்டாடுவது போல, கொண்டாடுவதில்லை... அதே போல, தீ சட்டி ஏந்தி, அலகு குத்தி, அம்மன் வழிபாடும் அவர்கள் செய்வதில்லை...

தமிழகத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் மலேசிய, மொரிஷியஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் கொண்டாடுவது முருகர் வழிப்பாடு மட்டுமே...ஈழத்தில் இருப்பவைகள் பெரும்பாலும் சைவ மற்றும் முருக வழிப்படு மட்டுமே...அங்கே ராமர், கிருஷ்ணர் வழிப்பாடு கிடையாது...

தமிழர் வழிப்பாடு பெரும்பாலும் முருக வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு (அம்மன்), முனியன், மதுரை வீரன் போன்ற சிறு தெய்வ (நாட்டார் சாமிகள்), குல தெய்வ வழிப்பாடு ஆகும்...மற்றவைகள் எல்லாம், பிற்காலத்தில், ஆரியர் வருகைக்கு பின் வந்தவைகள் ஆகும்...முருகரும், பழங்கால தமிழ் அரசர் என்ற ஒரு கருத்தும் உண்டு....

இலங்கையில் ஆயிரகணக்கான தமிழ் இந்துக்கள் கொல்லபட்டார்களே, பல நூறு இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டனவே... அப்போது இங்கே, இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஹிந்துத்துவா இயக்கங்களோ, மோடி போன்ற ஹிந்து தேசியவாதிகளோ ஒன்றுமே செய்யவில்லையே...ஒரு சிறு எதிர்ப்போ, போராட்டம்மோ எதுவும்மே செய்யவில்லையே.. குறைந்தபட்சம் அறிக்கையோ கூட இல்லையே.. அப்போ தமிழர்கள், ஹிந்துக்கள் இல்லையா?? ராஜபக்சவை யுத்தக்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது அப்படின்னு பிஜேபி ரவிசங்கர் பிரசாத் சொல்லவில்லையா...ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை. தனி ஈழ கோரிக்கையை பாஜக ஆதரிக்கவில்லை" அப்படின்னு பிஜேபி சுஷ்மா சுவராஜ் சொல்லலையா... இங்கே ராஜபட்ச்வை அழைத்து விருந்து கொடுக்கவில்லையா?? அப்போது இந்த தமிழர்கள் இந்துக்கள் என்னும் உணர்வு எங்கேபோயிற்று??

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது. இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, ""நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது''’என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.

தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.

வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.

வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.

 

https://www.facebook.com/211971008967314/photos/a.525429037621508.1073741829.211971008967314/949386748559066/?type=3&permPage=1

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..