Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19
Posted By:Hajas On 1/22/2018 1:01:27 PM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம்:18 : மர்ம இந்தியா

பாகம்:19 : 'மர்ம இந்தியா 'தொடர்ச்சி

 

கடந்த பாக தொடர்ச்சியாக மேலும் சில இந்திய மர்மங்களை பார்க்கலாம்.

திகில் கிராமம் :

மேற்கு ராஜஸ்தானில் ஜெய்சல்மாரில் இருந்து 15 கி.மி தொலைவில் உள்ளது "kuldhara " கிராமம். கிட்ட தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே கிட்ட தட்ட 1500 கிராம வாசிகள் வசித்து வந்தார்கள். திடீரென்று.....ஒரு நாள் இரவோடு இரவாக அனைவரும் மாயமாகி விட்டார்கள். (கனடாவின் lake anjikuni கிராமத்து மக்கள் மாயமானதை பற்றி இந்த கட்டுரை தொடரில் ஏற்கனவே ஓர் இடத்தில் பார்த்தோம் நினைவு இருக்கிறதா இது இந்தியாவில் நடந்த அதை ஒத்த ஒரு சம்பவம் தான் )

 

அந்த மக்கள் யாரும் இறக்க வில்லை ..கடத்த படவும் இல்லை. எங்கே போனார்கள் என்று தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள் அவ்ளோ தான். இதற்கு பின்னால் ஒரு கதை சொல்ல படுகிறது. அந்த இடத்தை ஆண்டு வந்த தீயவனான திவான் ஒருவன் அந்த கிராமத்து தலைவரின் மகளை பார்த்து ஆசை கொண்டதாகவும் அவளை ஒப்படைக்க கிராம வாசிகளுக்கு கால கெடு கொடுத்ததாகவும் அப்படி ஒப்படைக்காத பட்சத்தில் அணைவரையும் நாசம் செய்து பெண்ணை கடத்தி செல்ல போவதாகவும் சொல்லி இருந்தானாம். அதனால் இரவோடு இரவாக 84 கிராம தகைவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தார்களாம் அதன் படி அந்த கிராமதத்தை சபித்து விட்டு மொத்தமாக காலி செய்து விட்டார்களாம்.

அதன் பின் அங்கே யாரும் தங்க துணிவது இல்லை. காரணம் அங்கே தங்க முயன்ற சிலர் மர்மமாக மிக கொடூரமாக இறந்து போனார்கள் . பலர் அங்கே ஆவிகள் வேட்டை ஆடுவதாக தங்கள் அனுபவத்தை சொன்னார்கள். இன்றும் பாலைவனமாக குட்டிசுவராக யாரும் தங்க துணியாத ஒரு இடமாகவே உள்ளது kuldhara கிராமம்.

மர்ம கோட்டை :

இந்தியாவில் ஆவி நடமாட்ட பகுதி என்று எடுத்து கொண்டால் அதில் முதல் இடம் பிடிப்பது Bhangarh, எனும் கோட்டை தான். இது ராஜஸ்தானில் உள்ள ஒரு கைவிட பட்ட கோட்டை. எந்தளவு மர்ம கோட்டை என்றால் இந்திய அரசாங்கமே அங்கே சூரியன் மறைந்த பின் அங்கே தங்குவதற்கு தடை என்ற பலகையை வைத்து இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

 

காரணம் அங்கே யாரும் சூரியன் மறைந்த பின் தங்குவது இல்லை. காரணம் அங்கே சொல்ல படும் வித விதமான மர்ம கதைகள். அந்த கிராமம் சபிக்க பட்டதற்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் கதைகள் சொல்ல படுகிறது. ஆனால் அந்த இடத்தை நிஜமான திகிலாக மாற்றியது என்ன வென்றால் அங்கே இருட்டிய பின் தங்க போன யாரும் உயிரோடு திரும்புவதில்லை என்ற உண்மை தான்.

சிவாபூரின் மர்ம கல் :

மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து 160 கி.மி மேற்ககே உள்ளது சிவாபூர் . இங்கே Hazrat Qamar Ali, எனும் சுபி ஞானியின் சன்னதி உள்ளது. கூடவே ஒரு மர்ம கல்லும்...அந்த ஞானி தனது கடைசி காலத்தில் மரண படுக்கையில் இந்த கல்லை தனது கல்லறை அருகே வைக்க சொன்னாராம். உடல் பலத்தை விட ஆன்ம பலம் தான் மேலானது என்பதை காட்ட அவர் ஒரு காரியம் செய்தாராம். அதன் படி 70 கிலோ எடை கொண்ட அந்த கல்லை 11 பேர் ஒன்றாக சேர்ந்து வெறும் சுட்டு விரலால் மட்டும் தொட்டு கொண்டு தனது பெயரை ஒரே நேரத்தில் சப்தமாக அழைத்தால் அந்த கல் எடையற்று போய் 11 பேரின் விரல்களால் தூக்க முடிய கூடிய அளவில் மிதக்கும் கல்லாக மாறிவிடும் என்றார்.

 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இன்றும் அதை அங்கே செல்லும் மக்கள் முயற்சித்து பார்த்து அது வேலை செய்வதை கண்டு அதிசையிக்கின்றனர் என்பது தான். தனியாக முயன்று பார்த்தால் தூக்க முடியாத அந்த கல் 11 பேரின் விரல் மட்டும் பட்டதும் எப்படி தூக்க முடிகிறது என்பது இன்னுமும் மர்மம் தான். வரும் காலத்தில் அதில் ஏதும் விஞ்ஞானம் இருந்து கண்டு பிடிக்க படலாம் ஆனால் இன்று வரை அது ஒரு மர்மம் தான்.

ஒன்பது மர்ம மனிதர்கள் :

உலகில் இலுமிநாட்டி எனும் ரகசிய கூட்டத்திற்கு ஒப்பான ஒரு ரகசிய குழு அசோக பேரராசரால் கிமு 273 இல் உண்டாக்க பட்டதாக சொல்ல படுகிறது. கலிங்க போரில் 1 லட்சம் பேர் கொல்ல பட்டத்தை தொடர்ந்து அரசர் அசோகர் புத்த ஞானியின் சிந்தனையால் ஆட்கொள்ள பட்டு புத்த மதத்தை தழுவியது நமக்கு தெரிந்த வரலாறு தான். ஆனால் அரசாங்கத்தை விட்டு அவர் துறவறம் செல்லலும் முன் அவர் ஒரு 9 பேர் கொண்ட ரகசிய குழுவை உண்டாக்கினார் என்கிறார்கள். அவர்களது வேலை தவறான தகுதி அற்றவர்கள் கையில் அரசாங்கம் செல்லாமல் பார்த்து கொள்வது. மேலும் அவர்கள் 9 பேரும் ஒரு மர்ம புத்தகத்தை பாதுகாக்கும் படி பணிக்க பாட்டார்கள்.

 

அந்த புத்தகம் மனோத்துவம் , யுத்த நுணுக்கம், நுன்உயிர் அறிவியல் , தொலை தொடர்பு, வான சாஸ்திரம், ஈர்ப்பு விசை ,போன்ற பல விஷயங்களை உட்கொண்ட அறிவு களஞ்சியம் என்றும். அந்த 9 பேரின் பரம்பரை இன்னுமும் தொடர்வதாகவும் இன்னுமும் ரகசியமாக அந்த புத்தகத்தை பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். ( தகுதி அற்றவர்கள் கையில் அரசாங்கம் போகாமல் பார்த்து கொள்வது தான் அவர்கள் வேலை என்றால் அந்த 9 பரம்பரை தங்கள் வேலையை ஒழுங்காக செய்வதாக தெரியவில்லையே )

எலும்பு கூடுகளின் ஏரி :

"Roopakund " இது கடல் மட்டத்தில் இருந்து 16500 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்திருக்கின்ற ஒரு மனித நடமாட்டம் அற்ற ஒரு ஏரி. 1942 ஆம் ஆண்டு ஒரு British forest guard அந்த ஏரியில் சில எலும்புகூடுகளை கண்டார். கோடை காலத்தில் பணிகள் கரைந்த நிலையில் தண்ணீரில் மிதந்து கொண்டும் ஆங்காங்கே தொற்றி கொண்டும் கிடந்த எலும்பு கூடுகளை அவர் பார்த்தார். அதன் பிறகு ஆராய தொடங்கிய போது அந்த ஏரி முழுவதுமே மனித எலும்பு கூடுகளால் நிரம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

 

இத்தனை பேருக்கு கும்பலாக என்ன நடந்து இருக்க முடியும் என ஆச்சர்ய பட்டார்கள் இவர்கள் உலக போரில் கொல்ல பட்ட ஜப்பானிய வீரர்கள் என்று சொல்லி வந்தார்கள் ஆணால் அந்த எலும்பு கூடுகளின் வயதை ஆராய்ந்த போது அது கிபி 850 இல் வாழ்ந்த மனிதர்களின் எலும்பு கூடுகள் என்று தெரிந்தது. இப்படி நூற்று கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் அந்த ஏரியில் வைத்து ஏன் கொல்ல பட்டார்கள் என்பது ஒரு புரியாத மர்மமாகவே இருக்கிறது.

நண்பர்களே இந்த உலகம் நிகழ்வுகளால் நிரம்பியது . அந்த நிகழ்வுகளில் பலது மர்மங்களால் நிரம்பியது. இந்திய நாட்டை எடுத்து கொண்டாலும் அல்லது எந்த நாட்டை எடுத்து கொண்டாலும் அங்கே வரலாறுகளை நிகழ்வுகளை தோண்ட தோண்ட மர்மங்கள் ஊற்று போல கிடைத்து கொண்டே இருக்கின்றன. தீர்க்க படாத மர்மங்கள் இவ்வுலகில் கணக்கில் அடங்காதவை. மர்மங்களுக்கு முடிவே இல்லை.

மர்மங்களுக்கு முடிவே இல்லை என்றாலும் நமது "மர்மங்கள் முடிவதில்லை "கட்டுரையை நாம் முடித்து தானே ஆக வேண்டும்.
அடுத்த பாகத்தில் முடிக்கிறேன்.

கடைசி பார்டில் பிரமாண்டமாக எதையாவது போடணுமே..!!. எதை போடலாம்....!! ??
ரைட் ' அதை 'பற்றி போடலாம்.....

மர்மங்கள் (இன்னும் ஒரு பாகம்) தொடரும்............🕷🕷

பாகம்:20 : 'மர்மங்கள் முடிவதில்லை  (இறுதி பாகம்)






Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..