Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3
Posted By:peer On 1/19/2018 2:43:29 AM

யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3

 

சைக்ஸ் -பைகாட் உடன்படிக்கை:
*************
முதல் உலகயுத்தம் என்பது உலக முஸ்லிம்களுக்கு எதிரானது. யூதர்களுக்கு ஆதரவானது என்று சொன்னால் அது மிகை இல்லை.

1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை நடந்தேறிய யுத்தத்தில் ஃபலஸ்தீன் எதிர்கொண்ட விடயம் உலகம் உற்று கவனிக்க வேண்டிய நிகழ்வுகளாகும். ஃபலஸ்தீன், சவூதி அரேபியா, ஏமன், லெபனான்,சிரியா,இராக்,ஜோர்டான் போன்ற நாடுகள் துருக்கியை தலைமையாகக் கொண்டு உதுமானியா பேரரசின் கீழ் பகுதியாக இருந்தது.

முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன்,பிரான்ஸ்,ஜாரிஸ்ட் ரஷ்யா போன்ற நாடுகள் நேச நாடுகள் என்ற பெயரில் ஒரு அணியாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா,ஹங்கேரி, போன்ற நாடுகள் அச்சு நாடுகள் என்ற பெயரில் ஒரு அணியாகவும் எதிரெதிராக போரிட்டனர்.

துருக்கி உதுமானிய பேரரசிற்கு எதிராக அரபுகள் பிரிட்டிஷ் படைகளுடன் இணைந்து போராடினால் சுதந்திர அரபு தேசம் அமைய பிரிட்டன் ஒத்துழைக்கும் என்று மக்கத்து நகர ஆன்மீகத் தலைவரிடம் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் அரபுக்கள் மற்றும் துருக்கியர்கள் என தேசியவாதச் சிந்தனையைத் தூண்டினார்கள். அரபுக்கள் டீ.ஈ லாரன்ஸ் என்ற தளபதியின் கீழ் முதல் உலகயுத்தத்தில் பங்கேற்று நேச நாடுகள் வெற்றிக்கு பங்காற்றினார்.

உதுமானிய பேரரசிற்கு எதிராக அரபுக்களை தூண்டிவிட்டு வாக்குறுதிகளை அள்ளித் தந்த பிறகு பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் திரைமறைவில் அந்த வாக்குறுதிகளை மீறும் ரகசியத் திட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

முதல் உலகயுத்தத்தில் வெற்றி பெற்றவுடன் நேச நாடுகள் வசம் வரக்கூடிய பகுதிகளை பங்கீட்டுக் கொள்வது தொடர்பாக பிரிட்டனும், பிரான்சும் ஒரு உடன்படிக்கைக்கு தயாராயினர்.

1916 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி அன்று பிரிட்டன் சார்பாக சர்.மார்க்சைக்ஸ் என்பவரும், பிரான்ஸ் நாட்டின் சார்பாக சார்லஸ் பைகாட் என்பவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கை சைக்ஸ் பைகாட் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகின்றது.

அவ்வுடன்படிக்கையின் அம்சங்கள் பின்வருமாறு:

சவூதி அரேபியா, ஏமன் போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும்.

லெபனான், மேற்கு சிரியா போன்ற நாடுகள் பிரான்ஸ் வசம் ஒப்படைக்கப்படும்.

இராக், ஃபலஸ்தீன், ஜோர்டான் போன்ற நாடுகளின் முக்கியப் பகுதிகள் இங்கிலாந்து வசம் ஒப்படைக்கப்படும். மீதமிருக்கும் பகுதிகள் சர்வதேச நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உலகயுத்தம் முடிந்த பிறகுசைக்ஸ் பைகாட் உடன்படிக்கையின் படி சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு மட்டும் விடுதலை வழங்கப்பட்டது. ஐ.நா.சபைக்கு முன்பு 1920 ஆம் ஆண்டில் league of Nations கட்டளை முறை என்ற புதிய காலனி ஆட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியது. இதன் காரணமாக, சிரியா மற்றும் லெபனான் நாட்டிற்க்கான கட்டளைப்பொறுப்பு பிரான்ஸ் நாடு வசமும், இராக் மற்றும் ஃபலஸ்தீனுக்கான கட்டளைப் பொறுப்பு பிரிட்டன் வசமும் ஒப்படைக்கப்பட்டது.

ஃபலஸ்தீன் நாட்டில் யூதர்கள் தங்களின் தேசத்தை அமைத்து கொள்ள பிரிட்டன் அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பை தந்தது. அதற்கான முயற்சியின் காய் நகர்த்துதலே மேற்சொன்ன சம்பவங்கள் ஆகும். இன்னும் யூதர்கள் மற்றும் பிரிட்டன் அரசின் ஃபலஸ்தீன் தொடர்பான விடயங்களை பல எடுகோள்கள்,வரலாற்று ஆதாரங்கள், முன்னறிவிப்புக்கள் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவுக்களைக் காண முடியும். ஆனால் தற்போது வெளிப்படையான உலக சம்பவங்களைக் காண்போம்.

2000 வருடங்களாக ஃபலஸ்தீனுடன் தொடர்பற்று உலகின் பல பகுதிகளில் இருக்கும் யூதர்களை வரவேற்கவும், ரஷ்யாவில் தீவிரமாக இயங்கும் யூதர்களை லெனின் தலைமையில் இயங்கும் போல்ஷ்விக் புரட்சி இயக்கத்தை விட்டு திசை திருப்பும் விதமாகவும் பிரிட்டன் அரசு ஃபலஸ்தீனில் யூத தேசம் அமைக்கும் கோரிக்கையை முன்னின்று செயல்படுத்தியது.

ஃபலஸ்தீன் நாட்டில் யூத தேசம் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக செய்ம்வெய்ஸ்மேன்- chaim weisman, வால்டர் ரோத்சைல்டு பிரபு போன்றவர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். செய்ம்வெய்ஸ்மேன் ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்து பிரிட்டனில் குடியேறிய யூதர் ஆவார். அவர் இஸ்ரேல் என்ற சட்டவிரோதமான நாடு உருவாகுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் முக்கிய பங்காற்றியவர். 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு அமைக்கப்பட்ட உடன் அதன் முதல் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஆவார்.

ஃபலஸ்தீன் நாட்டில் யூத தேசம் உருவானால் பிரிட்டன் அரசிற்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி 1914 ஆம் ஆண்டில் வெய்ஸ்மேன்
பின்வருமாறு கடிதம் எழுதினார்.

"பிரிட்டனின் செல்வாக்கு ஆளுகைக்குள் ஃபலஸ்தீன் வருமானால், பிரிட்டனை சார்ந்து நிற்கக்கூடிய யூதக் குடியிருப்பு ஃபலஸ்தீனில்
உருவாக பிரிட்டன் ஊக்கமளித்தால் அங்கே நாம் இருபது, முப்பது
வருடங்களில் 10 லட்சம் யூதர்களைப் பெற முடியும். சூயஸ் கால்வாயை பாதுகாக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த காலனியாக அது திகழும்."

ஆதாரம் : The tragedy of palestenian People , Novosty Press agency Publishing house , Moscow ,1984.

உலகின் எண்ணெய் வளத்தில் பாதிக்கு மேலானதை தன்னகத்தை கொண்டு உலக முதலாளித்துவத்திற்கு பிரதானமான எண்ணெய் வழங்கும் கேந்திரமாக விளங்கிய மேற்கு ஆசியாவை கட்டுப்படுத்த தங்களின் கையாளாக செயல்படக்கூடிய நம்பிக்கையான ஒரு காவல் அரண் பிரிட்டன் அரசுக்கு தேவைப்பட்டது. ஆகையால்,ஃபலஸ்தீனில் யூத தேசம் அமைக்கும் கோரிக்கையை ஆதரிக்கும் நிலையை பிரிட்டன் அரசு எடுத்தது.

(தொடரும்)

- அபூஷேக் முஹம்மத்






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..