Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2
Posted By:peer On 1/19/2018 2:42:50 AM

யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2

 

1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அன்று ஸ்விட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் முதல் சர்வதேச யூத மாநாடு கூட்டப்பட்டது. ஐரோப்பாவில் சிதறிக்கிடந்த யூத அமைப்புகளின் சார்பாக 204 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

யூத தேசியத்தின் தந்தை என்று கூறப்பட்ட
தியோடர் ஹெர்ஸல் முன் முயற்சியால் கூட்டப்பட்ட கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.

யூத விவசாயிகளும் , தொழிலாளிகளும் ஃபலஸ்தீன் நாட்டில் குடியேறுவதற்குகு ஊக்கமளிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றார் போல உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தகுந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும்.உலகிலுள்ள அனைத்து யூதர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

யூத தேசிய உணர்வையும், யூத சிந்தனையையும் பலப்படுத்தி வளர்க்க வேண்டும்.

ஸியோனிஸத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு தேவைப்படும் அரசுகளின் சம்மதத்தைப் பெற உரிய நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும்.

சர்வதேச யூத மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி யூத விவசாயிகளை ஃபலஸ்தீனில் குடியமர்த்தும் முயற்சியை 1901 ஆம் ஆண்டில் ஆரம்பித்தனர். இதற்கு முன்பு 1878 ஆம் ஆண்டில் பேடாடிக்வா என்ற இடத்தில விவசாய பண்ணை ஓன்று ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

யூத தேசிய நிதியகம்- Jewish National Fund :
*********************
யூத தேசிய நிதியகம்- Jewish National Fund என்ற அமைப்பு 1901 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், போன்ற முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த யூத செல்வந்தர்கள் இந்த நிதியகத்திற்கு ஏராளமான நன்கொடைகளை வழங்கினார்கள்.

யூத தேசிய நிதியிலிருந்து வாங்கப்படும் நிலம் யூத சமூகத்தின் நிரந்தர பொதுச் சொத்தாகக் கருதப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலங்களை குத்தகைக்கு விடலாமே தவிர அவற்றை விற்கவோ வேறு வகையில் உரிமை மாற்றம் செய்யவோ அனுமதி இல்லை.

யூத தேசிய நிதி மூலம் வாங்கப்பட்ட நிலங்களில் அரபு விவசாயிகள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே அந்த நிலங்களில் சாகுபடி செய்து வரும் அரபு விவசாயிகளும் வெளியேற்றப்படுவார்கள்.

யூத தேசிய நிதியகத்தில் இருந்து 1905 ஆம் ஆண்டில் முதன் முறையாக நிலம் வாங்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டில் கெரன் கீமத்- keran Keymath என்ற பெயரில் ஒரு நிறுமம் துவங்கப்பட்டு பிரிட்டன் நாட்டில் பதிவு செய்யப்பட்டது.

ஃபலஸ்தீன் உள்ளிட்ட பல நாடுகளில் நிலங்களை விலைக்கு வாங்குதலே இதன் நோக்கமாக அதன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிறுமத்தை தவிர, வேறு பல தனியார் மற்றும் பொது அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

(தொடரும்)

- அபூஷேக் முஹம்மத்.



யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..