Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9
Posted By:Hajas On 1/14/2018 10:20:00 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 8 : மர்ம ஒளி/லிகள்

பாகம் 9 : கற்பனைகெட்டா கட்டிடங்கள்

 

உலகின் மிக பிரபலமான மர்மங்களான பிரமிட், நாஸ்கா கோடுகள், ஸ்டோன் ஹெட்ஜ்,ஏரியா 51, பயிர்வட்டங்கள், பெர்முடா முக்கோணம், போன்றவற்றை பற்றி நாம் ஏற்கனவே பல முறை பல இடங்களில் கேள்வி பட்டு இருக்கின்றோம். ஓரளவு அனைவரும் அவைகளை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றோம். அதனாலேயே அவைகளை பற்றி நான் இந்த கட்டுரை தொடரில் முடிந்தளவு எழுதாமல் தவிற்கிறேன்.


ஆச்சர்யத்தை..மர்மத்தை தேடி நாம் பிரமிடுக்கு தான் செல்ல வேண்டும் என்பது இல்லை... நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோவில் உலகில் யாராலும் விளக்க முடியாத மர்மங்களை கொண்டிருக்கலாம். அல்லது நாம் தினம் பார்க்கும் ஏதோ ஒரு கட்டிடம் அதிசயத்தை மர்மத்தை சுமந்து இருக்கலாம் . அப்படி ஒரு இரண்டு கோவில்களை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.

உலகில் பிரமிட் ,ஸ்டோன்ஹென்ச் போன்று பல கட்டிடங்கள் எப்படி கட்ட பட்டன என்ற விளக்கம் நம்மிடம் இல்லை சில கோவில்களும் அந்த மாதிரி அசாத்திய கட்டிட வரிசையில் இருக்கின்றன. உதாரணமாக எல்லோரா குகை கோவில் கைலாயநாதர் ஆலயம். இந்த கோவில் வழக்கமான கட்டிட கலை நிபுணர்கள் மேஸ்திரிகள் வைத்து கட்ட பட்ட கோவில் அல்ல. ஒரு மலையை... பாறையை அப்படியே வெட்டி செதுக்கி எடுத்து முழு கோவிலாக வார்த்து எடுத்து இருக்கிறார்கள். (இக்கோவில் பற்றி ஏற்கனவே தனி கட்டுரை "எல்லோரா கைலாய நாதர் கோவில் ஒரு சாத்தியமற்ற கட்டிடம் "என்ற தலைப்பில் எழுதி இருக்கின்றேன் )

 

ஒரு சிக்கலான அமைப்பை அல்லது ஒரே ஒரு சிலையை ஒரே கல்லில் செதுக்கி இருந்தால் நாம் எவ்வளவு ஆச்சர்ய படுவோம். இவ்வளவு பெரிய ஒரு கட்டிட அமைப்பு..சுற்றி பிரகாரம்...தூண்கள்....சுவற்றில் நூற்று கணக்கான சிற்ப வேலைபாடுகள்...ஒரு இணைப்பு பாலம் ...அங்கங்கே பால்கனி அமைப்பு...படிக்கட்டுகள் ....பல நுணுக்கமான சிற்பங்கள்...நடுவில் லிங்கம்....அடியில் பல குகைகள்......ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் இதை எல்லாம் கொண்ட ஒரு மொத்த கோவிலை ஒரே பாறையில் மேலே இருந்து குடைந்து உருவாக்குவது என்பது எவ்வளவு ஆச்சர்யமான அசாத்தியமான விஷயம்?


ஆச்சர்யம் அதோடு முடியவில்லை. கொஞ்சமும் சாத்தியம் அற்ற பல சாத்திய கூறை எல்லோராவின் கைலாஷ் நாத் கோவில் கொண்டிருப்பது தான் நமது புருவத்தை உயர்த்தி நம்மை இன்னும் ஆச்சர்யதில் ஆழ்த்துகிறது.அதை செய்தவர்கள் மொத்தம் 18 வருடத்தில் இதை செய்திருக்கிறார்கள் அதுவும் அன்றைய தொழில் நுட்பத்தை கொண்டு.


கோவிலை ஆராய்ந்து பார்த்த ஆய்வாளர்கள் கருத்து படி இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதை செய்வது என்றால் கூட அப்படி பட்ட ஒரு கோவிலை முழுமையாக மலையில் வெட்டி உண்டாக்குவதற்கு கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டு ஆகும் என்கிறார்கள். இதை அக்கால மனிதன் 1000 வருடத்திற்கு முன் உளி ,சுத்தி வெட்டு கருவியை கொண்டு வெறும் 18 ஆண்டுகளில் சாதித்தது எப்படி? ஆய்வாளர்களிடையே யூகமாக கூட பதில் இல்லை.

 

அந்த மொத்த மலையின் பரப்பு ... அதில் அந்த கோவிலின் பருமனை கழித்து விட்டு மீதி இடத்தை கணக்கிட்ட ஆய்வாளர்கள் அந்த கோவிலை செய்து முடிக்க மொத்தம் 4 லட்சம் டன் பாறையை வெட்டி அப்புற படுத்தி இருப்பதாக கணக்கிட்டு இருக்கிறார்கள். ஒரு கணக்கு படி மொத்த தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இடையில் இடைவேளை இன்றி வெட்டி எடுத்தாலும் கணக்கு படி ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 60....65 டன் பாறைகளை தொடர்ந்து அப்புற படுத்தி இருக்க வேண்டும். இது அக்கால மனிதர்களுக்கு சாத்திய பட்டது எவ்வாறு??

அடுத்த ஆச்சர்யம் வெளியேற்ற பட்ட அந்த மொத்தம் 4லட்சம் டன் பாறைகள் எங்கே...? சுற்று வட்டாரத்தில் அதை எங்கேயும் கொட்டி இருப்பதற்கோ அல்லது வேறு விதமாக வேறு கட்டிடம் கட்ட பயன்படுத்தி இருப்பதற்காகவோ எந்த அறிகுறியும் இல்லை.. அவ்வளவு பாறைகளை முற்றிலும் தடயம் தெரியாமல் மாயமாக்கியது எப்படி?

ஒரு யூக அடிப்படையில் ஆய்வாளர்கள் இதற்கு விடை வைத்திருக்கிறார்கள். பஹ்மாஷ்திரம் என்ற ஒரு கருவியை பற்றி வேதத்தில் குறிப்பு இருப்பது அவர்கள் கவனத்தை ஈர்த்தது . மலைகளை பாறைகளை ஆவியாக்கும் வலிமை அந்த அஷ்த்திரத்துக்கு இருப்பதாக வர்ணிக்க பட்டுள்ளது. அப்படி ஏதாவது கருவி இருந்தால் அதை கொண்டு மட்டும் தான் இவ்வளவு பாறை களை ஆவி ஆக்கி இருக்க முடியும் என நம்புகிறார்கள் ஆய்வாளர்கள்.

அந்த கோவிலில் அடியில் உள்ள விடை தெரியாத பல மர்ம சுரங்கள் ஏன் எதற்கு வெட்ட பட்டன என்ற சந்தேகம் இன்னும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆய்வாளர் சிலர் கருத்து படி இது வெற்றுகிரக வாசி களின் பதுங்கும் இடமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். மற்ற குகை கோவிலில் இருந்து மாறு பட்டு இது வானில் இருந்து பார்த்தால் தெரியும் படி வடிவமைக்க பட்டது...ஏன்? அதில் ஒரு சிற்ப அமைப்பை மேலே இருந்து பார்த்தால் x குறியீடு தெரிவது இதெல்லாம் தற்செயலானதா அல்லது காரணக்காரியம் உடையதா அதை அவர்கள் அப்படி செய்தது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

 

மேலும் அந்த கட்டிடத்தை உற்று நோக்கிய சில ஆய்வாளர்கள் அதில் சில அமைப்பை (உதாரணம் அந்த இணைப்பு பாலம் அதற்கு கீழே உள்ள தூண் சிற்பங்கள் ) உற்று நோக்கும் போது அதை முதலில் மேலே இருந்து செதுக்கி பின் கீழே உள்ள வற்றை செதுக்கி இருக்க முடியாது . இதை மொத்தமாக கீழ் இருந்து மேல் நோக்கி செதுக்கி கொண்டு போனால் தான் அது சாத்தியம் என்கிறார்கள். இந்த கட்டிட அமைப்பே கண்டிப்பாக மனித சக்தியால் படைக்க பட்டதாக இருக்க முடியாது என்று அடித்து சொல்லிகிறார்கள்.

என்ன தலை சுற்றுகிறதா ? அடுத்தது நான் சொல்ல போகும் கோவில் நமது தலையை தலைகீழாக சுற்ற செய்யும்.

கர்நாடகாவில் உள்ள 12 ஆம் நூற்றாண்டில் கட்ட பட்ட(கிபி 1121 - 1160) தான் ஹாசலேஸ்வரா எனும் சிவன் கோவில். இந்த கோவில் சில நம்ப முடியாத கற்பனைக்கு எட்டாத கட்டிட அமைப்பை தனக்குள் வைத்துள்ளது.


முதலில் நம்மை ஆச்சர்ய படுத்தி வரவேற்பது அங்குள்ள அந்த விசித்திர கற்தூண்கள் . கீழே பெருத்தும் மேலே சிறுத்தும் காண படும் அந்த கற்தூண்கள் சாதாரண கல் தூண் போல கட்டமாக அல்லாமல் உருளை வடிவ தூண்கள் அவை. அவைகளின் மேற்பரப்பு நன்கு மெருகேற்ற பட்டு பளபளப்பை காட்டுகின்றன. அந்த மாதிரி ஒரு தீர்க்கமான உருளையாக கீழே பெருத்து மேலே சிறுத்து ஒரு தூனை உண்டாக வேண்டுமானால் லேத் பட்டறைகளில் வைத்து டர்னிங் செய்து தான் செய்ய முடியும் ஆனால் அதுவும் கூட 12 அடி கல் தூனில் இப்படி செய்ய இக்கால தொழில் நுட்பத்தில் கூட இடம் இல்லை. ஆனால் மிக தெளிவாக அது டர்னிங் செய்து தான் உருவாக்க பட்டிருக்கிறது என்பதை அதன் மேல் காண படும் வளையங்கள் எடுத்து சொல்கின்றன. அக்காலத்தில் அவர்கள் இதை செய்ய பயன்படுத்திய தொழில் நுட்பம் என்ன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

தூணில் ஆச்சர்யம் வெறும் ஆரம்பம் தான் உள்ளே சென்றால் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்து இருக்கிறது. மாசான பைரவா எனும் கடவுள் சிலை ஒன்று கையில் இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் கியர் அமைப்பு சாதனம் ஒன்றை வைத்திருப்பதை செதுக்கி இருக்கிறார்கள் ஆச்சர்யம் என்ன வென்றால் இக்காலத்தில் பயன்படுத்த படுவதை போலவே 2 : 1 என்ற விகிதத்தில் அந்த கியர் அமைப்பின் பற்கள் வெளியில் 32 உள்ளே 16 அமைந்து இருப்பது தான். இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம் மாசான பைரவ என்பதில் மாசான என்றால் அளபவர் அல்லது அளத்தலை குறிக்கும். அந்த மாசான பைரவா ஒரு இன்ஜினியர் போன்ற ஆசாமியா ??

உள்ளே 7 அடி சிலை ஒன்று இருக்கிறது அதன் தலையில் அணிந்துள்ள கிரீடத்தில் சில முக அமைப்புகள் செதுக்க பட்டுள்ளன அவைகளின் அளவு வெறும் ஒரு அங்குலம் மட்டுமே. அந்த முகங்களில் காது வழியாக ஒரு நூலை விட்டு அடுத்த காது வழியாகவோ அல்லது வாய் வழியாகவோ எடுக்க முடியும் . அதாவது உள் பக்கமாக அவைகள் செதுக்கி எடுக்க பட்டுள்ளன. வெறும் நூல் நுழையும் இடைவெளியில் உள் பக்கமாக செதுக்கி எடுத்தல் எப்படி சாத்தியம் ? அந்த கிரீடத்திற்கும் தலைக்கும் இடையில் ஒரு மெல்லிய இடைவெளி உள்ளது அதில் நூல் கூட செல்லுவது இல்லை. அவ்வளவு மெல்லிய இடைவெளி அது.


அங்குள்ள ஒரு பெண் சிலை கழுத்தில் அணிந்துள்ள நகைகளுக்கு இடையில் அதே போல நூல் நுழைய முடியாத அளவு இடைவெளி விட்டு செய்ய பட்டுள்ளது. 900 ஆண்டுகள் முன் செதுக்க பட்ட அங்குள்ள நந்தி நேற்று செய்தது போல பளபளப்பாக காட்சி தருகிறது. இக்காலத்திலும் செய்ய முடியாத பொறியியல் நுட்பத்தை 900 ஆண்டுகள் முன் செய்தது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
(மேலும் தகவல் விரும்புபவர்கள் phenomental travel video என you tube இல் தேடி பாருங்கள் )

அக்காலத்தில் ராட்சத மனிதர்கள் வாழ்ந்தார்களாமே உண்மையா ??
அது உண்மையோ என்னவோ தெரியாது .ஆனால் சில கட்டிட அமைப்புகள் அக்காலத்தில் ராட்சத மனிதர்கள் இருந்திருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி பட்ட கட்டிடங்களை பற்றி அடுத்த பாகத்தில்....

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 

பாகம் 10 : ராட்சதனின் கட்டிடங்கள்




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..