Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:-
Posted By:Hajas On 11/17/2017 5:40:24 AM

 சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:-

 

Image may contain: text

சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:-

முதலில் மீத்தேன் திட்டத்தின் உண்மை பின்னணி கட்டுரையை படித்துவிட்டு இதை தொடரவும்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பின் வரும் நிகழ்வுகளை நீங்கள் செய்தியாக படித்திருக்கலாம்.

கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீனவ குடியிருப்புகள் அகற்ற மாநகராட்சி நோட்டிஸ் (மார்ச் 18,2015)

கதிராமங்கலம்,நெடுவாசல்,நன்னிலம் போன்ற இடங்களில் மீத்தேன்,ஷெல் வாயு எடுப்பதிற்க்கான நடவடிக்கை

BIMSTIC NSA கூட்டம் டெல்லியில் மார்ச்21, 2017 ல் நடந்தது.

தனுஷ்கோடியில் புதிய நெடுஞ்சாலை பிரதமர் மோடி 
திறந்தது வைக்கிறார் ஜூலை 27,2017

தனுஷ்கோடி வாழதகுதியான இடமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு செப்டம்பர் 8,2017

இலங்கை கடலோர காவல்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.

அதானிக்கு ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் தொடர்பான வர்த்தக சுற்றுபயணம் மோடி மேற்கொண்டது.

நல்லதண்ணி ஓடை குப்பம் எந்த முன் அறிவிப்பும் இன்றி முற்றிலுமாக அகற்றம்

சில தமிழக கடலோர நெடுஞ்சாலை பகுதியில் போர்விமானங்கள் இறங்க அனுமதி வழங்கப்பட்டது

பிரதமர் மோடி பிலிப்பைன்ஸில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம்திறந்து வைத்தல், அதன் நடுவண் மையம் வாரணாசியில் அமைய உள்ளது, நவம்பர்14,2017

இவை அனைத்திற்கும் சாகர்மாலா திட்டத்திற்கும் தொடர்புள்ளது.

சரி இப்பொழுது சாகர்மாலா திட்டத்தை பற்றி பார்ப்போம்.
பலருக்கு இத்திட்டம் என்பது கடல்வழி தளங்களை மேம்படுத்துவது என மட்டுமே தெரியும் ஆனால் இது ஒரு தாய் திட்டமாகும், இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 415 பிரிவு திட்டங்கள் வருகிறது.

இத்திட்டத்தின் முதலீடு தொகை 8 இலட்சம் கோடி, 2003 ல் வாஜ்பாயல் தொடங்கப்பட்டது, இதை மன்மோகன்சிங் மெல்ல தொடங்கி (சில தடைகளை ஒழிக்க வேண்டியிருந்தது அதனால் தாமதம்) இப்பொழுது மோடியால் பிரமாண்டமாக நடக்க தொடங்கியுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதிக்கு தேவையான 12 பெரியதுறைமுகம், 200 சிறியதுறைமுகங்களை அமைப்பது, மற்றும் 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைத்து நவீனபடுத்துவது.

தீவுகளையும்,துறைமுகங்களை நாட்டின் உள்பகுதிகளில் இருந்து சாலை,ரயில்,ஆற்றுவழி, மற்றும் குழாய் வழியாக இணைப்பது.

இதற்காக 7,500 கீ.மி நீளமான கடற்கரை சாலை அமைத்தல், 14,500 கீ.மி கடல்வழி பாதைகளும், 26 இரயில் வழிதடங்களும், 101 ஆற்றுவழி பாதைகள் மற்றும் 12 கடற்கரை smart cities அமைத்தல் என நீளுகிறது.

சரி இங்கு எதை ஏற்றுமதி செய்து எதை இறக்குமதி செய்யபோகிறார்கள் என கேட்கிறீர்களா? நமது இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்து make in India போன்ற தொழிற்சாலைகளை இறக்குமதி செய்யப்பட உள்ளது.

ஏற்றுமதி செய்யப்படுவது இயற்கை எரிவாயு,பெட்ரோலியம் பொருள்கள், நிலக்கரி (மீத்தேன்,ஷெல் போராட்டம் இதற்கு தான்), இரும்பு, சிமெண்ட், தோல்,ஆடைகள்,காலணிகள், தானியங்கி வாகனகளுக்கன உதிரிபாகங்கள். 
மற்றும் அமைக்கபட போகும் தொழிற்ச்சாலைகளான பெட்ரோலியம் சுத்தகரிப்பு, தோல் பதனிடுதல்,உணவுபதநிடுதல்,கப்பல் கட்டமைப்பு, மீன்பிடிக்கும் தொழிற்சாலைகள், எலக்ட்ரானிக் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என இத்திட்டத்தின் நான்கு பெரும் பிரிவின் கீழ் மொத்தம் 415 பிரிவு திட்டங்கள் வருகிறது.

அந்த நான்கு பெரும் பிரிவுகள்

Port Modernization ( துறைமுகங்களை நவீனமையமாக்கல் )

Connectivity Enhancement (துறைமுகம் இணைப்பு விரிவாக்கம்)

Port-Linked Industrialization (துறைமுகங்களை இணைக்கப்பட்ட தொழில்மையமாக்கம்)

Coastal Community Development (கடற்கரையோர சமூகங்களை வளர்ச்சிபடுத்துதல்)

1. Port Modernization(துறைமுகங்களை நவீனமையமாக்கல்)

இந்த பிரிவின் கீழ் மொத்தம் 189 பிரிவுகள் வருகிறது, அதன்படி புதிய துறைமுகங்களை அமைத்தல்,பழைய துறைமுகங்களை புதுப்பித்தல், கடலை ஆழபடுத்துதல் என தொடங்குகிறது.

முதலில் இந்திய கடற்கரையை மொத்தம் 14 பகுதிகளாக (zone) பிரிக்கபடுகிறது.

இதில் 3 பகுதிகளாக தமிழ்நாடு கடற்கரை பிரிக்கப்பட்டுள்ளது அவை மன்னார்-தமிழ்நாடு,பூம்புகார்-தமிழ்நாடு, VCCIC தென்தமிழ்நாடு இந்த மூன்று பகுதிகளிலும் மொத்த தமிழ்நாட்டின் கடற்கரையும் அடக்கம்.

இந்த கடற்கரை பகுதிகள் அனைத்தும் துறைமுகத்திற்கும்,மத்தியஅரசிற்கும் கீழ் கொண்டுவரப்படும் பிறகு இங்கு வாழும் மீனவர்கள் அப்புறபடுத்தப்பட்டு நிலங்கள் கையாகப்படுத்தப்பட்டு பறக்கும் சாலைகள் அமைக்கப்படும்.

இந்த சாலைகள் அகலம் சுமார் 60 மீட்டரில் இருந்து 200 மீட்டர் வரை இருக்கும்,
இதன் தரம் இராணுவ பீரங்கிகள் செல்வதற்கும் போர் விமானங்கள் தரை இறங்கும் அளவிற்கு வலிமையானதாக இருக்கும்.

ஏற்கனவே சில இடங்களில் விமானங்கள் தரையிறங்க அரசு அனுமதி அளித்துவிட்டது.

2.Connectivity Enhancement (துறைமுகமங்கள் இணைப்பு விரிவாக்கம்)

இந்த பிரிவின் கீழ் மொத்தம் 170 பிரிவுகள் வருகிறது, அதன்படி துறைமுகங்கள் இணைப்பு மற்றும் விரிவாக்கம் என்பது துறைமுகங்களை மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து இணைப்பது.

அதாவது பொருள்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் பாதையை இணைப்பது..

தமிழ்நாட்டை பொருத்தவரை இணயம்,சீர்காழி சென்னை,எண்ணூர்,காட்டுப்பள்ளி போன்ற மூன்று பகுதிகளாக்கப்ப்ட துறைமுகங்கள் வருகிறது.

இணயம் துறைமுகத்திற்கு கீழ் கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்கள் வருகிறது, இந்த மாவட்டங்கள் பறக்கும் சாலை வழியாக துறைமுகங்கள் இணைக்கப்படும்.இவை மன்னார் zone area க்குள் வருகிறது.

சீர்காழி துறைமுகத்திற்கு கீழ் பெரம்பலூர்,அரியலூர்,திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம் மாவட்டங்கள் வருகிறது ,இந்த மாவட்டங்கள் பறக்கும் சாலை வழியாக துறைமுகங்கள் இணைக்கப்படும்.

சென்னை,எண்ணூர்,காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கீழ் திருவள்ளூர்,சென்னை,காஞ்சிபுரம் மாவட்டங்கள் வருகிறது, இந்த மாவட்டங்கள் இரயில் பாதைகள் வழியாக இணைக்கபடுகிறது.

3.Port-Linked Industrialization (துறைமுகங்களை இணைக்கப்பட்ட தொழில்மையமாக்கம்)

இந்த பிரிவின் கீழ் மொத்தம் 33 பிரிவுகள் வருகிறது இதன்படி இறக்குமதி,ஏற்றுமதி தொடர்பான தொழிற்சாலை அமைத்தல்.

பிறகு தொழிற்சாலை தேவையான உற்பத்தி பொருள்களை அதற்குட்பட்ட zone area விலிருந்து எடுத்தல்.

நம் தமிழ்நாட்டை பொறுத்தவரை உற்பத்தி பொருள்கள் என்பது மீத்தேன்,ஷெல் எரிவாயுக்கள் போன்ற பெட்ரோகெமிக்கல்ஸ், தோல்,சிமென்ட்,ஆடைகள்,இரும்பு,எலெக்ட்ரானிக் பொருள்கள், etc….

இந்த துறைமுக தொழிற்சாலைகளை அதானி போன்ற தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஏற்கனவே பதினென்று துறைமுகங்கள் அதனிடம் உள்ளது, இது போல் இந்த சாகர்மாலா திட்டத்திற்கு கீழ் இப்போது ஆறு துறைமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதில் ஓன்று தமிழ்நாட்டுக்கு உட்பட்டது,

உதாரணமாக குஜராத்தில் 6456 ஏக்கர் கடற்கரை நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என அரசு அதானி குழுமத்திற்கு கொடுத்துள்ளது.

இந்த போன்ற தொழிற்சாலைகள் மூலம் இப்போது உணவு உற்பத்தி சந்தையை பாதி கையில் வைத்திற்கும் கார்பரேட்கள் நல்ல பயனடைவார்கள்.

ஆடை உற்பத்தி,தோல் பதனிடுதல்,மின் உற்பத்தி,இரும்பு உற்பத்தி ,பெட்ரோலியம் சுத்தகரிப்பு, எலெக்ட்ரானிக் கருவிகள்,கப்பல் கட்டும் தொழிற்ச்சாலை போன்ற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைய உள்ளன.

4.Coastal Community Development (கடற்கரையோர சமூகங்களை வளர்ச்சிபடுத்துதல்)

இந்த பிரிவின் கீழ் மொத்தம் 23 பிரிவுகள் வருகிறது, இதன்படி கடற்கரையோர சமூகங்களை வளர்ச்சிபடுத்துதல் அதாவது நிலங்களை கையகபடுத்திவிட்டு மாற்றுநிலம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், இந்தியநாட்டின் மக்கள் தொகையில் 20% மக்கள் கடற்கரையோரம் வசிப்பவர்கள், அதில் மொத்தம் 25 கோடி மக்கள் வருகின்றனர், இதில் 25 ல் ஒரு பேருக்கு வேலை கிடைத்தால் என்ன நிலையாகும்?

மற்றும் இதில் சுற்று சூழல் பற்றி ஏதும் பேசப்படவில்லை(((சென்னை எண்ணெய்கசிவு நியாபகம் இருக்கலாம்))) 
அதற்கு மாறாக சுற்று சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜதேவ் சுற்று சூழல் அனுமதி தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது என கூறியுள்ளார்.

சுருக்கமாக சொல்லபோனால் இன்று தமிழ்நாட்டில் இன்று மக்கள் சந்தித்து வரும் மீனவர்கள்,விவசாயிகள் போன்ற வாழ்வுரிமை பிரச்சனைகளுக்கு இது தாய்த்திட்டம் எனலாம்.

மத்தியிலும்,மாநிலத்திலும் எந்த ஆட்சி மாறினாலும் இந்த திட்டங்கள் நிற்க போவதில்லை இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான அரசுக்கள் செய்யும் சேவை.

இதனை எதிர்த்து மக்கள் போராடும் போது அதனை ஒடுக்க BIMSTIC போன்ற திட்டம் உள்ளது அதற்கு கீழ் இந்த பிரிவுகள் உள்ளன.அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

-பாலா 

https://www.facebook.com/horrific/photos/a.355019071298645.1073741828.353976711402881/1224868460980364/?type=3&permPage=1




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..