Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 68
Posted By:Hajas On 11/9/2017 3:57:21 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

 தொடர் 5: சூத்திரதாரிகள்

Episode 67: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 6

 Episode 68: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 7

Image may contain: text


Episode 68: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 7:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனது உணர்வுகள் சார்ந்த சில பலவீனங்களின் ஊடாக ஷைத்தானிய ஜின்கள் ஊடுறுவி, அவனது DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் அந்த மனிதனை இப்லீஸின் அடிமையாக மாற்றுவதற்கே ஷைத்தானிய ஜின்கள் இடைவிடாது முயற்சி செய்து வருகின்றனர் என்பதைக் கடந்த எபிசோடில் தகுந்த ஆதாரங்களோடு பார்த்தோம்.

இனி இந்தப் பொறிமுறை எவ்வாறு விஞ்ஞான ரீதியில் சாத்தியமாகிறது என்பதை ஓர் உதாரணத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

கடந்த ஒருசில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் சில கலாச்சாரச் சின்னங்களை நாம் பரவலாக அவதானிக்கலாம். குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கார்ட்டூன் திரைச்சித்திரங்கள், கல்விசார் ஊடக நிகழ்ச்சிகள், கல்விசார் ஆவணப் படங்கள்... என்று ஊடகங்களின் எந்த முகத்தை எடுத்துப் பார்த்தாலும், அங்கெல்லாம் ஒரு சின்னம் தொடர்ச்சியாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்யப் பட்டு வருவதைச் சமகால உலகில் பரவலாக அவதானிக்கலாம். அது என்ன சின்னம்?

பாம்பு, ஓனான், பல்லி, முதலை, டைனசோர்... என்று சர்வதேச ஊடக வலையமைப்புகளில் எந்தப் பக்கம் பார்த்தாலும் நகருயிர்களை முக்கியத்துவப்படுத்தி, அவை சார்ந்த அம்சங்களே அடிக்கடி காண்பிக்கப் படுவதை பார்க்கலாம். குறிப்பாக சிறுவர் கார்ட்டுன்கள், மற்றும் சிறுவர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் டிஸ்கவரி சேனல் போன்ற கல்விசார் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இதை மிகவும் அதிகமாக அவதானிக்கலாம்.

எங்கு பார்த்தாலும் ஏதாவதொரு நகருயிர் இனத்தை முதன்மைப் படுத்துவதாகவே சமகால ஊடக வலைப்பின்னல் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் படுகின்றன. உன்னிப்பாகக் கவனிப்போருக்கு இது புரியும். உண்மையில் இது ஓர் எழுந்தமானமான நிகழ்வு அல்ல; மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்தப்படும் ஒரு செயல்திட்டம் இது.

ஏனைய உயிரினங்களை விட, நகருயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரதான சர்வதேச ஊடக வலையமைப்புகள் அனைத்தும் இவ்வாறு நடந்து கொள்வதன் அடிப்படை நோக்கமென்ன? இதற்கான அவசியம் தான் என்ன? இதற்கான விடை மிகவும் எளிமையானது. இந்தச் செயல்திட்டத்துக்குப் பின்னால் ஓர் உளவியல் சதித்திட்டம் ஒளிந்திருக்கிறது.

ஒரு காட்சியை, அல்லது ஒரு செய்தியை இடைவிடாது தொடர்ச்சியாக ஒரு மனிதனது பார்வை, மற்றும் செவிப் புலன்கள் வாயிலாக அவனது உள்ளத்துக்குள் நீண்ட நாட்களுக்குச் செலுத்திக் கொண்டே இருந்தால், நாளடைவில் அந்தச் செய்தி அவனது ஆழ்மனதில் உறுதியாகப் பதிவாகி, அவனது மனோபாவத்தையே மாற்றும் அளவுக்கு அது உள்ளுக்குள் அவன் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விடும்.

மனிதர்களை மூளைச்சலவை (Brainwash) செய்வதற்கும், சிந்தைக் கட்டுப்பாடு (Mind Control) செய்வதற்கும் அனேகமாக உபயோகிக்கப்படும் ஓர் உளவியல் உத்தியே இது. இந்த உளவியல் உத்திக்கு Subliminal Stimuli என்று பெயர்.

Subliminal Stimuli எனும் இந்த உளவியல் உத்தியின் மூலம் இன்றைய உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனது ஆழ்மனதிலும் நகருயிர் (Reptilian) சார்ந்த கோட்பாடுகளை ஆழமாக விதைப்பதற்காகவே சர்வதேச ஊடக வலையமைப்புக்களில் நகருயிர்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தங்கள், கல்விசார் நிகழ்ச்சிகள், கதைகள், சினிமாக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற அனைத்தும் இடைவிடாது, திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப் படுகின்றன.

இந்த உளவியல் சதித்திட்டத்தின் அடிப்படை நோக்கமே, நம் ஒவ்வொருவரது மூளையின் சிந்திக்கும் பொறிமுறையிலும் நகருயிர் சார்ந்தவற்றின் ஆதிக்கங்களே மிகைத்துக் காணப்பட வேண்டும் என்பது தான். நமது சிந்தனையில், நகருயிர்களின் ஆதிக்கத்தை இந்த அளவுக்குத் திட்டமிட்டு இலுமினாட்டிகள் ஏன் விதைக்க முயற்சிக்க வேண்டும்? இது நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி. இதற்கான விடையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மனித உடற்கூறு பற்றிய ஒருசில உண்மைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மனித மூளையானது பல பாகங்களின் தொகுப்பால் ஆக்கப்பட்டிருக்கும் ஓர் அங்கம் என்பதை நாம் ஏற்கனவே அறிகிறோம். இவற்றுள், மிகவும் பெரிய பாகமாக, மூளையம் / பெருமூளைப் புறணி (Cerebral Cortex) எனும் பகுதியே விளங்குகிறது. பெருமூளைப் புறணியின் பெரும்பான்மையான பகுதி, Neocortex எனும் புறணியினாலேயே ஆக்கப் பட்டிருக்கிறது.

புலன்களைக் கையாளுதல், தசைகளின் இயக்கம், மொழிகளைக் கையாளுதல், கற்தல், கற்பித்தல், நல்லது கெட்டது தீர்மாணித்தல் போன்ற, மனிதர்களுக்கே உரித்தான அதியுயர் தரத்திலான, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைகள் அனைத்துக்கும் இந்த Neocortex எனும் பகுதியே பொறுப்பு. சுருக்கமாகச் சொன்னால், மனிதனது சிந்திக்கும் மூளை என்பது இந்த Neocortex தான்.

இந்த Neocortex எனும் மூளையின் பாகமானது மிகவும் சிக்கலான கணிப்பீடுகளின் அடிப்படையில் பணியாற்றக்கூடிய ஒரு பாகம் என்பதால், மூளையின் ஏனைய பாகங்களை விடவும் சற்று குறைவான வேகத்திலேயே இந்தப் பாகம் இயங்குகிறது. இந்த உண்மையை நமது அன்றாட வாழ்வில் கூட நாம் உணரலாம். 

அதாவது, அறிவுபூர்வமான, சரியான தீர்மாணங்களை ஒரு மனிதன் எடுக்க வேண்டுமானால், அவன் சற்று நிதானமாகச் சிந்தித்தால் மட்டுமே சாத்தியம் என்பதை நாம் அனைவருமே அறிகிறோம். உண்மையில் இந்த நிதானம் என்பது, Neocortex எனும் நமது சிந்திக்கும் மூளைக்கு முறையாக யோசித்துச் சரியான தீர்மாணங்களை எடுப்பதற்கு நாம் வழங்கும் அவகாசமே.

சாதாரண நிலைமைகளில் மனிதர்களாகிய நாம் எடுக்கும் தீர்மாணங்களில் அனேகமானவை Neocortex இன் முறையான சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகவே இருக்கும். அதன் விளைவாக அவை பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கும்.

ஆனால், நமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா நிலைமைகளும் சாதாரணமானவையாகவும், நிதானம் நிறைந்ததாகவும் இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் நமது கட்டுப்பாட்டையும் மீறிய நிலைமைகளுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவதுண்டு. திடீரென்று ஏற்படும் ஆபத்துக்கள், தாங்கவொண்ணாத துக்கங்கள், அதிர்ச்சி தரும் சம்பவங்கள் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் கணப்பொழுதுக்குள் பல தீர்மாணங்களை எடுக்க வேண்டிய சூழல்களுக்கும் நாம் ஆளாவதுண்டு.

உதாரணத்துக்கு நம்மைத் திடீரென்று ஒரு நாய் துரத்துவதாகவோ, கணப் பொழுதில் ஒரு விபத்துக்கு நாமோ, அல்லது நமது குழந்தையோ உள்ளாகப் போவதாகவோ, நம்மால் தாங்க முடியாத, அதிர்ச்சிகரமான / துக்ககரமான ஒரு செய்தி திடீரென்று நமது காதை வந்தடைவதாகவோ நாம் எதிர்பாராத கணத்தில் முகம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அதாவது, மிதமிஞ்சிய அச்சம், மிதமிஞ்சிய துக்கம், அதிர்ச்சி, ஆத்திரம், கட்டுக்கடங்காத கோபம், கட்டுக்கடங்காத காம வெறி போன்ற உணர்வுகளை நமக்குள் திடீரென்று தூண்டக் கூடிய சம்பவங்களே இங்கு நாம் குறிப்பிடுபவை.

இவ்வாறான, தீவிரம் மிக்க உணர்வுகளைத் தூண்டும் சந்தர்ப்பங்களில், அந்த நிலைமையைச் சமாளிக்கும் அளவுக்கு அதி வேகத்தில் சிந்தித்து, முடிவெடுக்கத் தேவையான வேகம் நமது Neocortex எனும் சிந்திக்கும் மூளைக்கு இல்லை. எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நமது Neocortex தற்காலிகமாகச் செயலிழந்து, உறைந்து போய் விடும்.

அதே நேரம், இவ்வாறான தீவிரம் மிக்க சந்தர்ப்பங்களில் சடுதியான முடிவுகளைக் கணப் பொழுதுக்குள் எடுப்பதற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட இன்னொரு சிறிய பாகம் நமது மூளையினுள் இருக்கிறது. நமது மூளையின் அடிப்பாகத்தை அண்டிய பகுதியில், முண்ணானும், மூளையும் சந்திக்கும் புள்ளியை அண்மித்த பகுதியில் இரண்டு பக்கமும் பாதாம் பிஸ்தாவின் அளவிலும், வடிவத்திலுமான இரண்டு சிறிய நரம்பு முடிச்சுக்கள் உள்ளன. இந்த நரம்பு முடிச்சுக்களின் பெயர் “அமிக்டலா” (Amygdala) என்பதாகும்.

சாதாரண நிலைமைகளில், Amygdala எனும் இந்தச் சிறிய நரம்பு முடிச்சுக்களுக்கான எந்த அவசியமும் இருக்காது. எனவே, சாதாரண நிலைமைகளில் Neocortex இற்குப் போய்ச் சேர வேண்டிய புலன் சார் தகவல்களைத் தன்னூடு கடத்திக் கொள்வதோடு, தன்னளவில் உறக்க நிலையிலேயே Amygdala இருக்கும். மிதமிஞ்சிய உணர்ச்சிகள் உள்ளுக்குள் தூண்டப்படும் சந்தர்ப்பங்களில் Neocortex எனும் நமது சிந்திக்கும் மூளை ஒரு கணம் தற்காலிகமாக உறைந்து போக, அதன் பணியைத் தற்காலிகமாகச் செய்யும் பொருட்டு Amygdala செயல்படத் தொடங்கும்.

Amygdala வைப் பொருத்தவரை, Neocortex ஐப் போல் இது சிக்கலான சிந்தனைப் பொறிமுறைகளின் அடிப்படையில் தொழிற்படுவதில்லை. எனவே, மிகவும் வேகமாகக் கணப் பொழுதுக்குள் தீர்மாணங்களைப் பட்டென்று எடுத்து விடக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. Neocortex ஐ விடவும் இது பல மடங்கு வேகம் மிக்கது. அதே நேரம், Neocortex சிந்திப்பது போல் நல்லது கெட்டது பாகுபடுத்தி, மனிதனுக்கே உரிய பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்கும் ஆற்றல் Amygdala எனும் இந்த நரம்பு முடிச்சுக்களுக்குக் கிடையாது.

இன்னொரு விதத்தில் இதை இலகுபடுத்திக் கூறுவதென்றால், மனிதனுக்கே உரிய தனித்துவமான உயர் தர சிந்தனைகளெல்லாம் Neocortex சார்ந்தவை. மனித மூளை எனப்படுவது Neocortex தான். ஆனால், சில ஆத்திர அவசர நிலைமைகளில் ஏற்படும் கட்டுக்கடங்காத உணர்ச்சி வேகங்களுக்கு, Neocortex எனும் மனித மூளையின் வேகத்தால் ஈடுகொடுக்க முடியாது. 

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டு, அதைச் சமாளிக்க முடியாமல் Neocortex குழம்பிப் போய் உறைந்து போகும் சந்தர்ப்பத்தைத் தனதாக்கிக் கொண்டு, உடனே Amygdala அந்த மனிதனது தற்காலிக மூளையாகப் பதவியேற்றுக் கொள்கிறது. அந்த மனிதனை ஆபத்திலிருந்தோ, பிரச்சினையிலிருந்தோ காப்பதற்குத் தேவையான அவசரகாலத் தீர்மாணங்களையெல்லாம் கணப்பொழுதுகளில் Amygdala எனும் இந்த இரண்டாம் மூளையே எடுக்கிறது.

குறிப்பிட்ட காரியத்தின் உணர்ச்சி வேகங்கள் அடங்கி, நிலைமை சீராகும் போது மீண்டும் Neocortex சுதாகரித்துக் கொள்ளும். Neocortex சுதாகரித்துக் கொண்டவுடன், Amygdala விடமிருக்கும் சிந்தனை அதிகாரத்தை மீண்டும் அது எடுத்துக் கொள்ளும்; Amygdala மீண்டும் ஓய்வு நிலைக்குச் சென்று விடும். இது தான் மனிதர்களாகிய நமது சிந்திக்கும் பொறிமுறையின் சுருக்கம்.

Amygdala வைப் பொருத்தவரை, முழுக்க முழுக்க உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டுமே அதற்குச் சிந்திக்கத் தெரியும். Neocortex போல் அறிவின் அடிப்படையில் அதற்குச் சிந்திக்கத் தெரியாது. அதாவது, ஒரு மனிதன் சிந்திப்பதைப் போல் அதற்குச் சிந்திக்கத் தெரியாது. தன் உயிரையும், உடைமைகளையும் காத்துக் கொள்ளவும், தன் அடிப்படைத் தேவைகளைத் (பசி, தாகம்) தீர்த்துக் கொள்ளவும் ஒரு மிருகம் எவ்வாறு சிந்திக்குமோ, அவ்வாறு சிந்திக்க மட்டுமே Amygdala வுக்குத் தெரியும். 

இந்த நரம்பு முடிச்சுக்கள் படைக்கப் பட்டிருக்கும் அடிப்படை நோக்கமே அவசரகாலங்களில் சடுதியான தீர்மாணங்களை நொடிப் பொழுதுக்குள் எடுத்து, அதன் மூலம் அந்த மனிதனின் அடிப்படைப் பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை அடைந்து கொள்வது மட்டும் தான். உதாரணத்துக்கு ஒரு நாய் நம்மைத் திடீரென்று துரத்த ஆரம்பித்தால், நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து தப்பியோடுவதற்கு நமக்குள் ஏற்படும் திடீர்த் தீர்மானங்கள், அசுர பலம், அசாத்திய வேகம் போன்ற அனைத்துக்கும் காரணம் இந்த Amygdala தான்.

Amygdala எனும் இந்த நரம்பு முடிச்சுக்கள் இயங்குவது ஒரேயொரு கட்டளையின் அடிப்படையில் மட்டும் தான்:

“எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன; நான் உயிர்வாழ வேண்டும்; என்னைச் சார்ந்தோர் மட்டும் உயிர்வாழ வேண்டும்” / “எவன் பசித்திருந்தால் எனக்கென்ன; என் பசி அடங்க வேண்டும்” / “எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன; என் தேவை நிறைவேற வேண்டும்”

ரத்தினச் சுருக்கமாகக் கூறுவதென்றால், “சுயநலம்” எனும் கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமே Amygdala எனும் இந்த நரம்பு முடிச்சுக்கள் எடுக்கும் அத்தனைத் தீர்மாணங்களும் அமைந்திருக்கும். எந்த நிலையிலும் தான் தப்பிப் பிழைப்பதில் மட்டுமே இதன் மொத்தக் கவனமும் குறியாக இருக்கும்.

நூற்றுக்கு நூறு வீதம் சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த நரம்பு முடிச்சுக்கள் சிந்திப்பதால், இந்த அவசரகால மூளையை உயிரியலாளர்கள் “நகருயிர் மூளை” (Reptilian Brain) என்றும் அழைப்பதுண்டு. ஏனெனில், விலங்கு ராஜ்ஜியத்தில் பாம்பு, பல்லி போன்ற நகருயிர்களின் மூளை சிந்திப்பதைப் போன்ற அளவு சுயநலத்தோடு வேறெந்த விலங்குகளும் சிந்திப்பதில்லை.

இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், சாதாரண நிலைமைகளில் மட்டுமே நமது மூளையின் சிந்தனையானது மனித சிந்தனையாக இருக்கும். மிதமிஞ்சிய உணர்ச்சிகள் அலைமோதும் அவசரகால நிலைமைகளில் நமது சிந்தனையை Amygdala ஆட்கொண்டு விடுவதால், அச்சொட்டாக நகருயிர்கள் சிந்திப்பதைப் போலவே மனிதர்களாகிய நாமும் சிந்திக்கிறோம் என்பதே இதன் அர்த்தம். இவ்வாறான உணர்ச்சி மிகுந்த சந்தர்ப்பங்களில் நாமும் ஒரு பாம்பாக / பல்லியாக / ஓனானாக மாறி விடுகிறோம் என்பதைத் தான் விஞ்ஞானம் கூறுகிறது.

ஆனால், இந்த நிலை நெடு நேரத்துக்கு நீடிப்பதில்லை. ஒருசில கணங்களிலேயே மீண்டும் நமது Neocortex சுதாகரித்துக் கொண்டு, பொறுப்பேற்றுக் கொள்வதால், மீண்டும் நமது மனித சிந்தனைக்கு நாம் மீண்டு விடுகிறோம்.

குறுகிய நேரமாக இருந்தாலும், Amygdala வின் கட்டுப்பாட்டில் நமது சிந்தனை இருக்கும் இந்த ஒருசில நொடிப்பொழுதுகள் உண்மையில் ஆபத்தானவை. ஏனெனில், இந்த நேரத்தில் Amygdala மூலம் எடுக்கப்படும் எந்தத் தீர்மானமும் நீதி / அநீதி, சரி / பிழை என்பவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. தன்னைப் பற்றி மட்டுமே சுயநலத்தோடு நினைக்கும் ஒரு நகருயிர் எடுக்கும் தீர்மாணங்களைப் போன்ற திர்மானங்கள் மட்டுமே எடுக்கப் படுகின்றன. 

எனவே, இந்தப் பொழுதுகளின் தீர்மாணங்கள் நம்மை நரக நெருப்பின் பால் கொண்டு சென்று விடக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கவனமாக இருக்கிறது. இதனால் தான் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமதிகம் துஆக்களை ஓதிக் கொள்ளுமாறு இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. இதைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

நமக்குக் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்படும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இது பற்றிய ஹதீஸ்களை நாம் சற்று முன்னர் பார்த்தோம். இந்த அறிவுறுத்தலின் பின்னால் இருக்கும் உண்மை தான் என்ன?

மிதமிஞ்சிய கோபத்தின் போது, நாம் நாமாக இருப்பதில்லை. நாம் ஒரு நகருயிராக மாறி விடுகிறோம். அதாவது, நமது Neocortex எனும் மனித மூளைக்குப் பதிலாக, நமது Amygdala எனும் நகருயிர் மூளையின் கட்டுப்பாட்டிலேயே இதன் போது நமது சிந்தனை சிறைப்பட்டிருக்கும்.

Amygdala இயங்குவது நகருயிர்களின் மூளை இயங்குவது போல் என்பதால், இதன் விளைவாக, நகருயிர்களின் சிந்தனை அதிர்வலைகள் பொதுவாக எந்த அதிர்வெண்களில் (Frequency) வேலை செய்யுமோ, அதே அதிர்வெண்களில் தான் நமது சிந்தனை அதிர்வலைகளும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிர்ந்து கொண்டிருக்கும்.

நகருயிர் சார்ந்த அதிர்வெண்களில் நமது சிந்தனை அதிர்வலைகள் அதிர்ந்து கொண்டிருக்கும் போது, அதே அதிர்வெண்களையே தமது பூர்வீகமாகக் கொண்ட நகருயிர் சார் ஷைத்தானிய ஜின் இனத்தவர்களுக்கு நமது சிந்தனை மொத்தத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் கடினமான காரியமில்லை. ஏனெனில், இரண்டும் ஒரே விதமான அதிர்வெண்களில் அதிர்ந்து கொண்டிருக்கக் கூடிய சக்தி அதிர்வெண்கள்.

இவ்வாறு இருப்பதனால் தான், மிதமிஞ்சிய கோபம் போன்ற சந்தர்ப்பங்களில் நமது Amygdala இயங்கிக் கொண்டிருக்கும் போது, அந்த Amygdala வழியாக ஒரு பொம்மையை இயக்குவதைப் போல் நம்மை இயக்குவது இப்லீஸைச் சார்ந்த நகருயிர் ஜின்களால் சாத்தியப் படுகிறது. இந்த உண்மையைத் தான் ஏற்கனவே நாம் பார்த்த கோபம் பற்றிய ஹதீஸ்கள் உறுதிப் படுத்துகின்றன. இது தான் நபி (ஸல்) அவர்களது உபதேசங்களுக்குள் பொதிந்திருக்கும் உண்மை.

மேற்கூறப்பட்ட விளக்கங்களின் முலம் நான் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டோம். மனிதர்களாகிய நமக்குள் இரண்டு மூளைகள் இருக்கின்றன. ஒன்று: மனித மூளை (Neocortex); மற்றது நகருயிர் மூளை (Amygdala).

இப்போது நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தான். இருக்கும் நகருயிர்களிலேயே கேடுகெட்ட, பலம் பொருந்திய, மிகப்பெரும் நகருயிர்சார் ஜின்னாக இருக்கக் கூடிய இப்லீஸ் என்பவனுக்கு, நமது இரண்டு மூளைகளிலும் எந்த மூளை எப்போதும் விழிப்போடு இருந்தால், அதில் லாபம் இருக்கும்? இதற்கான விடையைச் சிந்தித்தாலே இலுமினாட்டிகளின் பல செயல்திட்டங்களுக்கான காரணம் புரிந்து விடும்.

ஆம், நமது மனித மூளையின் செயற்பாட்டை விட, நமது நகருயிர் மூளையின் செயற்பாடுகளே நம்மை எப்போதும் மிகைத்திருக்க வேண்டும் என்ற ஒரேயோர் அடிப்படைத் தேவையைக் கருத்திற்கொண்டே இன்றைய உலக ஊடக வலையமைப்புக்களின் எல்லா நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப் படுகின்றன.

நகருயிர் சார் சித்தாந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், மிதமிஞ்சிய பயம், கோபம், வெறுப்பு, சுயநலம், காம வெறி ஆகியவற்றையே மனிதர்களது எண்ணவோட்டத்தில் எப்போதும் கலந்திருக்கச் செய்யும் விதமாகவும் இன்றைய ஊடக வலையமைப்புக்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப் பட்டிருப்பதும் நமது நகருயிர் மூளையின் வீரியத்தை மிகைப்படுத்துவதற்காக மட்டுமே. இதை நிதர்சனத்தில் நாம் இன்று பார்க்கலாம்.

இன்று நாம் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, உலகின் எந்தச் செய்தியைப் பார்த்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனக்கலவரம், யுத்தம், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், வறுமை, தொற்று நோய்... என்று பயத்தை மட்டுமே நமது அழ்மனதுக்குள் பதிய வைக்கும் செய்திகளாகவே அனைத்தும் அமைந்திருக்கும். இவற்றின் அடிப்படை நோக்கமே “பயம்” எனும் உணர்வு நமக்குள் எப்போதும் மிகைத்திருப்பதன் மூலம், நமது நகருயிர் மூளையின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

அதே போல் இன்னொரு பக்கம் கல்விசார் நிகழ்ச்சிகள் என்று ஊடகங்களைப் பார்த்தால், அங்கெல்லாம் பாம்பு, பல்லி, முதலை, டைனசோர், ஓனான் என்று ஒரே நகருயிர் மயமாகவே இருக்கும்.

இன்னொரு புறம் வணிகம், தொழில் சார்ந்த நிகழ்ச்சிகளை எடுத்துப் பார்த்தால் “பணம், பணம், பணம்; பணம் இல்லாதவன் பிணம்” / “மற்றவனை அழித்தாவது நான் சம்பாதிப்பது எப்படி?” / “வடிகட்டிய சுயநலவாதியாக இருப்பது எப்படி?” போன்ற கருப்பொருட்களில் “சுயநலம்” எனும் உணர்வை மட்டுமே மிகைப்படுத்துவதன் மூலம் நமது நகருயிர் மூளை திரும்பத்திரும்ப உயிர்ப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

இன்னொரு பக்கம் பொழுது போகட்டுமென்று கொஞ்சம் சினிமா, விளையாட்டு, முகநூல் என்று எதிலாவது நுழைந்தால், முழுக்க முழுக்க முறைகேடான ஆசைகளைத் தூண்டி, காமெ வெறியர்களாகவே நம்மை ஆக்குவதன் மூலம் நமது நகருயிர் மூளையின் வீரியம் இன்னுமின்னும் அதிகரிக்கச் செய்யப் படுகிறது.

மற்றொரு புறம் நமது சிறார்கள் கொஞ்சம் விளையாடட்டுமென்று Video Game போன்ற எதையாவது எடுத்துக் கொடுத்தால், அங்கெல்லாம் இரத்தம், கொலை, கொள்ளை போன்றவற்றைச் செய்வதை அடிப்படையாகக் கொண்டே எல்லா Games உம் வடிவமைக்கப் பட்டுள்ளன. சிறு பிராயத்திலேயே அடி, உதை, வெட்டுக் கொத்து என்று கொலை வெறியைப் பிஞ்சு உள்ளங்களில் ஊட்டி விடுவதன் மூலம் அவர்களது நகருயிர் மூளையின் வீரியம் அங்கும் அதிகரிக்கச் செய்யப் படுகிறது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் தப்பிக்க முடியாதவாறு இப்லீஸின் சதிவலைகள் இன்று நம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. நமது நகருயிர் மூளையின் ஆதிக்கத்தைக் குறியாகக் கொண்டு மட்டுமே இந்தச் சதிவலைகள் அனைத்தும் பிண்ணப் பட்டுள்ளன.

எந்த அளவுக்கு நமது நகருயிர் மூளையின் வீரியம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு நம் மீதான ஆதிக்கம் ஷைத்தானிய ஜின்களுக்கு அதிகரிக்கிறது. இது தான் இந்தச் சதிவலையின் தாத்பர்யம்.

ஆனால், இந்த மொத்தச் சதிவலையிலிருந்தும் நாம் தப்பிப்பதாக இருந்தால், அதற்கு ஒரேயொரு வழி மட்டுமே இருக்கிறது. அது தான் ஈமான்.

எந்த உள்ளட்தில் ஈமான் குடிகொள்ள ஆரம்பிக்கிறதோ, அங்கு நகருயிர் சார் ஷைத்தானிய ஜின்களின் ஆதிக்கங்களுக்கான எல்லா வாசல்களும் மூடப்பட்டு விடுகின்றன; இப்லீஸின் எல்லாச் சதித் திட்டங்களும் அங்கு தோற்று விடுகின்றன.

ஈமான் நிறைந்த ஓர் உள்ளம் அல்லாஹ்வைத் தவிர எந்த சக்திக்கும் பயப்படுவதில்லை. இங்கு “பயம்” எனும் உணர்வால் தூண்டப்படும் நமது நகருயிர் மூளையின் ஆதிக்கம் தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக ஷைத்தானிய ஜின்களின் ஒரு வாசல் அடைக்கப் படுகிறது.

ஈமான் நிறைந்த ஓர் உள்ளத்தில் மிதமிஞ்சிய கோபம், மிதமிஞ்சிய வெறுப்பு போன்ற உணர்வுகள் நிலைகொள்வதில்லை. இங்கு “கோபம் / வெறுப்பு” எனும் உணர்வால் தூண்டப்படும் நமது நகருயிர் மூளையின் ஆதிக்கம் தடுக்கப் படுகிறது. இதன் விளைவாக ஷைத்தானிய ஜின்களின் இன்னொரு வாசல் அடைக்கப் படுகிறது.

ஈமான் நிறைந்த ஓர் உள்ளத்தில் முறைகேடான காம வெறி / கொலை வெறி போன்ற வெறியுணர்வுகள் நிலைகொள்வதில்லை. இங்கு “வெறி” எனும் உணர்வால் தூண்டப்படும் நமது நகருயிர் மூளையின் ஆதிக்கம் தடுக்கப் படுகிறது. இதன் விளைவாக ஷைத்தானிய ஜின்களின் இன்னொரு வாசல் அடைக்கப் படுகிறது.

ஈமான் நிறைந்த ஓர் உள்ளத்தில் சுயநலம் குடிகொள்வதில்லை. தன்னைப் போலவே மற்றவரையும் எண்ணும் பொதுநல மனப்பான்மையே அங்கு நிறைந்திருக்கும். இங்கு “சுயநலம்” எனும் உணர்வால் தூண்டப்படும் நமது நகருயிர் மூளையின் ஆதிக்கம் தடுக்கப் படுகிறது. இதன் விளைவாக ஷைத்தானிய ஜின்களின் இன்னொரு வாசல் அடைக்கப் படுகிறது.

ஈமான் நிறைந்த ஓர் உள்ளத்தில் பதட்டம் / அவசரம் போன்ற அவசரகால உணர்வுகள் நீண்ட நேரம் நீடிப்பதில்லை. பொறுமை / நிதானம் எனும் உணர்வுகள் சகிதம் முஃமின்களின் உள்ளம் அமைதி பெற்றிருக்கும். இங்கு “அவசரம்” எனும் உணர்வால் தூண்டப்படும் நமது நகருயிர் மூளையின் ஆதிக்கம் தடுக்கப் படுகிறது. இதன் விளைவாக ஷைத்தானிய ஜின்களின் இன்னொரு வாசல் அடைக்கப் படுகிறது.

இவ்வாறான பல நல்ல அம்சங்கள் ஈமான் கொண்டோருக்குள் குடிகொள்வதால், அவர்களுக்குள் ஷைத்தானிய ஜின்கள் நுழைவதற்கான எல்லா வாசல்களும் அடைக்கப் படுகின்றன. எனவே, அவர்கள் மீது ஷைத்தானிய ஜின்களின் ஆதிக்கங்கள் பலிப்பதில்லை. இந்த உண்மைகளைத் தான் பின்வரும் ஆதாரங்கள் அழகாக ஊர்ஜிதப் படுத்துகின்றன:

ஆதாரம் 1:
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடனே இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்; அதே நேரம் பதட்டம் மிக்க அவசரக் காரர்களுடன் (Anygdala ஆதிக்கம் அதிகம் உடையோருடன்) ஷைத்தான் இருக்கிறான் என்பதும் தான் இதன் முழு அர்த்தம். இதன் மூலம் மேலே நாம் சுட்டிக்காட்டும் உண்மைகளை அல்லாஹ் இங்கு ஊர்ஜிதப் படுத்தியுள்ளதைப் பார்க்கலாம்.

ஆதாரம் 2:
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை.
(அல்குர்ஆன் 16:99)

முஃமின்கள் விசயத்தில் மேற்கூறப்பட்ட ஷைத்தானிய சதிவலைகள் எதுவுமே பலிப்பதில்லை என்பதையே இங்கு அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஆதாரம் 3:
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்; அவனது உள்ளம் அவனிடம் (இரகசியமாக) என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிவோம்; மேலும், அவனது பிடரி நரம்பை விடவும் நாம் அவனுக்கு மிகவும் சமீபத்திலேயே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் 50:16)

இந்த வசனத்தில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லாமல் மேலே நாம் விளக்கிய உண்மைகளை அல்லாஹ் உறுதிப் படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். பிடரி நரம்பு என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுவது நமது பிடரியில் இருக்கும் Amygdala எனும் நரம்பு முடிச்சுக்களையும் தான்.

அதாவது, Neocortex எனும் நமது மனித மூளையை விடவும் பல மடங்கு வேகமாக நமது பிடறியை அண்டியிருக்கும் நகருயிர் மூளையாகிய Amygdala இயங்கும் போது, அதன் மூலம் நொடிப்பொழுதில் நம்மைக் கவ்விக் கொள்ள ஷைத்தானிய ஜின்கள் உள்ளே நுழைய முயற்சித்தாலும், அதை விடவும் வேகமாக நம்மைக் காக்க வல்ல அல்லாஹ்வின் ஆதிக்கமானது, நமது Amygdala வை விடவும் நெருக்கத்தில் நமக்குள் உதவக் காத்திருக்கிறது எனும் உண்மையையும் சேர்த்துத் தான் இங்கு அல்லாஹ் கூறிக் காட்டுகிறான். முஃமின்கள் விசயத்தில் இந்த வசனத்தின் பொருளைப் பின்வருமாறு கூட எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்:

“முஃமின்களே, உங்களது மனித மூளையை விடவும் நெருக்கத்திலும், வேகம் மிக்கதாகவும் Amygdala எனும் பிடரி நரம்பு இருப்பதற்காகவும், அதன் மூலம் ஷைத்தான் உங்களை நொடிப்பொழுதில் வீழ்த்தி விட வாய்ப்புகள் இருப்பதற்காகவும் நீங்கள் கவலைப் பட வேண்டாம். ஏனெனில், உங்களது Amygdala வை விடவும் சமீபத்தில் உங்களோடு அல்லாஹ்வாகிய நான் இருக்கிறேன். என்னை மட்டும் சார்ந்திருக்கும் எனது அடியார்களை ஷைத்தான் ஆக்கிரமிக்க நான் விட மாட்டேன்.” எனும் ஆறுதல் வார்த்தை கூட இவ்வசனத்தின் அர்த்தத்தில் பொதிந்திக்கிறது.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்


நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 8:





Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..