Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி ?
Posted By:Hajas On 8/23/2017 12:56:01 AM

naltrexone buy online

buy low dose naltrexone

 

ஏன் முகலாயர்களின் மீது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி ?
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

தமது அரசு அதிகாரத் துணையோடு முகலாய அடையாளங்களைத் துடைத்தெறிவதில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து வெற்றி அடைந்து கொண்டே உள்ளனர். 2015 ல் டில்லியில் இருந்த ஔரங்கசீப் சாலையின் பெயர் மாற்றப்பட்டு இந்துத்துவத்துக்கு மிகவும் பிடித்த அப்துல் கலாம் பெயர் சூட்டப்படது. இந்த ஆண்டு ஆஜ்மீரில் உள்ள அக்பர் கோட்டை, உ.பி யில் உள்ள முகல்சாராய் ரயில் நிலையம் ஆகியன தம் பழைய பெயர்களை இழக்கின்றன.முகல்சாராய் நிலையத்திற்கு அந்தப் பெயர் நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதற்கு ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

mughs_062117105329_081417050116.jpg

சென்ற முறை (வாஜ்பேயி ஆட்சியில்) பாடநூல்களில் அவர்கள் செய்த மாற்றங்கள் பெரும் கண்டனத்திற்குள்ளாகி அவர்கள் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த முறை மிகவும் கவனமாக எந்த ஆர்பாட்டமும் இன்றி அதை அவர்கள் செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா பாட நூல்களில் அக்பர் குறித்த பதிவுகள் பெரிய அளவில் நீக்கப்பட்டுள்ளுன.

முகலாய வரலாற்றின் மீது அவர்களுக்கு அப்படி என்ன ஆத்திரம்? முகலாய வரலாற்றை உள்ளது உள்ளபடி சொன்னால் அது “முஸ்லிம்களுக்கு ஆதரவான, இந்துக்களுக்கு எதிரான” ஆட்சி என்கிற அவர்களின் கட்டமைப்பு சிதையும். அதை அவர்களால் பொறுக்க முடியாது. எடுத்துக்காட்டாகச் சில தகவல்கள்:

ஹிந்துக்களில் பலர் முகலாய மன்னர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக அக்பரின் ஆலோசகர்களில் ஒருவரான பீர்பால் ஒரு பார்ப்பனர்.

அதேபோல முகலாயப் பேரரசு விரிவாக்கத்திற்காக எத்தனையோ ரஜபுத்திரர்கள் தீவிரமாகப் போரிட்டுள்ளனர். சமஸ்கிருதக் கவிஞரான ஈஸ்வரதாஸ், அவுரங்கசீப்பின் வரி விதிப்புக் கொள்கையை, "மிகவும் நீதியானது" எனப் பாராட்டியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சமஸ்கிருத அறிவுஜீவிகளான கவீந்திராசார்ய சரஸ்வதி மற்றும் ஜகன்னாத பண்டித ராஜா ஆகிய இருவரும் ஷாஜஹானின் அவையைப் பணப் பரிசுகளுடன் அலங்கரித்தனர். மொகலாய அரச குடும்பத்தினருக்கு கவீந்திரர்தான் “யோக வசிஷ்தம்” முதலான சமஸ்கிருதம் மற்ரும்பல இந்தி நூல்களைக் கற்றுத்தந்தார். பண்டிதராஜாவுக்குச் சில முஸ்லிம் காதலிகளும் இருந்தனர்.

இப்படியான இந்துக்கள் நிச்சயமாக இன்றைய காக்கி அரைக்கால் (சாரி, இப்போது முழுக்கால்) சட்டை அணிந்த சங்கிகளிலிருந்து வேறுபட்டவர்கள். அப்படியான இந்துக்கள் இவர்களைப் பொறுத்த மட்டில் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள். இவர்களைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் நேசிக்கத் தக்கவர்கள் அல்ல: இணைந்து பணி செய்யக் கூடியவர்களோ, கூடி வாழக் கூடியவர்களுமோகூட அல்ல, அல்ல. அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள். கொல்லப்பட வேண்டியவர்கள்.

ஈஸ்வரதாசரோ கவீந்திராசார்யரோ தம்மை “ஹிந்து” எனும் சொல்லால் அடையாளப்படுத்திக் கொண்டவர்களுமல்ல. “ஹிந்து” எனும் இந்தப் பாரசீக – அராபியச் சொல் 17 ம் நூற்றாண்டில் இந்துக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் அடையாளப்படுத்தப் பயன்பட்லொன்று..

முகலாய வரலாறு இன்றைய இந்துத்துவவாதிகளால் மறக்கப்படவும், மறைக்கப்படவும் விரும்பும் இதுபோன்ற இன்னும் பல உண்மைகளையும் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. மகாராணா பிரதாப், சிவாஜி போன்ற மாபெரும் ‘இந்து’ வீரர்கள் எல்லாம் “அகண்ட (இந்து) பாரதத்திற்காகப்” போரிட்டோர்தான்" என்பதும் தவறு. "பாரத நாடு"’ குறித்த இந்தக் கருத்தும் இந்துத்துவ அபத்தங்களில் ஒன்றுதான். கி.பி 1576 ல் ஹால்டிகடி யில் முகலாயப் படைகளுக்குத் தலைமை தாங்கிய மகாராணா பிரதாப் அன்று எதிர்த்துப் போரிட்டது்முஸ்லிம்களை அல்ல. மாறாக இன்னொரு ரஜபுத்திரனைத்தான். அவன்தான் ராஜா மான்சிங். 

haldigati_081417050344.jpg

பிரதாப் அன்று எதிர்த்துப் போரிட்டது் இன்னொரு ரஜபுத்திரன்ராஜா மான்சிங். 

 

இவர் முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் அரசர்களுடன் தன் வாழ்நாள் முழுவதும் நெருக்கமாக இருந்தார்.

சிவாஜியும் கூட முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்களுடன் தன் வாழ்நாள் முழுவதும் இணைந்து பணி செய்தார் என்பதுதான் உண்மை.

மகாராணா பிரதாபோ, சிவாஜியோ என்றைக்கும் “இந்தியா அல்லது பாரதம்” என்கிற கருத்தாக்கத்திற்கோ, இல்லை “இந்துக்கள்” என்று இவர்களால் இன்று அடையாளப்படுத்தப்படும் மக்கள் கூட்டத்துடனோ தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு நின்றவர்கள் இல்லை.

சில நூற்றாண்டுகள் முன்வரை ‘இந்துக்கள்’ என்று இன்று அடையாளப்படுத்தப்படும் மக்கள் திரள் அப்படித் தம்மை உணர்ந்ததே இல்லை.

இன்றைய இந்துத்துவத் தலைவர்கள் தமது இந்துத்துவ அரசியலுக்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பதால் தம்முள் வளர்த்துக் கொள்ளப்படும் அடையாளச் சிக்கலே இன்றைய இவர்களின் முகலாய வெறுப்பின் பின்னணி.

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..