Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
குமரிக்கண்டம்_உண்மையா? - பாகம் : 4
Posted By:Hajas On 7/27/2017 7:01:57 AM

குமரிக்கண்டம்_உண்மையா? - பாகம் : 4

 

போர்வீரன்_அஸ்கர்

குமரிக்கண்டம்_உண்மையா? - பாகம் : 3

 

பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது நிறைவேறினால் தொல் தமிழரின் தொன்மை தெளிவாகும்.

Image may contain: outdoor

5. "Underworld: The mysterious origins of civilization" என்ற நூலில் பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் (Graham Hancock) தன் பட்டறிவை பகிர்ந்துள்ளார். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும் என்றார். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும், அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.

6. இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.

7. மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார். “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது.

8. பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

9. பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.

10. அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார். “1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர்.  கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது. அப்படியென்றால், 11,500 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது.

12. 1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.

15000-14000 ஆண்டு முன்பும்,
12000-11000 ஆண்டு முன்பும், 
8000-7000 ஆண்டு முன்பும்
முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது.

13. துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்?

6) தமிழகத்தில் உள்ள மிக முக்கிய தொல்லிடங்கள்

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. காண்க:
அணைத்து இடங்களையும் விளக்கினால் ஆயுள் முடிந்துவிடும்.  மிக முக்கிய 3 இடங்கள் மட்டும்:

1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்
2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு
3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்

Image may contain: text

1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்
உண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் காலம் கி. மு. 10,000.
பல தொல்லியல் சான்றுகளை ஐரோப்பியர் கொண்டு சென்றுவிட்டனர். முதன் முதலில் இங்கு ஆய்வு நடத்தியவர், ஜெர்மானிய Zuckerman என்பவர். 1876 ல் கண்டுபிடித்த அவர் பலவற்றை தனது ஜெர்மன் நாட்டிற்கு எடுத்து சென்று பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். Louis Lapique என்ற பிரெஞ்சு நாட்டவரும் 1904 ல் ஆய்வு செய்ய வந்து நமது தமிழ் மக்கள் 10,000 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களை பாரீசுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இழப்பதே தமிழன் வரலாறாகிவிட்டது. இன்னும் இருப்பதையாவது பாதுகாப்போம்.

Image may contain: text

ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 8000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள், தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் அப்போதைய கல்வி நிலையைக் காட்டுகிறது.

Image may contain: outdoor and nature

2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு

முதலாம் நூற்றாண்டு வரை ரோமானியர்களோடு கடல் வணிகம் செய்த மிகப்பெரிய துறைமுக நகரம் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. இதையும் ஐரோப்பியர்தான் வந்து கண்டுபிடித்து சொல்லவேண்டி இருந்திருக்கிறது.

Image may contain: sky, outdoor and nature

Excavations at Arikamedu, the once flourishing port town near Pondicherry (now renamed as Puducherry), for the first time provided datable evidences to confirm trade links with Rome that arched back to the first century CE and helped construct a proper chronology of south Indian history.The credit for establishing Arikamedu's significance is often attributed to British archaeologist Mortimer Wheeler and his 1945 round of excavations.
அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்........

 குமரிக்கண்டம்_உண்மையா? - பாகம் : 5




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..