Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு
Posted By:Hajas On 7/22/2017 9:09:02 AM

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

பாகம் :10 முதல் நகரம்

பாகம் : 11 =பயண முடிவு

#ரா_பிரபு


Image may contain: outdoor
( பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம் )

கி.பி.800 இல் சைனாவில் கண்டறிய பட்ட வெடி துகள் தத்தெடுக்க பட்டு மேற்கு நோக்கி நகர்ந்தது . பீரங்கிகள் சுட பயன்பட்டது. இந்த பவுடரை ஐரோப்பியர்கள் கொஞ்சம் மாற்றம் செய்தார்கள் . இப்போது இவைகள் துப்பாக்கிகளை வெடித்து கொண்டிருந்தது.

500 ஆண்டுகளுக்கு முன்:
இப்போது கி.பி 1492 இப்போது மொத்த உலக மக்கள் தொகை 40 கோடி பேர். அமெரிக்க பகுதிகளில் மாயன் இனமும் இன்கா இனமும் வளர்ந்து கொண்டு இருந்தது. இக்காலகட்டத்தில் தான் கொலம்பஸ் இந்தியா என்று நினைத்து அமெரிக்காவை வந்தடைந்தான். அங்கே இருந்த பூர்வ குடிகளுக்கு அந்த வருகை நல்லதாக அமைந்திருக்க வில்லை.

புதிய கண்டதை கண்டுபிடிக்க போன கோலம்பஸ் அங்கே இருந்த பூர்வ குடிகளை மனிதாபிமானம் இல்லாமல் அடிமையாக்கி வேலை வாங்கினான் ஒத்துவராதவர்கள் காலை வெட்டினான் .. கொன்றான். தீக்கு இறையாக்கினான்... நாய்களுக்கு வெட்டி போட்டான்...பெண்களை சிறுவர்களை கற்பழித்தான்... கூட்டு தற்கொலை செய்வித்தான்..பூர்வகுடி ஆதிவாசிகளை மொத்தமாக இன படுகொலை செய்தான். ("கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி" என்ற எனது கட்டுரையில் இதை குறித்து விரிவாக சொல்லி இருக்கிறேன்) ஆனாலும் வரலாறு அவனை ஆக சிறந்த கண்டுபிடிப்பாளன் என புகழ்ந்தது. (நாம் ஒரு போதும் அதை செய்ய போவதில்லை.. ) ஆனால் அவன் வருகை ஒரு விளைவை ஏற்படுத்தி இருந்தது .ஐஸ் ஏஜ் காலத்தில் கண்டங்களாக பிரிக்க பட்ட உலகங்கள் இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்தது.

300 ஆண்டுகள் கழித்து உலக மக்கள் தொகை இரண்டு மடங்காக மாறி இருந்தது. இப்போது மக்கள் தொகை 90 கோடி .கண்டங்கள் ஒன்றிணைந்த பின் வரலாறு ஒரு போதும் முன் போல இருக்க வில்லை .கோலம்பஸ்க்கு பின் அமெரிக்க பூர்வகுடிகள் ஐரோப்பிய துபாக்கிகளுக்கும் கத்தி களுக்கும் பலியாயின.

300 ஆண்டுகளுக்கு முன்:

1700 களில் மனிதன் பூமியில் புதையுண்ட நிலக்கரியை கண்டுகொண்டான். அவற்றை தோண்ட சுரங்கம் அமைத்தான். அந்த சுரங்கத்தில் வெளிபட்ட நீரை வெளியேற்றி இறைக்க புதிய தொழில் நுட்பம் தேவை பட்டது எனவே நீராவியை கொண்டு இயங்கும் ஒரு பம்பிங் சாதனத்தை பயன்படுத்தினான்.
அந்த சாதனம் ஒரு புரட்சிகரமான வரலாற்றை மாற்றும் சாதனம். பிற்காலத்தில் பெரும் தொழில் புரட்சிக்கு அது வித்திட்டது.

ரயில்கள் கண்டுபிடிக்க முன்னோடியாக திகழ்ந்தது.

இன்ஜின்கள் கண்டுபிடிக்க பட்டது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.1870 களில் மோட்டார் இன்ஜின்கள் கண்டுபிடிக்க பட்டு ஆட்டோ மொபைல் வளர்ச்சி பெற்றது.
எரிபொருள் புதிய வாகனங்கள்.. இயந்திரங்கள் கண்டுபிடிக்க எதுவாகின. தந்திகள் தொலைபேசிகள் மின்னல் வேகத்தில் தொலை தொடர்பை மாற்றின.
மின்சாரத்தின் உதவியோடு இரவு பகலாக மாறியது.

1800 களில் ஐரோப்பியர்கள் உலகத்தில் 35 சத இடத்தை பிடித்து இருந்தார்கள். ஆனால் 1900 களில் அவர்கள் 85 சதம் உலகை கைப்பற்றி விட்டு இருந்தார்கள்.

உலகமெங்கும் உள்ள வளங்கள் நமக்கே சொந்தம் என்ற சித்தாந்தம் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் உலகமெங்கும் போய் அநாட்டினரை அடிமையாக்கி வளங்களை கொள்ளை அடித்தனர். கொள்ளை அடிக்க பட்ட பணத்தை வைத்து தொழில் புரட்சி செய்தனர்.
ஒரு கட்டத்தில் உலகை சுரண்டுவதில் ஐரொப்பிய ஏகாதி பத்திய நாடுகள் தங்களுக்குளாக அடித்து கொண்டன. விளைவாக 1914- 18 மற்றும் 1939- 1945 வருடங்களிலுக்கு இடையே அவைகள் உலக போராக வெடித்தது. 2000 ஆண்டுகால மனித குல வரலாற்றில் கொல்ல பட்ட மொத்த மனிதர்களை விட 3 மடங்கு அதிக எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் இந்த உலக போரின் 10 வருடங்களுக்குள் கொல்ல பட்டன.

நண்பர்களே கட்டுரை நிறைவு பகுதிக்கு வந்து விட்டோம்.
இந்த தொடரில் நான் குறிப்பிட்ட கோட்பாடுகள் தவிர இதே பூமியின் பூர்வ கதைக்கு நிறைய விதமான மாற்று கோட்பாடுகள் உள்ளது. உதாரணமாக ஆப்ரிக்காவில் அல்ல முதல் மனிதன் தோன்றியது ஆசியாவில் என்று புது ஆய்வு சொல்வதாக தகவல்.. கண்டங்கள் பற்றி சொல்லும் போது அழிந்து போன லெமூரியா தான் மூத்த கண்டம் என்ற தகவல் உள்ளது (லெமூரியா பற்றி தனி ஆராய்ச்சி கட்டுரை போட எண்ணம் இருப்பதால் இங்கு அதை தொட வில்லை) இதில் எதை ஏற்பது எதை நம்புவது என்று வரும் போது இக்கட்டுரையில் சொல்ல பட்ட கோட்பாடுகள் இன்று உலகம் ஏற்று கொண்டுள்ள கோட்பாடுகளை மைய்யமாக வைத்தே சொல்லி இருக்கின்றேன்.

நண்பர்களே நமது கால இயந்திரத்தின் பூமி பயணம் நிறைவுக்கு வரும் நேரம் வந்து விட்டது.460 கோடி ஆண்டுகால நீண்ட பயணத்தை அது முடித்து கொண்டு வந்திருப்பதால் எரிபொருளும் தீர்ந்த நிலையில் வாகனத்திற்கு கொஞ்சம் ஒய்வு தேவை.

0 வருடங்களுக்கு முன் : 

இன்று உலகத்தின் மக்கள் தொகை 700 கோடி . 10000 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆற்றலை விட 15000 மடங்கு அதிக ஆற்றலை இன்று நாம் பயன்படுத்துகிறோம். இணையதளத்தில் இனைந்து இன்று உலகம் கைப்பிடியில் உள்ளது. வானத்தின் தூரத்தை கடந்து நட்சத்திர ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

இக்கட்டுரையில் நமது பயணம்..1400 கோடி ஆண்டுகளுக்கு முன் பிக்பாங்கில் தொடங்கி முதல் காலக்சியில் முதல் சூரியன் வெடித்து சூப்பர்நோவா வாகி புதிய நட்சத்திரங்கள் ,.நமது சூரியன் ..கூடவே பூமி தோன்றி. அந்த வெப்ப பூமி படிபடியாக வெப்பம் குறைந்து சுழலும் வேகம் குறைந்து. உயிரியல் சூப் மூலம் உயிர்கள் உண்டாகி முதல் செல் பரிணாமம் கொண்டு பல் உயிராகி. அவை நீரை விட்டு நிலத்தில் சென்று ஊர்வன வாகி டைனோசாராகி ... விண்கல் மோதி அழிந்து பின் பாலூட்டிகளாக தப்பி பரிணாமம் கொண்டு இரண்டு கால்களில் நடக்க கற்றுக்கொண்டு நிமிர்ந்து நின்று. மனிதனாகி நாகரிகம் கொண்டு முதல் ஊர் அமைத்து . உலகமெல்லாம் வர்த்தகம் கொண்டு கண்டங்களில் தணிமை பட்டு வளர்ந்து. உலக நாடுகளின் மேல் ஆசை பட்டு உலக போரை சந்தித்து ..தொழில் புரட்சி விஞ்ஞான வளர்ச்சி கொண்டு திகழும் இன்றைய தேதி வரை என்னுடன் இனைந்து நீங்கள் கால பயணம் செய்ததற்கு நன்றி. பயணத்தை நிச்சயம் ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

படிப்படியாக விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது அதை வளர்த்த அறிஞர்கள் யார் என்பதை பற்றியெல்லாம் தனி கட்டுரையாக தான் போட வேண்டும் என்பதால். இத்தொடரில் அதை தொட வில்லை.

அடுத்து வேறு பயணத்தில் சந்திக்கலாம்.

இத்தொடர் கட்டுரைக்கு 'மூலம் 'ஆக இருந்த ஹிஸ்ட்ரி டாகுமென்டரிக்கும்... முன்னோடியாக இருந்த மதன் அவர்களில் 'கிமு -கி பி " என்ற புத்தகதிற்கும் சிறப்பு நன்றிகள்.

-உலக சுழற்சி முற்றும்..........

அன்பு நண்பன் ரா.பிரபு.

பின் குறிப்பு :

கட்டுரை உங்களுக்கு பிடித்திருகிறது என்றால்.... அதன் pdf வேண்டும் என்றால்... உங்களுக்காக இதோ pdf லிங்க்..

https://drive.google.com/file/d/0BwTaukbGVq-_SmRWUFpTUWQxNTg/view?usp=drivesdk
 



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..