Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம்
Posted By:Hajas On 7/22/2017 6:14:38 AM

citalopram and alcohol use

citalopram and alcohol nhs francescocutolo.it

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

பாகம் : 9 = ஐஸ் ஏஜ் விளையாட்டு 

பாகம் :10 முதல் நகரம்

#ரா_பிரபு

 

(பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்)

ஆப்ரிக்காவில் இருந்து ஆயிர கணக்கான ஆண்டுகள் நடந்து பூமியில் பல்வேறு முனைகளுக்கு சென்று சேர்ந்த மனிதன் 'ஹப்பாடா கால் வலிக்குது ' என ஒரே இடத்தில் நிற்க தொடங்கினான்.

5000 ஆண்டுகளுக்கு முன் முதல் நகரத்தை நிர்ணயித்தவர்கள் சுமேரியர்கள் . அதாவது மேசபைடோமியா அதாவது இன்றைய ஈராக். இங்கு யூக்ரடிஸ் டைக்ரிஸ் என்று இரட்டை நதிகள் ஓடி வளம் கொழிக்க வைத்திருந்தது. நதிகளை வரலாறு நாகரிக தொட்டில்கள் என்று அழைக்கிறது... சுமேரிய குழந்தையை பொறுத்த வரை அதற்க்கு யூப்ரட்டீஸ் டைக்ரிஸ் என்ற இரட்டை தொட்டில்கள். அதனால் அந்த குழந்தை மற்ற குழந்தையை விட வேகமாக செழிப்பாக வளர்ந்தது.

Image may contain: outdoor

 

சுமேரியர்கள் தமிழர்களே என்று சொல்லுபர்கள் இருக்கிறார்கள் . அது உண்மையோ பொய்யோ ஆனால் அவர்கள் தங்கள் ஊர்க்கு என்ன பெயர் வைத்திருந்தார்கள் தெரியுமா' ஊர்க் 'இந்த ஊர்க் தான் உலகின் முதல் ஊர். ஊர்க்கில் 50000 பேர் ஒரு சதுர கிலோ மீட்டர் பறப்பளவிற்குள் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் அன்றைய தானியம் கோதுமை மற்றும் பார்லி. அவற்றை அவர்கள் தங்கள் ஊர்க் ஊரில் வந்து பண்ட மாற்றங்கள் செய்தார்கள். அவற்றை கணக்கு வைத்து கொள்ள குறிஈடுகளை வைத்தார்கள். அவற்றை பாதுகாக்க வீரர்கள் வேணும் என்று நினைத்த போது தான் முதல் ராணுவம் உண்டானது. அந்த ராணுவத்தை நிர்வகிக்க ஒரு நிர்வாகம்....அரசாங்கம் வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். பிறகு உலகின் பல்வேறு நாகரிகங்கள் ஒன்றிணையவும். 'தன்னை போல் ஒருவன் 'களை தேடி சென்றார்கள் . அதன் விளைவாக நாகரிகம் இன்னும் மேம்பட பரவ வழி வகை செய்யும் காரியம் ஒன்றை அவர்கள் முதல் முதலாக செய்தார்கள் அதன் பெயர் "வியாபாரம்."

பண்ட மாற்ற வியாபாரத்தை உலகமெங்கும் செய்ய அவர்கள் நம்பி இருந்த போக்குவரத்து.. கழுதை. தங்கள் கழுதைகளில் சரக்குகளை ஏற்றி கொண்டு அவர்கள் சென்ற பாதை மிக நீளமானவை. நாடுகளை இணைக்க கூடியவை. அவர்களின் இந்த நடவடிக்கை வியாபார பரிமாறல்களை தாண்டி தங்கள் சிந்தனை பரிமாறல் கருத்து பரிமாறல் கலாச்சார பரிமாறல்களுக்கு அடிகோலியது. இந்நாள் வரை நாம் அண்டைநாடுகளுடன் வைத்திருக்கும் வர்த்தக தொடர்புக்கு முன்னோடிகள் அவர்கள் தான். அவர்கள் அன்று செய்து கொண்டிருந்தது உலகமயமாக்கல் என்பதை அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.

 

No automatic alt text available.

கால இயந்திரம் இப்போது நிற்கும் இடம் 4000 ஆண்டுகளுக்கு முன்:

இந்த கால கட்டத்தில் பிற்காலத்தில் மனித இனம் பார்த்து வியந்து போக போகும் பல வேலைகளை செய்தான் மனிதன். உதாரணமாக மர்ம கல் அமைப்பான stone henge இந்த காலத்தில் தான் உருவாக்க பட்டது. பிரமிடுகள் கட்ட பட்டதும் இக்காலகட்டதிற்கு அருகாமையில் தான்.

சுமேரியர்களின் சில கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றில் பாதிப்பை ஏற்படுத்தின. உதாரணமாக அவர்கள் எண்ணிக்கையை 12 இல் தான் குறிப்பிட்டார்கள் அதனால் தான் பகல் இரவுகளை 12 மணிநேரம் ஆக பிரிக்கவும் பிறகு மணியை 60 நிமிடம் நிமிடத்தை 60 நொடியாகவும் பிரித்து வைத்து பயன்படுத்தினோம். அவர்கள் கண்டுபிடித்த சக்கரங்கள் குதிரைகளை இணைத்து வண்டி செய்யவும் அதை பயன்படுத்தி வியாபாரம் முதல் போர் வரை பயன்படுத்தி கொள்ளவும் வழி செய்தது.

Image may contain: nature and outdoor

3200 ஆண்டுகளுக்கு முன்:

உலோகங்களை பல வகையில் பயன்படுத்த தொடங்கினார்கள் குறிப்பாக இரும்பை கண்டு கொண்டார்கள். இது ஆயுதங்களை செய்ய வாகனங்களை செய்ய என்று பெரிய அளவில் பயன்பட்டது.

2600 ஆண்டுகளுக்கு முன்:

முதன் முதலாக குதிரைகளை கொண்டு பொர்களத்தில் ஈடுபட்டார்கள் அவர்கள் கையில் இரும்பு ஆயுதங்கள் பளபளதன. குதிரை மற்றும் இரும்பு ஆயுதம் என்ற இந்த கலவை பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் உருவாக அழிய காரணமாக இருந்தன. பெர்சியா..செர்பிய..சைனா.. அலெக்சாண்டர்.... ரோம்... போன்ற சாம்ராஜ்யங்கள் எழுச்சி உற்றன.

நாடுகளும் ராஜ்ஜியங்களும் வளர வளர கூடவே கடவுள்களும் மதங்களும் வளர்ந்து வந்தன. யூத மதம் , பிறகு கிறிஸ்துவ மதம் ,இஸ்லாம் புத்த மதம் போன்றவை போன்றவை வளர்ந்தன. இமய மலையால் தனித்து துண்டிக்க பட்டிருந்த சைனா அப்படி இப்படி வழியை கண்டுபிடித்து கொண்டு தாமதமாக வந்து உலக வர்த்தகத்தில் தானும் இனைந்து கொண்டது.

2000 ஆண்டுகளுக்கு முன்:
உலக வர்த்தக போக்குவரத்து வழித்தடங்கள் சிறப்பாக இயங்கின இந்த சமயத்தில் இனொன்றும் நடந்தது
உலகமயமாக்கல் பல கலாச்சாரத்தை பண்டங்களை மட்டும் பரிமாற வில்லை நோய் களையும் படிமாறி கொண்டது ஆனால் இதே வழித்தடங்கள் மததையும் பரிமாறி கொண்டது. கிறிஸ்துவ மதமும் 300 ஆண்டுகளுக்கு பின் இஸ்லாம் மதமும் தோன்றி உலகமெங்கும் பரவ தொடங்கின.

No automatic alt text available.

வர்த்தகத்தில் அரபுநாடுகள் சக்கை போடு போட்டது அதற்க்கு காரணம் அவர்கள் எல்லா நாட்டிற்கும் மைய்யமாக அமைந்திருப்பது தான். இன்னோரு முக்கிய காரணம்... ஒட்டகங்கள் . அவர்கள் பயன்படுத்திய ஒட்டகங்கள் சுமேரியனின் கழுதை போக்குவரத்தை விட 4 மடங்கு அதிக பொருட்களையும் இருமடங்கு அதிக வேகத்தையும் கொடுத்திருந்தது. அதனால் அவர்கள் வர்த்தகம் ஆப்ரிக்கா ,ரோம், இந்தியா,ஐரோப்பா என்று பரவியது.

நமது கால இயந்திரம் இப்போது கொஞ்சம் முன்னோக்கி பாய்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கிறது.

கி.பி 800 இல் ஒரு நாள் ....

இடம் சைனா...
அந்த விஞ்ஞாணி ஏதோ ஒன்றை ஆராய்ந்து கொண்டிருந்தார் .என்ன வென்று அருகே சென்று பார்த்தால் அவர் கார்பனையும் சல்பரையும் ஒன்றினைத்து கொண்டு இருந்தது தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்கு பின் அது வெடித்தது. அந்த தூள்கள் ... பிற்காலத்தில் 'கண் பவுடர் ' என்று அழைக்க பட்டன .பின்னால் வரலாற்றை வேறு விதமாக மாற்ற போகும் சக்தி அந்த பவுடர் களுக்கு இருந்தது அப்போதைக்கு அந்த விஞ்ஞானினுக்கே தெரிந்து இருக்க வில்லை. துப்பாக்கிகளுடன் கூடிய (கட்டுரையின் இறுதி பகுதி)வரலாறு இனி அடுத்த பாகத்தில்

-பூமி இன்னும் ஒரு முறை சுழலும்.........

பாகம் : 11 பயண முடிவு




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..